சூரியசந்திர நாட்காட்டி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சூரியசந்திர நாட்காட்டிகள் (Lunisolar calendars) சந்திர நாட்காட்டி போன்று மாதங்கள் சந்திரனின் பிறைகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தாலும் ஓர் கூடுதலான இடைச்செருகல் மாதத்தை கொண்டு சூரிய ஆண்டுடன் ஒருங்கிணைக்கின்றன.
சீன, எபிரேய, இந்து நாட்காட்டிகள் சூரியசந்திர நாட்காட்டிகளாகும்.சப்பானிய நாட்காட்டி 1873 வரை சூரியசந்திர நாட்காட்டியாக இருந்தது.சீன,எபிரேய நாட்காட்டிகள் காலநிலை ஆண்டு|காலநிலை ஆண்டுடன் ஒருங்கிணைவதால் காலங்களை அவை பின்தொடர்கின்றன.புத்த,இந்து நாட்காட்டிகள் விண்மீன் ஆண்டு|விண்மீன் ஆண்டுடன் ஒருங்கிணைவதால் அவை முழுநிலவின்போதுள்ள விண்மீன் மண்டலங்களை பின்பற்றுகின்றன.திபெத்திய நாட்காட்டி சீன மற்றும் இந்திய நாட்காட்டிகளின் தாக்கத்தை உள்வாங்கியுள்ளது.செருமனியிலும் கிருத்துவ மதமாற்றத்திற்கு முன்னர் சூரியசந்திர நாட்காட்டியை பயன்படுத்தி வந்தனர்.
இசுலாமிய நாட்காட்டி ஓர் சந்திர நாட்காட்டியாகும், சூரியசந்திர நாட்காட்டி யல்ல. யூலியின் நாட்காட்டி மற்றும் கிரெகொரியின் நாட்காட்டி சூரிய நாட்காட்டிகளாகும். இவற்றில் சந்திரனின் பிறைநிலைகள் குறிக்கப்படுவதில்லை. ஆனால் கிருத்துவ பண்டிகையான உயிர்த்த ஞாயிறு நாளை சூரியசந்திர நாட்காட்டியை ஒட்டியே தீர்மானிக்கிறார்கள்.
Remove ads
வெளியிணைப்புகள்
- சீன சந்திர நாட்காட்டி மென்பொருள் பரணிடப்பட்டது 2018-08-31 at the வந்தவழி இயந்திரம்
- சூரியசந்திர நாட்காட்டி
- நாட்காட்டி ஆய்வுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads