சீ-ஹல்க் (தொலைக்காட்சித் தொடர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சீ-ஹல்க் (ஆங்கிலம்: She-Hulk) என்பது 2022 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு நகைச்சுவை சட்ட மீநாயகன் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடர் சீ-ஹல்க் என்ற மார்வெல் காமிக்சு கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு டிஸ்னி+[2][3] என்ற ஓடிடி தளத்திற்காக ஜெசிகா காவ் என்பவர் உருவாக்கியுள்ளார்.
இந்த தொடரை மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. அத்துடன் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் தொடர்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறது.
நடிகை டாட்டியானா மஸ்லானி[4] என்பவர் மார்க் இசுபெக்டர் மற்றும் சீ-ஹல்க் ஆகிய கதாபாத்திரத்தில் நடிக்க, இவருடன் இணைந்து மார்க் ருஃப்பால்லோ,[5][6] டிம் ரோத், இஞ்சி கோன்சாகா,[7] ரெனீ எலிஸ் கோல்ட்ஸ்பெர்ரி, ஜமீலா ஜெமீல் போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்த தொடர் பற்றிய தகவல் ஆகஸ்ட் 2019 இல் அறிவிக்கப்பட்டது, நவம்பரில் ஜெசிகா காவ் பணியமர்த்தப்பட்டார். பின்னர் கேட் கொய்ரோ செப்டம்பர் 2020 இல் பல அத்தியாயங்களை இயக்க இணைந்தார், மேலும் நடிகை டாட்டியானா மஸ்லானி என்பவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து டிசம்பரில் நடிகர்களான மார்க் ருஃப்பால்லோ மற்றும் டிம் ரோத் ஆகியோர் இணைந்தனர், மேலும் இயக்குனரான அனு வாலியா என்பவர் ஒருத்தி செய்யப்பட்டார். ஏப்ரல் 2021 நடுப்பகுதியில் லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் அட்லான்டாவில் படப்பிடிப்பு தொடங்கி ஆகஸ்ட் இறுதி வரை நீடித்தது.[8]
இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் நான்காம் கட்டத்தின் ஒரு பகுதி தொடராக 18 ஆகஸ்ட் 2022 முதல் 13 அக்டோபர் வரை ஒளிபரப்பாகி, ஒன்பது அத்தியாயங்களுடன் நிறைவுபெற்றது. இந்தத் தொடர் பொதுவாக விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, குறிப்பாக டாட்டியானா மஸ்லானின் நடிப்பிற்காக பாராட்டப்பட்டது, இருப்பினும் தொடரின் விசுவல் காட்சிகளுக்கு எதிர்மறையான விமர்சனம் பெற்றது.
Remove ads
மேற்கோள்கள்
வெளிப்புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads