தேசிய நெடுஞ்சாலை 44 (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

தேசிய நெடுஞ்சாலை 44 (இந்தியா)
Remove ads

தேசிய நெடுஞ்சாலை 44, இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரையும், தமிழ் நாட்டின் கன்னியாகுமரி நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். இது இந்தியாவின் மிக நீண்ட வடக்கு-தெற்கு இணைப்புச் சாலை ஆகும். இது ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் வழியாக செல்கிறது.[1] இந்த நெடுஞ்சாலையானது மத்திய பொது வேலைகள் திணைக்களத்தால் பராமரிக்கப்படுகிறது.

விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...

இந்த நெடுஞ்சாலை முன்பிருந்த ஏழு வெவ்வேறு நெடுஞ்சாலைகளை முழுமையாகவோ பகுதியாகவோ இணைத்ததன் மூலம் உருவாக்கப்பட்டது. சம்மு காசுமீரின் ஸ்ரீநகரில் இருந்து தேசிய நெடுஞ்சாலை 1ஏ, பஞ்சாப்-அரியானாவில் இருந்து டெல்லி வரையான தேசிய நெடுஞ்சாலை 1, டெல்லியில் இருந்து ஆக்ரா வரையான தேசிய நெடுஞ்சாலை 2இன் பகுதி, ஆக்ரா-பம்பாய் நெடுஞ்சாலை என அறியப்படும் தேசிய நெடுஞ்சாலை 3இன் ஆக்ரா முதல் குவாலியர் வரையான பகுதி, முன்னைய தேசிய நெடுஞ்சாலை 75, ஜான்சி வரையான முன்னைய தேசிய நெடுஞ்சாலை 26 மற்றும் நாக்பூர், ஆதிலாபாத், நிர்மல், ஐதராபாத், கர்நூல், அனந்தபூர், சிக்கபள்ளாபூர், பெங்களூர், ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓமலூர் , சேலம், நாமக்கல், வேலூர், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ஊடாகக் கன்னியாகுமரி வரை செல்லும் முன்னைய தேசிய நெடுஞ்சாலை 7 என்பவற்றை இணைத்து உருவாக்கப்பட்டது.

Remove ads

வழித்தடம்

இந்த நெடுஞ்சாலை ஸ்ரீநகரில் இருந்து ஆரம்பிக்கிறது. இது இந்தியாவின் பல முக்கிய நகரங்களை இணைக்கிறது. ஸ்ரீநகர், ஜம்மு, பதன்கோட், ஜலந்தர், லூதியானா, அம்பாலா, கர்ணால், பானிபட், சோனிபட், டெல்லி, மதுரா, ஆக்ரா, குவாலியர், ஜான்சி, ஜபல்பூர், நாக்பூர், அடிலாபாத், நிர்மல், ஆர்மூர், கமரெட்டி, மெட்ச்சல், ஐதராபாத், ஜட்செர்லா, மகபூப்நகர், காட்வால், கர்நூல், அனந்தபூர், சிக்கபள்ளாபூர், பெங்களூர், ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓமலூர் , சேலம், நாமக்கல், வேலூர், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நகரங்களை இணைக்கும் சாலையாக இது உள்ளது.

தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டத்தின் வடக்கு-தெற்கு பெருந்தடவழிப் பகுதியை இது உள்ளடக்குகின்றது. உத்தியோகபூர்வமாக ஸ்ரீநகரில் இருந்து கன்னியாகுமரி வரையான இதன் நீளம் 3,745 km (2,327 mi) ஆகும். பிரதமர் நரேந்திர மோடியால் 2017 ஏப்ரல் 7இல் திறந்து வைக்கப்பட்ட இந்தியாவின் மிக நீண்ட சுரங்கவழிச் சாலையான செனானி-நஷ்ரி சுரங்கச்சாலை[2] இதன் ஒரு பகுதி ஆகும்.

மாநிலங்களும் வழித்தட நீளங்களும்

Remove ads

பெங்களூரு - ஓசூர் சாலை

இந்த நெடுஞ்சாலையின் ஒரு பகுதியான பெங்களூரு-ஓசூர் சாலை, கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவையும் தமிழ்நாட்டின் கர்நாடக எல்லை நகரமான ஓசூரையும் இணைக்கின்றது. இது 4 முதல் 6 வழிச்சாலையாக உள்ளதுடன் போக்குவரத்து அதிகமான இடங்களில் இரு மருங்கிலும் சேவை வழித்தடங்களையும் கொண்டுள்ளது. தகவல் தொழில்நுட்பப் பூங்காவான இலத்திரனியல் நகரம் உட்படப் பல கைத்தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தச் சாலையில் அமைந்துள்ளன. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பொம்மனகள்ளிக்கும் இலத்திரனியல் நகர் பூங்காவுக்கும் இடையே சுமார் 10 கிலோமீட்டர் நீளமான மேம்பாலப் பாதையை 2010இல் அமைத்தது.

Remove ads

விரிவாக்கம்

  • 11 மார்ச் 2024 அன்று, தேசிய நெடுஞ்சாலை-44 இன் தர்மபுரி - சேலம் பிரிவில் உள்ள தோப்பூர் கணவாய் சீரமைப்பை மேம்படுத்தும் பணிகள் உட்பட, மாநிலத்தில் ஐந்து திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினார். இந்தப் பணி 905 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது, மேலும் 4 கி.மீ நீளமுள்ள உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலை கட்டுமானமானது தற்போதுள்ள சாலையின் மீது ஏற்படுத்தப்படுகின்றது, இது அடிக்கடி விபத்து நடக்கும் தோப்பூர் கனவாய் பகுதியில் பாதுகாப்பான பயணத்தை எளிதாக்கும்.[3][4][5]

குறிப்புகள்

இந்த நெடுஞ்சாலையில் மத்தியப்பிரதேசத்தின் லக்நாதோன் நகரில் இருந்து கன்னியாகுமரி வரையான 1910 கிலோமீட்டர் நீளமான பகுதி [[தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம்|தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டத்தின் வடக்கு-தெற்கு பெருந்தடவழிப் பகுதிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. [6]

பெங்களூரு முதல் கிருஷ்ணகிரி வரையான 81 கிலோமீட்டர் பகுதி தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.[6]

வெளிப்புற இணைப்புகள்

மேற்கோள்கள்

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads