சுனெபோட்டோ
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுனெபோட்டோ (Zünheboto), வடகிழக்கு இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் உள்ள சுனெபோட்டா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். இந்நகரம், மாநிலத் தலைநகரான கோகிமாவிற்கு வடகிழக்கில் 137 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கிழக்கு இமயமலைத் தொடரில் அமைந்த சுனெபோட்ட நகரம், கடல் மட்டத்திலிருந்து 1,852 மீட்டர் (6,076 அடி) உயரத்தில் உள்ளது. இந்நகரத்தில் சூமி மொழி பேசும் சூமி கிறிஸ்தவ பழங்குடிகள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.[1]இந்நகரத்திற்கு அருகே நாகாலாந்து பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
Remove ads
மக்கள் தொகை பரம்பல்
2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13 வார்டுகளும், 3,974 குடியிருப்புகள் கொண்ட சுனெபோட்டோ நகரத்தின் மக்கள் தொகை 22,633 ஆகும். அதில் 11,71 ஆண்கள் மற்றும் 10,918 பெண்கள் உள்ளனர். இதன் இதன் மக்கள் தொகையில் பட்டியல் பழங்குடிகள் 20,378 உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 932 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 93.8% உள்ளது. இந்து சமயத்தினர் 6.93%, இசுலாமியர் 1.48%, கிறித்தவர்கள் 91.15% மற்றும் பிற சமயத்தினர் 0.43% வீதம் உள்ளனர்.[2]
Remove ads
கல்வி
- நாகாலாந்து பல்கலைக்கழகம்
- சுனெபோட்டா அரசுக் கல்லூரி
- நிதோ தொழில்நுட்ப கல்லூரி
- ஆண்டர்சன் இறையியல் கல்லூரி
- இம்மானுவேல் மேனிலைப் பள்ளி
- ஈடன் கார்டன் பள்ளி
- கார்னர் ஸ்டோன் பள்ளி
- அரசு மேனிலைப் பள்ளி
தட்ப வெப்பம்
இந்நகரம் ஈரப்பதமான துணை வெப்பமண்டல காலநிலை கொண்டது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads