நாகாலாந்து பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாகாலாந்து பல்கலைக்கழகம் (Nagaland University) என்பது 1989ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் நாகாலாந்து மாநிலத்தில் நிறுவப்பட்ட மத்திய பல்கலைக்கழகம் ஆகும்.[2][3][4][5] இது நகர் லுமாமியில் சுன்கெமோடாவில் தலைமையகத்தினையும் இரு நிரந்தர வளாகங்களை கோகிமா (மெரிமா) மற்றும் மெட்சிபெமாவில் கொண்டுள்ளது . மேலும் திமாப்பூரில் தற்காலிக வளாகம் ஒன்றும் உள்ளது, இந்த தற்காலிக வளாகத்தில் தொழில்நுட்ப இளநிலை படிப்பிற்கான வகுப்புகள் நடைபெறுகின்றன. இப்பல்கலைக்கழத்தில் 68 கல்லூரிகள் இணையப்பெற்றுள்ளன. இவற்றில் சுமார் 24,000 மாணவர்கள் படிக்கின்றனர்.
Remove ads
அமைப்பு மற்றும் நிர்வாகம்
மேலாண்மை கல்வி
இப்பல்கலைக்கழகம் முதுநிலை வணிக நிர்வாகவியல் (எம்.பி.ஏ.) மேலாண்மைப் பட்டத்தை வழங்குகிறது. மேலாண்மைத் துறையானது மேலாண்மை பள்ளி என அறியப்படுகிறது. இது நாகாலாந்தின் கோகிமாவில் (நு கோஹிமா வளாகம்) அமைந்துள்ளது. இத்துறையில் மேலாண்மை ஆய்வு 29 அக்டோபர் 2007-ல் தொடங்கப்பட்டது, மேலும் முதுநிலை மேலாண்மை மாணவர் சேர்க்கை 2008 கல்வியாண்டு முதல் நடைபெற்றுவருகறது.
எம்பிஏ பாடத்திற்கான மாணவர் சேர்க்கை, தேசிய அளவிலான நுழைவுத் தேர்வான மேட் மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுகிறது.[சான்று தேவை]
பொறியியல் தொழில்நுட்பம்
நாகாலாந்து பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பள்ளி 2007-ல் நிறுவப்பட்டது. கோகிமாவில் உள்ள மெரிமா வளாகத்தில் இப்பள்ளி செயல்படுகிறது.
இது நாகாலாந்து மாநிலத்தின் முதல் பொறியியல் பள்ளி மற்றும் அதிநவீன உள்கட்டமைப்பைக் கொண்டதாகும்.
இங்கு 4 ஆண்டுகள் (8 பருவம்) இளநிலை தொழில்நுட்ப வழங்கப்படுகிறது. இவை:
- வேளாண் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்
- உயிரி தொழில்நுட்பவியல்
- கணினி அறிவியல் & பொறியியல்
- மின்னணுவியல் & தொலைத்தொடர்பு பொறியியல்
- தகவல் தொழில்நுட்பம்
தரவரிசை
இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான 2021ஆம் ஆண்டு தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தர வரிசையில் இப்பல்கலைக்கழகம் 101-150 தொகுதியில் இடம் பெற்றுள்ளது.[6]
Remove ads
மாணவர் வாழ்க்கை
மாணவர் அமைப்பு
நாகாலாந்து பல்கலைக்கழகத்தில் மாணவர் நலனுக்காக நான்கு மாணவர் அமைப்புகள் உள்ளன.இவை நாகாலாந்து பல்கலைக்கழக மாணவர் சங்கம், லுமாமி வளாகம், முதுகலை மாணவர் சங்கம், மெரிமா வளாகம், முதுகலை மாணவர் சங்கம், மற்றும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர் சங்கம் ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த மாணவர் அமைப்பிற்குத் தேர்தல் நடத்தப்படுகிறது. மாணவர்களின் செயல்பாடுகளில் புது மாணவர்கள் தினம், சமூக விருந்து, விளையாட்டு வாரம், கலாச்சார நடவடிக்கைகள், இலக்கிய வாரங்கள், இசை இரவுகள், திருவிழாக்கள், விவாதங்கள் போன்றவை அடங்கும். மாணவர்களின் பிரச்சனைகள் மற்றும் நாகாலாந்து பல்கலைக்கழகம் தொடர்பான பிரச்சனைகளைத் தீவிரமாக இந்த அமைப்புகள் எடுத்துக்கொண்டு தீர்வுகாண முயல்கிறது.
கலாச்சார விழாக்கள்
பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பள்ளி ஆண்டுதோறும் மேலாண்மை விழாவை நடத்துகிறது. இது டெக் ஆரா என்று அழைக்கப்படுகிறது. நாகாலாந்து பல்கலைக்கழக விழாவும் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.[சான்று தேவை]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads