சு. சண்முகசுந்தரம்
திருநெல்வேலி மாவட்ட எழுத்தாளர்கள் From Wikipedia, the free encyclopedia
Remove ads
காவ்யா சண்முகசுந்தரம் (பிறப்பு: டிசம்பர் 30, 1949) என்பவர் தமிழ்ப் பேராசிரியர், நூல் வெளியீட்டாளர் மற்றும் தமிழக எழுத்தாளர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கால்கரை எனும் கிராமத்தில் பிறந்தவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.விருது: தமிழ்காவலர் விருது, தமிழ்ச்சுடர் விருது,கவிஞானி விருது, பாரதிதாசன் விருது,கவிமாமணி விருது,சங்ககவிமணி விருது ஆகும்.
Remove ads
கல்வி
இவர் கால்கரை ஆரம்பப் பள்ளியிலும், வடக்கன்குளம் கன்கார்டியா உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிப் படிப்பை முடித்தவர். பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1977-ல் “திருநெல்வேலி மாவட்ட நாட்டுப்புற பாடல்களில் சமுதாய அமைப்பு” என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார்.
Remove ads
தமிழ்ப் பணி
- பெங்களூரு செயின்ட் ஜோசப் கல்லூரியில் 1978 ஆம் ஆண்டில் தமிழ்ப் பேராசியராகப் பணியில் சேர்ந்து 2006 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்றார்.
- செம்மொழி மத்திய தமிழாய்வு நிறுவனத்தில் 2006 முதல் 2008 ஆம் ஆண்டு வரை முதுநிலை ஆய்வாளராக “நாட்டுப்புற அரங்கியல்” பற்றியும், 2008 முதல் 2009 ஆம் ஆண்டு வரை “காலந்தோறும் கண்ணகி கதைகள்” என்ற தலைப்பில் சிற்றாய்வும், 2008 - 2011 ஆம் ஆண்டு வரை 'நாட்டுப்புற தெய்வங்கள் வழிபாடும் பண்பாடும்' என்ற தலைப்பில் பேராய்வும் செய்தார்.
Remove ads
எழுத்துப் பணி
- இவர் 20 நூல்களை எழுதியுள்ளார். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுதிகளும், ஐந்து நாவல்களும், 25 ஆய்வு நூல்களும், தமிழ்த் திரைப்படம், தமிழ் இலக்கியம் தொடர்பாக எழுதியுள்ளார். இவரது ஆய்வு நூல்களை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சாகித்ய அகாதெமி போன்றவை வெளியிட்டுள்ளன.[சான்று தேவை]
- இவரது படைப்புகள் ஆங்கிலம், கன்னடம், மலையாளம், வங்காளம் எனப் பிற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.[சான்று தேவை]
பதிப்பு பணி
இவர் காவ்யா பதிப்பகம் எனும் பெயரில் நூல் வெளியீட்டு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads