சூரியநெல்லி

From Wikipedia, the free encyclopedia

சூரியநெல்லிmap
Remove ads

சூரியநெல்லி (ஆங்கிலம் : Suryanelli/Sooryanelli) கேரளத்தின் தெற்கத்திய மாவட்டமான இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய நகரம் ஆகும்.[3] இந்த நகரத்திலிருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தூரத்தில் இந்தியாவில் உள்ள மூன்றாவது புகழ் பெற்ற கோடைத் தலமான மூணார் உள்ளது.

விரைவான உண்மைகள்
Remove ads

சிறப்பம்சங்கள்

சூரியநெல்லி கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு மலை நகரமாகும். இந்த நகரத்தின் அருகே இந்தியாவில் உள்ள மூன்றாவது புகழ் பெற்ற கோடைத் தலமான மூணார் அமைந்துள்ளது. மேலும் தேக்கடி சுற்றுலாத்தலம், யானை இரங்கல் அணை மற்றும் பவர் ஹவுஸ் நீர்வீழ்ச்சிகளும் இதன் அருகே உள்ளது. மற்றும் கொழுக்கு மலையில் அமைந்துள்ள தேயிலைப் பொடி தயாரிக்கும் தொழிற்சாலையை நேரடியாக உள்ளே சென்று காணலாம், இங்கு செல்ல வேண்டுமானால் பொதியுந்தில் (jeep) செல்ல வேண்டும். மேலும் சூரியநெல்லியில் சூன் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையே விழும் பருவமழை மாதங்கள் தவிர, மற்ற அனைத்து மாதங்கள் முழுவதும் எழில் மிகுத் தோற்றத்தைக் காணலாம். மேலும் சூரியநெல்லி அருகே அமைந்துள்ள, சின்னக்கானல் என்னுமிடத்தில் மிப் பழமை வாய்ந்த ஜந்து நட்சத்திரத் தங்கும் விடுதியான மஹிந்திரா கிளப் உள்ளது.

Remove ads

தொழில்

இங்கு தேயிலை பொடி தயாரித்தல், மற்றும் தேயிலைச் சார்ந்த தொழிலே இங்கு முக்கியத் தொழில் ஆகும். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் கேரள நகரங்களுள் சூரியநெல்லியும் ஒன்றாகும்.

விளைபயிர்கள்

இங்கு முக்கிய பணப் பயிராக ஏலக்காய் பயிர் செய்யப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் வெள்ளப்பூண்டு, பீன்ஸ், இஞ்சி, மற்றும் முட்டைக்கோசு, ஆகியவை பயிர் செய்யப்படுகிறது.

அமைவிடம் போக்குவரத்து

கேரளம் மற்றும் தமிழ் நாடு ஆகிய இரு மாநிலங்களிலிருத்தும் சூரியநெல்லிக்கு எடுத்துக் கொள்ளும் கிலோமீட்டர் அட்டவனை:

மேலதிகத் தகவல்கள் புறப்பிடுமிடம், சேருமிடம் ...

நிகழ்வுகள்

சூரியநெல்லி வன்புணர்வு வழக்கு

ஆதாரங்கள்

வெளியிணைப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads