சூர்யவம்சம்
விக்ரமன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சூரிய வம்சம் (ஆங்கிலம்: Suryavamsam) விக்ரமன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் மொழித் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் முன்னணி கதை பாத்திரங்களில் சரத் குமார்,தேவயானி , ராதிகா, மணிவண்ணன், மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படத்தின் பாடல்வரிகள் மு. மேத்தா, பழனி பாரதி, ர. ரவிசங்கர் மற்றும் கலை குமார் அவர்களால் எழுதப்பட்டது. இப்படத்தின் இசை மற்றும் ஒலிப்பதிவு எஸ்.ஏ. ராஜ்குமார் அவர்கள் மூலம் இயற்றப்பட்டது.[1]
Remove ads
கதை சுருக்கம்
சூரியவம்சம் சூன் 27, 1997 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் சரத்குமார் தந்தை மற்றும் மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளார். தந்தையாக வரும் சரத்குமாருக்கு இணையராக (ஜோடி) ராதிகா அவர்களும் மகன் பாத்திரத்திற்கு தேவயானி அவர்கள் நடித்துள்ளனர். மேலும் ஆனந்தராஜ் இத்திரைப்படத்தின் வில்லன் வேடத்திலும், நகைச்சுவை கதாபாத்திரத்தில் மணிவண்ணன் மற்றும் ஆர். சுந்தரராஜன் ஆகிய இருவரும் தமது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
Remove ads
கதைமாந்தர்கள்
- சரத் குமார்- சின்னராசு/ சக்திவேல் கவுண்டர்
- தேவயானி - நந்தினி
- ராதிகா- சக்திவேல் கவுண்டரின் மனைவி லதா
- மணிவண்ணன்- சின்னராசுவின் சகதோழனாக ராசப்பன்
- பிரியா ராமன்- கௌரி
- ஜெய்கணேஷ்
- அஜய் ரத்னம்
- சத்ய பிரியா - நந்தினியின் தாய்
- ஆனந்த ராஜ் - தர்மலிங்கம்
- ராஜ குமாரன் - சிறப்புத் தோற்றம்
பாடல்கள்
இசைத் தயாரிப்பாளர் எஸ். ஏ. ராஜ்குமார் மூலம் உருவாக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் உள்ளது.[2]
மற்ற மொழிகளில்
- இத்திரைப்படம் கன்னட மொழியில் சூர்யா வம்ஷா என்ற பெயரில் மறுஆக்கம் செய்யப்பட்டது, இதில் விஷ்ணுவர்தன் மற்றும் இஷா கோபிகர் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படம் சீட்டுக் கூண்டு (box-office) வசூலில் வரலாற்றுச் சாதனைப் படைத்தது.
- தெலுங்கில் இப்படம் சூர்யா வம்சம் என்ற பெயரில் மறுஆக்கம் செய்யப்பட்து. இதில் வெங்கடேஷ் மற்றும் மீனா முன்னணி கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.
- பின்னர் இப்படம் இந்தியில் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் மறைந்த முன்னணி நடிகைகளில் ஒருவரான சௌந்தர்யா அவர்களின் நடிப்பில், சூரியவன்ஷம் என்ற பெயரில் மறுஆக்கம் செய்யப்பட்டு வெளியானது.
Remove ads
விருதுகள்
- 1997 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது (முதற் பரிசு) கிடைத்தது.
ஆதாரம்
வெளியிணைப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads