சூலாவ் மாவட்டம்

மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

சூலாவ் மாவட்டம்
Remove ads

சூலாவ் மாவட்டம் (மலாய் மொழி: Daerah Julau; ஆங்கிலம்: Julau District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; சரிக்கே பிரிவில் உள்ள ஒரு மாவட்டமாகும்.

விரைவான உண்மைகள் சூலாவ் மாவட்டம் Julau DistrictDaerah Julau, நாடு ...

மக்கள் தொகையில் இபான் மக்கள் மற்றும் சீனர்கள் குறிப்பாக பூச்சௌ மக்கள்; இந்த மாவட்டத்தில் மிகுதியாக உள்ளனர்.15, 333

Remove ads

வரலாறு

1853-இல், ஜேம்சு புரூக் புரூணை சுல்தானகத்திடம் இருந்து ராஜாங் ஆறு; மற்றும் அதைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளைப் பெற்றுக் கொண்டார்.[1] அந்தக் கட்டத்தில், புஜியான் மாநிலத்தில் இருந்து லிமா டின் (Limah Din) என்ற பெயருடைய சீனர் ஒருவர் 1929-இல் சூலாவுக்கு வந்தார்.[2]

அவர் சூலாவ் ஆற்றின் முகத்துவாரத்தில் குடியேறி, அங்கே ரப்பர் தோட்டங்களை உருவாக்கினார். பின்னர் அவர், சூலாவில் உள்ள பூர்வீக மக்களுடன் வணிகத் தொழிலைத் தொடங்கினார். சூலாவ் பகுதியில் அவர் ஆற்றிய பங்கின் நினைவாக, தற்போது சூலாவ் நகரில் ஒரு சாலைக்கு லிமா தின் சாலை என்றும் பெயரிடப்பட்டு உள்ளது.[2]

நங்கா மெலுவான்

1936-இல், சூலாவ் மற்றும் நங்கா மெலுவான் இடையிலான சூலாவ் ஆற்றின் முகப்பில், வணிக நடவடிக்கைகளை சீனர்கள் தொடங்கினர். அதே ஆண்டில், சரவாக் இராச்சியம் இபான் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக நங்கா மெலுவானில் இருந்த ஒரு மலையில் ஒரு கோட்டையை அமைத்தது.

1938-ஆம் ஆண்டில், சரவாக் இராச்சியம், சூலாவை நங்கா மெலுவான் ஆட்சி வரம்பின் கீழ் கொண்டு வந்தது. அதன் பின்னர், இபான் மக்களுக்கும் சீனர்களுக்கும் இடையே ரப்பர் வணிகம்; மற்றும் எங்கபாங் பழங்களின் (Engkabang Fruits) வணிகம், முக்கியப் பொருளாதார நடவடிக்கையாக இருந்தது.[2]

சப்பானிய ஆக்கிரமிப்பு

சரவாக்கின் ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது, ​​இபான் மக்களில் சிலர், ராஜாங் ஆற்றின் கீழ் பகுதிகளுக்குச் சென்று சீனர்களுக்கு எதிராகத் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். எனவே, சூலாவில் உள்ள சீனர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மற்ற நட்பு இபான்களுடன் ஒத்துழைக்க முடிவு செய்தனர்.

இந்தக் கட்டத்தில், இபான்களில் பலர், தங்கள் நிலங்களில் அரிசி, சோளம் மற்றும் புகையிலை பயிரிடுவதற்குச் சீனர்களுக்கு அனுமதி வழங்கினர்.[2]

முதல் அரசு மேல்நிலைப் பள்ளி

1954-ஆம் ஆண்டில், சூலாவில் 22 கடைவீடுகள் இருந்தன. இருப்பினும், 1965-இல், அனைத்து கடைவீடுகளும் தீயில் எரிந்து நாசமாயின. 1955-இல், சூலாவில் ஒரு மருத்துவமனை, ஒரு தொலைபேசி இல்லம்; மற்றும் ஒரு கிராம மண்டபம் அமைக்கப்பட்டது. 1957-இல் அரசு ஊழியர்களுக்கான தங்குமிடம் கட்டப்பட்டது.

1963-இல் மலேசியா கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. சாலைப் போக்குவரத்துகள் மேம்படுத்தப்பட்டன. இது சூலாவில் இருந்து சரிக்கே மற்றும் சிபு வரையிலான பயண நேரம் கணிசமாகக் குறைந்தது. 1970-களில், சூலாவ் பாலம் கட்டப்பட்டது. 1967-இல், சூலாவில் முதல் அரசு மேல்நிலைப் பள்ளி அமைக்கப்பட்டது. என்டபாய், பக்கான், மெலுவான் போன்ற கிராமப் புறங்களில் இருந்து மாணவர்கள் அங்கு படிக்க வந்தனர்.

தகுதி உயர்வு

1970-களில், சூலாவ் நீர் வாரியம், சூலாவ் தொலைபேசித் துறை, சூலாவ் வேளாண்மைத் துறை மற்றும் சூலாவ் காவல் துறை ஆகியவை உருவாக்கப்பட்டன.[2] இதற்கு முன்பு சூலாவ் மாவட்டம், கனோவிட் மாவட்டத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட ஒரு துணை மாவட்டமாக இருந்தது. 1973-ஆம் ஆண்டில், சூலாவ் ஒரு மாவட்டமாகத் தகுதி உயர்த்தப்பட்டது; மற்றும் சரிக்கே பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டது.[2]

Remove ads

மேற்கோள்கள்

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads