செத்தியா ஜெயா நிலையம்

பெட்டாலிங் ஜெயா, பண்டார் சன்வே பகுதியில் அமைந்துள்ள கொமுட்டர் நிலையம் From Wikipedia, the free encyclopedia

செத்தியா ஜெயா நிலையம்map
Remove ads

செத்தியா ஜெயா நிலையம் (ஆங்கிலம்: Setia Jaya Station; மலாய்: Stesen Setia Jaya); சீனம்: 双威-斯迪亚再也) என்பது மலேசியா, சிலாங்கூர், மாநிலத்தில் பெட்டாலிங் ஜெயா, பண்டார் சன்வே பகுதியில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம்; மற்றும் சன்வே விரைவுப் பேருந்து நிலையம் ஆகும்.[1]

விரைவான உண்மைகள் KD08 SB1 செத்தியா ஜெயா சன்வே-செத்தியா ஜெயா, பொது தகவல்கள் ...

செரி செத்தியா நிலையம் பெட்டாலிங் ஜெயாவின் பண்டார் சன்வே குடியிருப்புப் பகுதிகளில் அமைந்துள்ளது; மற்றும் அங்குள்ள போக்குவரத்தைப் பூர்த்தி செய்வதற்காக கட்டப்பட்டது.[2]

Remove ads

பொது

தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம்; பெட்டாலிங் ஜெயா, சன்வே குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குச் சேவை செய்கிறது. இந்த நிலையம் பந்தாய் புதிய நெடுஞ்சாலையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது.

கேஎல் சென்ட்ரல்-தெர்மினல் இஸ்கைபார்க் (KL Sentral-Terminal Skypark Line) வழித்தடம் இந்த நிலையத்தின் வழியாக, இதே நிலையத்தையும் கடந்து செல்கிறது.

இருப்பினும் இந்த நிலையத்தில் கொமுட்டர் தொடருந்துகள் நிற்பது இல்லை. அதற்கு பதிலாக இஸ்கைபார்க் தொடருந்துகள் (Skypark Link) அருகிலுள்ள சுபாங் ஜெயா கொமுட்டர் நிலையத்தில் (Subang Jaya Station) நின்று செல்கின்றன.

சுங்கை வே நிலையம்

இந்த நிலையம் முன்பு 1980-களில் சுங்கை வே நிலையம் (Sungai Way Station) என்று அழைக்கப்பட்டது.[3] தற்போதைய செரி செத்தியா கிராமம் என்பது அருகிலுள்ள சுங்கைவே கிராமத்திலிருந்து உருவானது.

சுங்கைவேயின் தற்போதைய பெயர் செரி செத்தியா புதுக்கிராமம் (Seri Setia New Village).

இந்த நிலையத்திற்கு அருகில் உள்ள செரி செத்தியா கொமுட்டர் நிலையத்தில் இருந்து மலேசிய கூட்டரசு நெடுஞ்சாலையின் (Federal Highway Malaysia) குறுக்கே சுங்கைவே கிராமத்திற்கு இணைப்புப் பாலம் உள்ளது.

தீர்வையற்ற தொழில்துறை மண்டலம்

கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலை; மற்றும் டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை சந்திப்பில் இந்த நிலையம் அமைந்துள்ளது. அத்துடன் தீர்வையற்ற தொழில்துறை மண்டலத்தின் தொழிற்சாலைகள் நடந்து செல்லும் தூரத்தில் இந்த நிலையம் அமைந்து உள்ளது.

செரி செத்தியா நிலையம் பொதுவாக நெரிசல் நேரங்களில் பரபரப்பாக இருக்கும். ஏனெனில் இந்த நிலையம், சுங்கைவே பகுதியில் வாழும் பயணிகள், தாங்கள் தொழில் செய்யும் இடங்களுக்குச் செல்ல பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

சுங்கைவே பகுதியில் பல தொழிற்சாலைகள் உள்ளதால் தொழிற்சாலைகளுக்குச் செல்லும் தொழிலாளர்களும் இந்த நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர்.

Remove ads

சுங்கைவே

சுங்கைவே (Sungai Way); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்து உள்ள புற நகர்ப் பகுதி. SS8, SS9, SS9A ஆகிய குடியிருப்புப் பிரிவுகளை உள்ளடக்கியது. இதன் தற்போதைய பெயர் ஸ்ரீ செத்தியா (Seri Setia).[4]

1959-ஆம் ஆண்டில், கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலை (Federal Highway (Malaysia) திறப்பதற்கு முன்பு இங்கு ஒரு புதிய தொழில்துறை மண்டலம் (Sungai Way industrial zone) நிறுவப்பட்டது. அந்த வகையில், பெட்டாலிங் ஜெயா பகுதியில் முதன்முதலில் வளர்ச்சி பெற்ற கிராமம் சுங்கைவே கிராமம் ஆகும்.[5]

Remove ads

காட்சியகம்

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads