செமாய் மக்கள்
தீபகற்ப மலேசியாவின் பழங்குடி மக்கள் From Wikipedia, the free encyclopedia
Remove ads
செமாய் மக்கள் (ஆங்கிலம்: Semai people; மலாய்: Orang Semai; Mai Semai; Mai Kateh) என்பவர்கள் தீபகற்ப மலேசியாவின் மையப் பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள் ஆவார்கள். இவர்களின் வன்முறையற்ற வாழ்வியல் தன்மைகளுக்காக நன்கு அறியப் படுகிறார்கள்.[2][3]
தெமியார் மொழி பேசும் தெமியார் மக்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்; ஆசுத்ரோ-ஆசிய மொழிக் குடும்பத்தின் மொழியான செமாய் மொழியைப் பயன்படுத்துகிறார்கள். தீபகற்ப மலேசியாவின் பேராக், பகாங் மாநிலங்களில் செமாய் மொழி பரவலாகப் பேசப்படுகிறது.[4]
செமாய் மக்களில் பெரும்பான்மையினர் தானியப் பயிர்களைப் பயிரிடுதல், வேட்டையாடுதல் மற்றும் மீன்பிடித்தல் மூலம் வாழ்கின்றனர்.
Remove ads
பொது
செமாய் மக்கள் தோட்டக்கலையில் வல்லுநர்கள் எனும் பொதுவான கருத்து உள்ளது. அவர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக நெல் மற்றும் ஆள்வள்ளிக் கிழங்கு அல்லது மரவள்ளி கிழங்குகளை நம்பியுள்ளனர். பயிர் செய்வதற்காகக் காடுகளை அழிப்பதற்கு பெரிய கத்திகளைப் பயன்படுத்துகின்றனர். காட்டு மரங்களை வெட்டிய பிறகு அந்தப் பகுதிகளை எரிக்கின்றனர். அதன் பின்னர் காய்கறிப் பயிர்களைப் பயிரிடுகின்றனர்.[5]
இரண்டு அல்லது மூன்று அறுவடைகளுக்குப் பிறகு, ஒரு புதிய பகுதியில் நடவு செய்யத் தொடங்குவார்கள். வேட்டையாடுதல் மற்றும் மீன் பிடித்தல் மூலம் தங்கள் உணவுகளைத் தேடிக் கொள்கிறார்கள். அத்துடன் தங்கள் சொந்த பயன்பாட்டிற்க்காக கோழிகளை வளர்க்கிறார்கள். ஆடு மற்றும் வாத்துகளை வளர்த்து விற்கிறார்கள்.[4]
மீன் பிடித்தல் பெண்களின் தொழிலாக உள்ளது. வேட்டையாடுதல் ஆண்களின் தொழிலாக உள்ளது. வேட்டையாடுதலுக்கு நச்சு ஈட்டிகளைப் பயன்படுத்துகின்றனர்.[5]
Remove ads
வரலாறு
செமாய் மக்கள், தென்கிழக்கு ஆசியாவின் அசல் மக்களின் வழித்தோன்றல்கள் ஆவார்கள். அவர்கள் கிமு 8000 முதல் 6000 வரையிலான காலக் கட்டத்தில் மலாய் தீபகற்பத்திற்கு வந்தனர் என வரலாற்றாசிரியர்கள் கருகின்றனர்.[5] 1991-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி செமாய் மக்கள் தொகை 26,627; 2000-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி செமாய் மக்கள் தொகை 34,248. இது தீபகற்ப மலேசியாவில் நடத்தப்பட்ட கண்க்கெடுப்பு ஆகும்.[6]
சிறந்த ஊட்டச்சத்து உணவு; மேம்பட்ட சுகாதார நிலை; மற்றும் உடல்நலப் பேணுமுறைகள்; இவற்றினால் செமாய் மக்களின் எண்ணிக்கை அண்மைய ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.
1995-ஆம் ஆண்டில், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் மூலக்கூற்று உயிரியலாளர் குழுவினர் நடத்திய ஒரு மரபணு ஆய்வுகளின் வழி, செமாய் மக்களுக்கும் கம்போடியாவின் கெமர் மக்களுக்கும் நெருங்கிய உறவு இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். மேலும், ஜாவானிய மக்களுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்றும் அறியப்படுகிறது.[7]
திருப்பங்கள்
செமாய் மக்கள் மலாய் தீபகற்பத்திற்கு வந்து 1000 ஆண்டுகளுக்குப் பிறகுதான் மலாய்க்காரர்கள் மலாய் தீபகற்பத்திற்கு வந்ததாகவும் அறியப்படுகிறது.[5] முதலில் செமாய் மக்களுடன் சமாதான முறையில் வணிகம் செய்து பழகினர்.
காலப் போக்கில் மலாய் மக்கள் உள்ளூர் இராச்சியங்களை உருவாக்கினார்கள்; இசுலாம் மதத்திற்கு மாறினார்கள்; பின்னர் அவர்களின் உறவு முறைகளும் மாறின. செமாய் மக்களை, புறச்சமய நம்பிக்கை கொண்ட மக்கள் (Despised Pagans) என இகழ்ந்த நிலையில் பார்த்தனர்.[5] இதன் தொடர்ச்சியாக, செமாய் மக்களின் ஆண்கள் கொல்லப்பட்டனர்; சிறு குழந்தைகள் கடத்தப்பட்டனர்.[5]
Remove ads
வாழ்வியல்
செமாய் மக்கள் மிகக் குறைந்த அளவிலான வன்முறைகளுக்குப் பெயர் பெற்றவர்கள்.[8] செமாய் மக்களிடையே சில வன்முறைகள் இருந்தாலும், அவை அரிதாக உள்ளன. அடிமை அச்சுறுத்தல்களைத் தவிர்ப்பதற்காக செமாய் மக்கள் வன்முறையற்ற தன்மைகளைப் பின்பற்றி இருக்கலாம் என வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.
செமாய் மக்களை அடிமைகளாக்கும் உள்ளூர்த் தரப்புகளின் போக்கினாலும்; தீபகற்ப மலேசியாவில் புதிதாகக் குடியேறியவர்களாலும், செமாய் மக்கள் தொடர்ந்து தோற்கடிக்கப்பட்டனர். செமாய் மக்கள் சண்டையிடுவதை விட தப்பி ஓடுவதையே விரும்பினர். அதுவே வனமையற்றத் தன்மைகளின் பொது நெறியாக உருவானது.[9]
மலாயா அவசரகாலத்தின் போது, மலாயா தேசிய விடுதலை படையினருக்கு எதிராகப் போராட மலாயா காலனித்துவ பிரித்தானியர்கள், செமாய் மக்கள் சிலரை நியமித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.[10][11]
காட்சியகம்
மேலும் காண்க
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
