தெமியார் மக்கள்

மலேசிய பழங்குடி இனக்குழு From Wikipedia, the free encyclopedia

தெமியார் மக்கள்
Remove ads

தெமியார் அல்லது தெமியார் மக்கள் (ஆங்கிலம்: Temiar People; மலாய்: Orang Temiar; Mai Sero) என்பவர்கள் தீபகற்ப மலேசியாவின் மலேசியப் பழங்குடியினர் இனக்குழுவில் செனோய் மக்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆகும். தீபகற்ப மலேசியாவின் 18 மலேசியப் பழங்குடியினர் குழுக்களில் மிகப்பெரிய இனக்குழுவினர் ஆகும்.

விரைவான உண்மைகள் Mai Sero', மொத்த மக்கள்தொகை ...

தெமியார் மக்கள் என்பவர்கள் தெமியார் மொழியைப் பேசுகிறார்கள். தெமியார் மொழி (Temiar Language) என்பது ஆசுத்ரோ-ஆசிய மொழிகள் (Austroasiatic Languages) பெரும் மொழிக் குடும்பத்தில்; அசிலியான் மொழிகள் (Aslian Languages) துணைக் குடுமபத்தின்; செனோய மொழிகள் (Semelaic Languages) பிரிவில் ஒரு மொழியாகும்.[2]

தெமியார் மக்கள், தீபகற்ப மலேசியாவின் பேராக், பகாங், கிளாந்தான் மாநிலங்களில் வசித்து வருகிறார்கள்.[3]

Remove ads

பொது

Thumb
தெமியார் பெண்கள்

தெமியார் மக்களின் மொத்த மக்கள் தொகை 40,000 முதல் 120,000 வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலோர் மழைக்காடுகளின் விளிம்புகளில் வாழ்கின்றனர்; அதே வேளையில் ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்கள் நகர்ப் பகுதிகளிலும் வாழ்கின்றனர்.[4]

தெமியார் மக்கள் பாரம்பரியமாக ஆன்மவாதிகள் (Animists); இயற்கை, கனவுகள் மற்றும் ஆன்மீக முறையில் குணமடையச் செய்யும் முறைப்பாட்டிற்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.[4][5]

அவர்களின் நாட்டுப்புற நம்பிக்கைகளின் ஒரு பகுதியாக செவாங் (Sewang) எனும் பாரம்பரிய நடனமும் தெமியார் மக்களால் நிகழ்த்தப்படுகிறது.[6]

Remove ads

தெமியார் மக்கள் தொகை

தெமியார் மக்கள் தொகை பின்வருமாறு:-

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, மக்கள் தொகை ...

குடியேற்றப் பகுதிகள்

Thumb
தெமியார் மக்களின் செவாங் பாரம்பரிய நடனம்

தீபகற்ப மலேசியாவில் தெமியார் மக்களின் முக்கிய குடியிருப்புகள்:

மேலும் காண்க

மேற்கோள்கள்

சான்று நூல்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads