செம்மீசைச் சின்னான்

From Wikipedia, the free encyclopedia

செம்மீசைச் சின்னான்
Remove ads

செம்மீசைச் சின்னான் அல்லது சிவப்புமீசைச் சின்னான் அல்லது செம்மீசைக் கொண்டைக்குருவி (Red-whiskered Bulbul, Pycnonotus jocosus) என்பது சின்னான் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாடும் பறவையாகும். இவை மித வெப்ப மண்டல ஆசியப் பகுதிகளான புதிய இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் பல இடங்களில் நன்றாக வாழ்கின்றன. இதன் தனிச்சிறப்புமிக்க கொண்டையையும் சிவப்பு நிறமான புழையையும் மீசையையும் இதனைக் இனங்காண உதவும். இதன் கொண்டைக் காரணமாக கொண்டைக் குருவி என்று அழைக்கப்படுகிறது. இப்பறவை பழங்களையும் பூச்சிகளையும் முதன்மை உணவாகக் உட்கொள்கிறது.

விரைவான உண்மைகள் செம்மீசைச் சின்னான், காப்பு நிலை ...
Remove ads

வகைப்பாட்டியல்

இவற்றை கரோலஸ் லின்னேயஸ் 1758-ல் அவர் பதித்த "இயற்கை முறைகள்" (Systema Naturae) என்னும் புத்தகத்தில் பதிவேற்றியுள்ளார். இவைகளை சின்னான்களோடு தொகுத்ததை இதுநாள்வரை கடைபிடிக்கின்றனர்.

துணையினங்கள்

செம்மீசைச் சின்னானில் ஒன்பது துணையினங்கள் அங்கீகரிக்கபட்டுள்ளன:[2]

  • P. j. fuscicaudatus - (Gould, 1866): முதலில் ஒரு தனி இனமாக விவரிக்கப்பட்டது. மேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் காணப்படுகிறது.
  • P. j. abuensis - (Whistler, 1931): வடமேற்கு இந்தியாவில் காணப்படுகிறது.
  • P. j. pyrrhotis - (Bonaparte, 1850): முதலில் இக்சோசு பேரினத்தில் தனி இனமாக விவரிக்கப்பட்டது. வட இந்தியா மற்றும் நேபாளத்தின் தெராய் பகுதியில் காணப்படுகிறது.
  • P. j. emeria - (லின்னேயஸ், 1758): முதலில் வாலாட்டிக் குருவி பேரினத்தில் தனி இனமாக விவரிக்கப்பட்டது.[3] கிழக்கு இந்தியாவிலிருந்து தென்மேற்கு தாய்லாந்து வரை காணப்படுகிறது.
  • P. j. whistleri - Deignan, 1948: அந்தமான் தீவுகளில் காணப்படுகிறது.
  • P. j. monticola - (Horsfield, 1840): முதலில் இக்சோசு பேரினத்தில் ஒரு தனி இனமாக விவரிக்கப்பட்டது. கிழக்கு இமயமலையில் இருந்து வடக்கு மியான்மர் மற்றும் தெற்கு சீனா வரை காணப்படுகிறது.
  • P. j. jocosus - (Linnaeus, 1758): தென்கிழக்கு சீனாவில் காணப்படுகிறது.
  • P. j. hainanensis - (Hachisuka, 1939): ஆய்னான் தீவில் (தென்கிழக்கு சீனாவில்) காணப்படுகிறது.
  • P. j. pattani - Deignan, 1948: தெற்கு மியான்மர் மற்றும் வடக்கு மலாய் தீபகற்பத்திலிருந்து தாய்லாந்து, தெற்கு இந்தோசீனா மற்றும் சாவகம் மற்றும் சுமாத்திராவில் கூட காணப்படுகிறது.
Remove ads

உள்ளூர்ப் பெயர்கள்

இவற்றிற்கு துராகா தெலுங்கு மொழியில் பிக்லி-பிட்டா, வங்கத்தில் சிபாகி புல்புல் (Sipahi bulbul), தாய்லாந்து மொழியில் கிரொங்-ஹுவா-ஜக் (Krong-hua-juk, กรงหัวจุก), இந்தியில் பாரி புல்புல் (Phari-bulbul) அல்லது கனேரா புல்புல் (Kanera bulbul) என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது[4].

உருவமைப்பு

இப்பறவை 20 செ.மீ நீளம் இருக்கும். இப்பறவையின் அடிப்பகுதி வெண்ணிறத்திலும் மேற்பகுதி பழுப்பு நிறத்திலும் இருக்கும். இதன் வாழ்நாள் சுமார் 11 ஆண்டுகள் ஆகும்.

பரவல்

இது பரவியுள்ள பகுதிகளில் மலைக் காடுகளிலும் நகர்ப்புறங்களில் உள்ள தோட்டங்களிலும் பரவலாகக் காணப்படுகிறது.

குணாதிசயங்கள்

மரக்கிளைகளில் புலப்படாதவாறு அமர்ந்து கொண்டு பலத்த 3 அல்லது 4 அலைகளாக ஒலியை எழுப்புவதில் வல்லவை.

உணவு

இவை பெரும்பாலும் பழங்களை உண்டாலும், இவை அவ்வப்பொழுது சிறு பூச்சிகளையும் மலர்களில் தேனையும் உட்கொள்கின்றன. பாலுண்ணிகளுக்கு விடம் எனக்கருதப்படும் விதைகளையும் இவை உண்டு மகிழ்கின்றன[5].

இனவிருத்தி

இவைகளின் இனவிருத்திக்காலமானது வட இந்தியாவில் திசம்பர் முதல் மே வரையிலும், தென்னிந்தியாவிலோ மார்ச் முதல் அக்டோபர் வரையுமாகும்[6]. இவை ஆண்டிற்கு ஒரு முறையோ இரு முறைகளோ இனப்பெருக்கம் செய்யக்கூடும்.[7]. ஆண்கள் தங்கள் கொண்டையை ஆட்டியும் தலை குனிந்தும், வாலை விரித்தும், சிறகுகளை காலருகே வைத்தும் பெண் பறவைகளைக் கவர்கின்றன[7].

கூடு

Thumb
முட்டைகளுள்ள கூடு

கோப்பை வடிவிலான கூட்டினை இவை புதர்களிலும், சுவர்களிலும், சிறு மரங்களிலும் அமைக்கும். கூடுகள் சிறுசுள்ளிகள், வேர்கள், புற்களால் அமைப்பதோடு, பெரிய மரப்பட்டைகள், காகிதம், நெகிழிப் பைகளாலும் அமைக்கின்றன.[8].

முட்டை

ஒவ்வொரு ஈனிலும் 2 முதல் 3 முட்டைகளை இடுகின்றன.[7]. முட்டைத் திருடர்களை திசைதிருப்ப பெண் பறவையினம் தான் அடிபட்டதைப்போல் நடிக்கும்.[7]. மண் நிறத்திலிருக்கும் முட்டைகளின் மீது புள்ளிகள் இருக்கும். இவை 16 முதல் 21 மில்லி மீட்டர் நீளம் இருக்கின்றன.[9]. 12 நாட்கள் வரை முட்டைகள் பொரியப்பிடிக்கும்[10].

Remove ads

குஞ்சுகளின் பராமரிப்பு

இருபாலினங்களும் குஞ்சுகளை பராமரிக்கின்றன.[10] சிறு வயதில் புழு பூச்சிகளையும், வளர வளர விதைகளும் பழங்களும் குஞ்சுகளுக்கு உணவாக அளிக்கப்படுகிறது.[10]. குஞ்சுகள் இறகுகளின்றி பிறக்கின்றன[11]. காகங்களும், செண்பகமும் முட்டைகளையும், குஞ்சுகளையும் வேட்டையாடுகின்றன[10].

மனிதருடன் பரிமாற்றங்கள்

ஒரு காலத்தில் இவை இந்தியாவில் பல இடங்களில் விரும்பி வளர்க்கும் கூண்டுப்பறவையினமாக இருந்தது. C. W. ஸ்மித் என்பவர் தன் குறிப்பில் (Journal of the Asiatic Society of Bengal, பத்தாவது இதழ், பக்கம் 640)) பின்வருமாறு எழுதியுள்ளார்:

"இப்பறவைகள் பயமறியாததனாலும், எளிதில் திரும்ப பிடிக்க வல்லவை என்பதாலும் உள்ளூர் வாசிகளிடம் பெரும் வரவேற்பு உள்ளது. இவைகள் கையின் மீது அமர கற்றுக்கொள்வதால் இவை அபரிவிதமாக இந்தியக்கடைவீதிகளில் காண முடிகிறது."

தெற்காசியாவின் சில பகுதிகளில் இப்பறவை மனிதர்களால் பிடிக்கப்பட்டு செல்லப் பறவையாக கூண்டுகளில் அடைக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது.[12].

உசாத்துணை

மேற்கொண்டு படிக்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads