செயிண்ட்-பார்த்தலெமி

From Wikipedia, the free encyclopedia

செயிண்ட்-பார்த்தலெமி
Remove ads

செயிண்ட் பார்த்தலெமி (Saint-Barthélemy), அலுவல்முறையாக செயிண்ட் பார்த்தலெமி ஆட்புலத் தொகுப்பு (French: Collectivité territoriale de Saint-Barthélemy), பிரான்சின் கடல்கடந்த தொகுப்புகளில் ஒன்றாகும்.[4] பெரும்பாலும் செயிண்ட்-பார்த் எனச் சுருக்கப்படும் இத்தீவானது உள்ளூர் மக்களால் ஊனலோ என்றழைக்கப்பெறுகின்றது.[5] செயிண்ட். மார்ட்டினிலிருந்து தென்கிழக்கே 35 கிலோமீட்டர்கள் (22 mi) தொலைவிலும் செயிண்ட். கிட்சிற்கு வடக்கிலும் உள்ளது. இத்தீவிற்கு மேற்கே 240 கிலோமீட்டர்கள் (150 mi) தொலைவில் புவேர்ட்டோ ரிக்கோ அமைந்துள்ளது.[6]

விரைவான உண்மைகள் செயிண்ட் பார்த்தலெமி தொகுப்புCollectivité de Saint-Barthélemy, நிலை ...

செயிண்ட் பார்த்தலெமி பல்லாண்டுகளாக குவாதலூப்பேயின் அங்கமாக இருந்து வந்தது. 2003இல் குவாதலூப்பேயிலிருந்து பிரிந்து தனிநாடாக விடுதலை பெற வாக்களித்தது. தற்போது பிரான்சின் கடல் கடந்த தொகுப்பாக விளங்குகின்றது. வளிமறைவுத் தீவுகளில் உள்ள பிரான்சின் நான்கு கடல்கடந்த தொகுப்புகளில் ஒன்றாக உள்ளது; மற்றவை செயிண்ட் மார்ட்டின், குவாதலூப்பே (200 கிலோமீட்டர்கள் (120 mi) தென்கிழக்கில்), மற்றும் மர்தினிக்கு.

எரிமலைகளாலான தீவைச் சுற்றிலும் ஆழமில்லாத பவழப்பாறைகள் உள்ளன. செயிண்ட் பார்த்தலெமியின் நிலப்பரப்பு 25 சதுர கிலோமீட்டர்கள் (9.7 sq mi) ஆகவும்[2] மக்கள்தொகை 9,035 (சன. 2011 மதிப்பீடு) ஆகவும் உள்ளது.[3] இதன் தலைநகரம் குஸ்தாவியாவில் தீவின் முதன்மை துறைமுகமும் உள்ளது. கரிபியக் கடல் தீவுகளிலேயே இது மட்டுமே சில காலம் சுவீடனின் குடியேற்றமாக நீண்டநாள் இருந்துள்ளது. நெப்போலியப் போர்களின் முடிவில் குவாதலூப்பே சுவீடிய ஆட்சியின் கீழ் குறைந்த காலம் இருந்துள்ளது. இத்தீவின் அரச சின்னத்தில் சுவீடனின் தேசியச் சின்னத்திலுள்ள மூன்று மகுடங்கள் இன்றும் உள்ளன. ஆனால் மொழி, உணவு, பண்பாட்டில், பிரான்சின் தாக்கம் மிகுந்துள்ளது.

இத்தீவு குளிர்காலத்தில் கூடுதல் சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக விளங்குகின்றது; குறிப்பாக பெருந்தனக்காரர்களும் புகழ்பெற்றவர்களும் கிறித்துமசு மற்றும் புத்தாண்டு காலங்களில் மனமகிழ்விற்காக இங்கு வருவது வழக்கமாகி வருகின்றது.

Remove ads

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads