செரண்டா கொமுட்டர் நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
செரண்டா கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Serendah Commuter Station மலாய்: Stesen Komuter Serendah); சீனம்: 双文丹通勤站) என்பது மலேசியா, பேராக், உலு சிலாங்கூர் மாவட்டம், செரண்டா நகரில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும். செரண்டா நகரத்தின் பெயரே இந்த கொமுட்டர் நிலையத்திற்கும் வைக்கப்பட்டு உள்ளது.[1]
மலேசியாவில் மிகப் பழைமையான தொடருந்து நிலையங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் முதன்முதலில் 1893-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. பின்னர் மின்மயமாக்கல் திட்டத்தின் கீழ், 2007 ஏப்ரல் 21-ஆம் தேதி, ராசா; மற்றும் பத்தாங்காலி நகரங்களில் இருக்கும் கொமுட்டர் நிலையங்களுடன் திறக்கப்பட்டது.[2]
Remove ads
பொது
2016-இல் கிள்ளான் துறைமுக வழித்தடத்துடன் இந்த செரண்டா கொமுட்டர் நிலையம் இணைக்கப்படும் வரை, ரவாங் - தஞ்சோங் மாலிம் இடைவழிச் சேவையில் (Rawang - Tanjung Malim Shuttle Service) ஐந்தாவது நிறுத்தமாக இருந்தது. இதற்கு முன்னர் ரவாங் - தஞ்சோங் மாலிம் இடைவழிச் சேவை என்பது ரவாங் - கோலா குபு பாரு இடைவழிச் சேவை (Rawang - Kuala Kubu Bharu Shuttle Service) என்று அழைக்கப்பட்டது.[3]
கிள்ளான் துறைமுக வழித்தடத்தில் உள்ள மற்ற பெரும்பாலான நிலையங்களைப் போலவே இந்த செரண்டா நிலையத்திலும் இரண்டு நடைபாதைகள் உள்ளன. அத்துடன் (கேடிஎம் கொமுட்டர்; கேடிஎம் இடிஎஸ் ஆகிய இரண்டு தொடருந்துச் சேவைகளும் உள்ளன. செரண்டாவின் பழைய தொடருந்து நிலையம் உடைக்கப்பட்டு விட்டது.
பயணச்சீட்டு வசதிகள்
பொதுவாக பெரிய தொடருந்துகளுக்கு ஒதுக்கப்பட்ட வசதிகளையும் இந்த செரண்டா கொமுட்டர் நிலையம் கொண்டுள்ளது.
இந்த நிலையத்தில் அடிப்படை வசதிகளுடன் பயணச்சீட்டு வசதிகளும் (Ticketing Facilities) உள்ளன. மற்றும் கூடுதலாக, நிலைய நிர்வாக பயன்பாட்டிற்க்கான இடங்கள்; பானங்களை விற்பனை செய்யும் பெட்டிகள் (Kiosks); கொமுட்டர் பயனர்களுக்குப் பிரத்தியேகமாக ஒரு கால் பாலம் (Foot Bridge) போன்றவற்றுடன் இந்த நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் இந்த நிலையம், ஊனமுற்ற பயணிகளுக்கான குறைந்தபட்ச தொழில்நுட்பப் பயன்பாடுகளையும் கொண்டுள்ளது.
Remove ads
சேவைகள்
செரண்டா கொமுட்டர் நிலயம், செரண்டா நகரத்திற்கும், அதன் புறநகர்ப் பகுதிகளுக்கும் மற்றும் பத்தாங்காலி நகரத்திற்கு அருகிலுள்ள கிராமப் பகுதிகளுக்கும் சேவை செய்கிறது. செரண்டா நகருக்கான இந்தப் புதிய தொடருந்து நிலையம் 2007 ஏப்ரல் 21-ஆம் தேதி திறக்கப்பட்டது.
இந்த நிலையம் மலாயா தொடருந்து நிறுவனத்தின் (Keretapi Tanah Melayu Berhad) கீழ் கேடிஎம் இடிஎஸ்; மற்றும் கேடிஎம் கொமுட்டர் தொடருந்து சேவைகளை வழங்குகிறது. அத்துடன் பத்தாங்காலி நகரத்திற்கான முக்கிய தொடருந்து முனையமாகவும் செயல்படுகிறது.
பேராக், உலு சிலாங்கூர் மாவட்டத்தில் செரண்டா நகரின் மேற்குப் பகுதியில் இருந்து இந்த நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்தை மலேசியக் கூட்டரசு சாலை 1-இன் வழியாகவும் அணுகலாம். தீபகற்ப மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுசாலை சற்று தொலைவில் உள்ளது. கிள்ளான் துறைமுகம் நிலையத்திற்கான நேரடி சேவைகள் 2017-இல் அறிமுகப்படுத்தப்பட்டன.
Remove ads
பழைய செரண்டா நிலைய காட்சியகம்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads