ரவாங் தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

ரவாங் தொடருந்து நிலையம்map
Remove ads

ரவாங் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Rawang Railway Station மலாய்: Stesen Keretapi Rawang); சீனம்: 万挠火车站) என்பது மலேசியா, பேராக், கோம்பாக் மாவட்டம், ரவாங் நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். ரவாங் நகரத்தின் பெயரே இந்த தொடருந்து நிலையத்திற்கும் வைக்கப்பட்டு உள்ளது.[1]

விரைவான உண்மைகள் ரவாங் Rawang, பொது தகவல்கள் ...

மலேசியாவில் மிகப் பழைமையான தொடருந்து நிலையங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் 1892-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. பின்னர் மின்மயமாக்கல் திட்டத்தின் கீழ், 2007 ஏப்ரல் 21-ஆம் தேதி, ராசா; செரண்டா; மற்றும் பத்தாங்காலி நகரங்களில் இருக்கும் கொமுட்டர் நிலையங்களுடன் இதன் சேவைகள் இணைக்கப்பட்டன.[2]

Remove ads

பொது

2015-ஆம் ஆண்டில் இருந்து, இந்த நிலையத்திற்கு கிள்ளான் துறைமுக வழித்தடத்தின் வழியாக, கேடிஎம் இடிஎஸ்; கேடிஎம் கொமுட்டர் தொடருந்துகள் சேவைகள் செய்து வருகின்றன. 2016-ஆம் ஆண்டில், ரவாங் - கிள்ளான் துறைமுக வழித்தடம்; ரவாங் - தஞ்சோங் மாலிம் வழித்தடத்துடன் இணைக்கப்பட்டது.[3]

ரவாங் தொடருந்து நிலையத்தின் சேவை 2008 சனவரி 5-ஆம் தேதி கோலா குபு பாரு வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர் 2009 சூன் 1-ஆம் தேதி இந்த சேவை தஞ்சோங் மாலிம் வரை நீட்டிக்கப்பட்டது.

கிள்ளான் துறைமுக வழித்தடம்

கிள்ளான் துறைமுக வழித்தடத்தில் உள்ள மற்ற பெரும்பாலான நிலையங்களைப் போலவே இந்த நிலையத்திலும் இரண்டு நடைபாதைகள் உள்ளன.

அத்துடன் ஒரு தீவும் உள்ளது. (கேடிஎம் கொமுட்டர்; கேடிஎம் இடிஎஸ் ஆகிய இரண்டு தொடருந்துச் சேவைகளும் உள்ளன. பழைய தொடருந்து நிலையம் உடைக்கப்பட்டு விட்டது.

பயணச்சீட்டு வசதிகள்

இந்த நிலையத்தில் அடிப்படை வசதிகளுடன் பயணச்சீட்டு வசதிகளும் (Ticketing Facilities) உள்ளன. மற்றும் கூடுதலாக, நிலைய நிர்வாக பயன்பாட்டிற்க்கான இடங்கள்; பானங்களை விற்பனை செய்யும் பெட்டிகள் (Kiosks); கொமுட்டர் பயனர்களுக்குப் பிரத்தியேகமாக ஒரு கால் பாலம் (Foot Bridge) போன்றவற்றுடன் இந்த நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.

அத்துடன் இந்த நிலையம், ஊனமுற்ற பயணிகளுக்கான குறைந்தபட்ச தொழில்நுட்பப் பயன்பாடுகளையும் கொண்டுள்ளது.

Remove ads

சேவைகள்

ரவாங் தொடருந்து நிலையம், ரவாங் நகரத்திற்கும், அதன் புறநகர்ப் பகுதிகளுக்கும் மற்றும் ரவாங் நகரத்திற்கு அருகிலுள்ள புறநகர்ப் பகுதிகளுக்கும் சேவை செய்கிறது. ரவாங் நகருக்கான இந்தப் புதிய தொடருந்து நிலையம் 1995-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.

இந்த நிலையம் மலாயா தொடருந்து நிறுவனத்தின் (Keretapi Tanah Melayu Berhad) கீழ் கேடிஎம் இடிஎஸ்; மற்றும் கேடிஎம் கொமுட்டர் தொடருந்து சேவைகளை வழங்குகிறது. அத்துடன் ரவாங் நகரத்திற்கான முக்கிய தொடருந்து முனையமாகவும் செயல்படுகிறது.

கோம்பாக் மாவட்டம்

பேராக், கோம்பாக் மாவட்டத்தில் ரவாங் நகரின் மேற்குப் பகுதியில் இருந்து இந்த நிலையம் அமைந்துள்ளது.

இந்த நிலையத்தை மலேசியக் கூட்டரசு சாலை 1-இன் வழியாகவும் அணுகலாம். தீபகற்ப மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுசாலை சற்று தொலைவில் உள்ளது. கிள்ளான் துறைமுக நிலையத்திற்கான நேரடிச் சேவைகள் 2017-இல் அறிமுகப்படுத்தப்பட்டன.

Remove ads

ரவாங் நிலைய காட்சியகம்

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads