செல்யாபின்சுக் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
செல்யாபின்சுக் மாகாணம் (Chelyabinsk Oblast, உருசியம்: Челя́бинская о́бласть, செல்யாபின்ஸ்கயா ஓபிலாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இம்மாகாணம் உரால் மலைப்பகுதியில் ஐரோப்பா, ஆசியா கண்டங்களில் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது.[11][12][13][14] இதன்தலைநகர் செல்யாபின்சுக் நகரம் ஆகும். மக்கள்தொகை: 3,476,217 (2010 கணக்கெடுப்பு).[7]
Remove ads
புவியியல்
செல்யாபின்சுக் மாகாணம் தெற்கு உரால் மலைப்பகுதியில் கிழக்குச் சரிவில் அமைந்துள்ளது. மாகாணத்தின் ஒரு சிறிய பகுதி உரால் மலைகளின் மேற்கு சரிவில் உள்ளது.
இம்மாகாணம் குர்கான் நகருக்கும், சிவெர்தலோவ்சுக் மாகாணத்திற்கும் அருகில் உள்ளது. இம்மாகாணத்தின் பெரும்பகுதி ஐரோப்பா, ஆசியா கண்டங்களின் எல்லைப் பகுதியில் உள்ளது. இவ்வெல்லை உர்சூம்கா தொடருந்து நிலையத்திற்கு அருகில் உரால்தோ கடவையில் ஒரு கற்தூண் ஒன்றினால் குறிக்கப்பட்டுள்ளது. இத்தூணில் ஒர் பக்கத்தில் ஐரோப்பா என்றும் மற்றப் பக்கத்தில் ஆசியா என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. இம்மாகாணத்தின் மகித்தோகோர்சுக் நகரம் இரண்டு கணடங்களிலும் அமைந்துள்ளது.[15]
இம்மாகாணத்தின் மொத்தப் பரப்பளவு 88,900 கிமீ2.[16]
Remove ads
மக்கள் பரம்பல்
2010 கணக்கெடுப்பின்படி, இங்குள்ள மொத்த மக்கள்தொகை 3,476,217 ஆகும்.[7] இவர்களில் 83.8% உருசியர்களும், 5.4% தத்தார்களும், 4.8% பாசுக்கீர்களும், 1.5% உக்ரைனியர்களும், 1% கசக்குகளும் உள்ளனர்.[16]
சமயம்
2012 அதிகாரபூர்வத் தகலின்படி,[17][18] 30.9% மக்கள் உருசிய மரபுவழித் திருச்சபையைப் பின்பற்றுகிறார்கள். 8% பொதுக் கிறித்தவர்களும் 5% கிழக்கு மரபுவழிக் கிறித்தவர்களும், 8% முஸ்லிம்களும், 1% சிலாவிக்கு ரொத்னோவெர்களும், 0.4% இந்துக்களும் ஆவர்.[17]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads