சே. டி. வேன்சு

From Wikipedia, the free encyclopedia

சே. டி. வேன்சு
Remove ads

சேம்சு தாவிது வேன்சு (James David Vance, பிறப்பு: 2 ஆகத்து 1984), ஐக்கிய அமெரிக்காவின் துணைக் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் எழுத்தாளர், தொழில் முனைவோர், அரசியல்வாதி, வழக்குரைஞர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். துணைக் குடியரசுத் தலைவர் ஆவதற்கு முன் அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவில் பணியாற்றி பின் ஒகையோ சார்பில் 2023-இல் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்க மூப்பவையில் பணியாற்றினார். குடியரசுக் கட்சியை சேர்ந்த இவர் 2024 தேர்தலில் தொனால்டு திரம்பினால் துணை அரசுத்தலைவர் வேட்பாளராக 2024 யூலை 15 அன்று அறிவிக்கப்பட்டார்.[1][2] ஈரூடகப்படைப்பிரில் பணிபுரிந்த ஒருவர் கட்சி சார்பில் துணை அரசுத்தலைவராக அறிவிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

விரைவான உண்மைகள் சே. டி. வேன்சுJD Vance, 50 ஆவது ஐக்கிய அமெரிக்காவின் துணைக் குடியரசுத் தலைவர் ...

ஒகையோவிலுள்ள மிடில்டவுன் உயர்நிலைப்பள்ளியில் படித்து முடித்தவுடன் வேன்சு 2003 முதல் 2007 வரையான காலகட்டத்தில் போர் செய்தியாளராக பணிபுரிந்தார். அக்காலகட்டத்தில் ஆறு மாதம் ஈராக்கிலும் பணியாற்றினார். அதன் பின் ஒகையோ மாநில பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்தை 2009-இல் பெற்றார். பின்பு 2013-இல் யேல் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து பட்டம் பெற்றார். தனது நினைவுகளைத் தொகுத்து Hillbilly Elegy: A Memoir of a Family and Culture in Crisis என்ற நூலை எழுதினார். இது நியுயார்க் டைம்சு நாளிதழின் அதிகம் விற்பனையாகும் நூல் என்று 2016-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 2016-ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்நூல் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்தது. இந்நூலை அடிப்படையாகக் கொண்டு 2020-ஆம் ஆண்டு Hillbilly Elegy என்ற பெயரிலேயே திரைப்படமும் வெளியானது. 2021-ஆம் ஆண்டு அரசியலில் பங்கெடுத்து குடியரசுக் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு சனநாயக கட்சியின் டிம் ரெயானை தோற்கடித்து ஒகையோ மாநிலத்துக்கான செனட்டராக அமெரிக்க செனட்டுக்கு 2022-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016-ஆம் ஆண்டு தேர்தலின் போது தொனால்டு திரம்பைக் கடுமையாக எதிர்த்த வேன்சு பின்பு தீவிர ஆதரவாளராக மாறினார்.

சமூகப் பிரச்சினைகளைப் பொருத்தவரை, வேன்சு ஒரு பழமைவாதியாக அறியப்படுகிறார். இவர் கருக்கலைப்பிற்கும் ஓரின பால் சேர்க்கைக்கும் எதிரான நிலைப்பாடு உடையவர். துப்பாக்கி வைத்துக்கொள்ள கட்டுப்பாடு விதிப்பதை எதிர்ப்பவர். மாறிய பாலின சிறார்களுக்கு சுகாதார பராமரிப்பை ஆர்கன்சாசு மாநிலம் தடை செய்ததை ஆதரித்தார்.[3] வரி, பங்கு சந்தையில் தலையிடுதல், மணிக்கு குறைந்த அளவு ஊதியம், காப்புரிமை, தொழிற்சங்கம் அமைத்தல் போன்றவற்றில் பொதுப்போக்கு குடியரசு கட்சியினரிடம் இருந்து மாறுபடுகிறார்.[4][5][6][7] உக்ரைனுக்கான அமெரிக்க இராணுவ உதவியை எதிர்க்கிறார்.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads