சைக்கீசு கதிர்க்குருவி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சைக்கீசு கதிர்க்குருவி (Sykes's warbler)(இடுனா ராமா) என்பது தொல்லுல மர கதிர்க்குருவி குடும்பத்தில் உள்ள சிற்றினமாகும். இது முன்னர் மரக்கதிர்குருவியின் கிளையினமாகக் கருதப்பட்டது. ஆனால் இப்போது தனிச்சிற்றினமாக இது கருதப்படுகிறது. இதன் இனப்பெருக்க வரம்பு வடகிழக்கு அறபுத் தீபகற்பத்திலிருந்து துர்கெஸ்தான், மேற்கு சீனா மற்றும் ஆப்கானித்தான் வரை உள்ளது. மரக்கதிர்க்குருவி போல, இந்தச் சிற்றினத்தின் பல உறுப்பினர்கள் குளிர்காலத்தில் இந்திய துணைக்கண்டத்திற்கு தெற்கே இலங்கை வரை வலசைப் போகின்றன.
Remove ads
சொற்பிறப்பியல்

இதனுடைய ஆங்கிலப் பெயர் இந்தியாவில் இங்கிலாந்து தடைப்படையில் பணியாற்றிய கர்னல் வில்லியம் ஹென்றி சைக்சின் நினைவாக இடப்பட்டது. கீசர்லிங் மற்றும் பிளாசியசு இடுனா பேரினப் பெயரைப் பற்றி எந்த விளக்கமும் அளிக்கவில்லை. ஆனால் நோர்சு தொன்மவியல் புராணங்களில் ஐயுன் அல்லது இடுனா என்பது வசந்தம் மற்றும் கருவுறுதல் ஆகியவற்றின் தெய்வம் ஆகும். லோகியால் இவர்களை மீட்பதற்காக ஒரு குருவியாக மாற்றப்பட்டதாக நம்பப்படுகிறது.[1] சிற்றினப்பெயரான ராமா என்பது இராமர் அல்லது விஷ்ணுவினைக் குறிப்பதாகும்.
Remove ads
வகைப்பாட்டியல்
2009ஆம் ஆண்டில் மூலக்கூறு பைலோஜெனி ஆய்வுகள் குளோரோபெட்டாவிற்கு ஒரு சகோதர இனக்குழுவாகப் பரிந்துரைத்தது. இப்போலாய்சிலிருந்து இது பிரிக்கப்பட்டது. இதன் விளைவாக இப்போலாய்சு பேரினத்திலிருந்து இந்த சிற்றினத்தை அகற்றி, மாற்றியமைக்கப்பட்ட இடுனா என்ற பழைய பேரினத்தில் வைக்கப்பட்டது.[2] ராமா மற்றும் கலிகாட்டா சிற்றினங்களிடையே கூடு கட்டுதல் மற்றும் முட்டை உருவ அமைப்பில் வேறுபாடுகள் உள்ளன.[3]
வாழ்விடம்

இது புதர்கள் மற்றும் பிற உயரமான தாவரங்களுடன் திறந்த வெளியில் காணப்படும் ஒரு சிறிய குருவி ஆகும். இவை 3-4 முட்டைகளைப் புதர் அல்லது தாவரங்களில் கூட்டில் இடுகின்றன. பெரும்பாலான கதிர்க்குருவிகளைப் இவை பூச்சி உண்ணக்கூடியவை.
விளக்கம்
இது ஒரு சிறிய கதிர்க்குருவி ஆகும், குறிப்பாக இந்தப் பேரினத்தில் உள்ள மற்ற சிற்றினங்களுடன் ஒப்பிடும்போது. இவற்றின் மேல் பகுதி வெளிர் பழுப்பு நிறத்திலும் கீழ்ப்பகுதி வெண்மை நிறத்திலும் காணப்படும். வெளிப்புற வால் இறகுகள் வெளிறிய விளிம்புகளைக் கொண்டுள்ளன. இவை குறுகிய வெளிர் தலைப்பகுதியுடன் வலுவான கூர்மையான அலகுடன் உள்ளது. சைக்கீசு கதிர்க்குருவி கதிர்க்குருவியினை விட பெரியது மற்றும் சாம்பல் நிறமானது. மேலும் பெரும்பாலானவை கிழக்கு ஆலிவேசியசு கதிர்க்குருவியினை ஒத்திருக்கிறது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
