சாய்கோம் மீராபாய் சானு

இந்திய பளுதூக்குநர் From Wikipedia, the free encyclopedia

சாய்கோம் மீராபாய் சானு
Remove ads

சாய்கோம் மீராபாய் சானு (Saikhom Mirabai Chanu) (பிறப்பு 8 ஆகஸ்ட் 1994) ஓர் இந்திய பாரம் தூக்குதல் வீரராவார். 2020 கோடைக்கால ஒலிம்பிக்கில் 49 கிலோ பெண்கள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். மீராபாய் சானு உலக வாகையாளர் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ளார். விளையாட்டுத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசால் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. இவருக்கு 2018 ஆம் ஆண்டு இந்திய அரசால் தியான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.

விரைவான உண்மைகள் தனிநபர் தகவல், தேசியம் ...

2014 பொதுநலவாய பாரம் தூக்குதல் விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 48 கிலோ எடைப் பிரிவில் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார், கிளாஸ்கோ ; கோல்ட் கோஸ்டில் நடைபெற்ற 2018 பொதுநலவாய விளையாட்டுக்களில் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்தார். 2020 கோடைகால ஒலிம்பிக்கிற்கு முன்பு, கலிபோர்னியாவின் அனாஹெய்மில் நடைபெற்ற உலக பளுதூக்குதல் வாகையாளர் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.[2]

Remove ads

2022 பர்மிங்காம் பொதுநல விளையாட்டுக்கள்

இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்ற பொதுநல விளையாட்டு 2022இல் பெண்களுக்கான 49 கிலோ பிரிவில் சானு தங்கப் பதக்கம் வென்றார்.[3][4] சினாட்ச் மற்றும் க்ளீன் அண்ட் ஜெர்க் முறையில் மொத்தம் 201 கிலோ தூக்கினார்.[5]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads