2020 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா

From Wikipedia, the free encyclopedia

2020 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா
Remove ads

தோக்கியோவில் சூலை 23 முதல் ஆகத்து 8 வரை 2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இந்தியா பங்கேற்றுள்ளது பற்றியது ஆகும். இந்த போட்டியானது முதலில் 2020 சூலை 24 முதல் ஆகத்து 9 வரை நடைபெற திட்டமிடப்பட்டது, ஆனால் கோவிட் -19 பெருந்தொற்றுநோயால், சூலை 23 முதல் 2021 ஆகஸ்ட் 8 வரை நடைபெற உள்ளது.[4] இந்த விளையாட்டுகளுக்கு இந்தியா 120 போட்டியாளர்களை அனுப்பியுள்ளது.

விரைவான உண்மைகள் 2020 ஒலிம்பிக் விளையாட்டுப் விளையாட்டுகளில் இந்தியா, ப.ஒ.கு குறியீடு ...

இந்த விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள மற்றும் வீராங்கனைகள் 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்கள் வென்றனர். நீரஜ் சோப்ரா தடகள விளையாட்டில் ஈட்டி எறியும் போட்டியில் தங்கப் பதக்கமும், சைக்கோம் மீராபாய் சானு மகளிர் பாரம் தூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், ரவி குமார் தாகியா ஆடவர் மற்போர் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், லவ்லினா போர்கோஹெய்ன் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கமும், பி.வி. சிந்து மகளிர் ஒற்றையர் இறகுப்பந்தாட்டம் போட்டியில் வெண்கலப் பதக்கமும், பஜ்ரங் புனியா ஆடவர் 67 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கமும், இந்திய தேசிய வளைதடிப் பந்தாட்ட அணி ஆடவர் வளைதடிப் பந்தாட்டம் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

Remove ads

போட்டியாளர்கள்

Thumb
தோக்கியோ 2020 ஒலிம்பிக்கிற்கான இந்தியா அணிகளை அதிகாரப்பூர்வ ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரேன் ரிஜிஜு சூன் 03 2021 அன்று வெளியிட்டார்.
Remove ads

வில்வித்தை

நெதர்லாந்தின் எர்டோசன்போசு நகரத்தில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டு உலக வில்வித்தை வெற்றியாளர் போட்டியில் ஆண்கள் அணியின் காலிறுதி கட்டத்தை எட்டியதன் மூலம் மூன்று இந்திய வில்லாளர்கள் 2020 டோக்கியோ ஆண்கள் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.[5] தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்ற 2019 ஆசிய வெற்றியாளர் போட்டிகளில் மூன்று இடங்களில் ஒன்றை பதிவு செய்ய நடைபெற்ற மகளிர் தனிநபர் காலிறுதி சுற்றில் மற்றொரு இந்திய வில் வித்தை வீராங்கனை வெற்றியைப் பெற்று டோக்கியோ செல்ல தகுதி பெற்றுள்ளார்.[6] டோக்கியோ கோடைகால ஒலிம்பிக் போட்டிகளுக்கான முழு இந்திய வில்வித்தை அணி 2021 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில் மூத்த தருந்தீப் ராய் மற்றும் உலக-ஒன்பதாம் நிலை வீராங்கனை தீபிகா குமாரி ஆகியோர் மூன்றாவது முறையாக ஒலிம்பிக்கில் கலந்து கொள்கின்றனர்.[7]

மேலதிகத் தகவல்கள் தடகளவீரர், போட்டி ...
Remove ads

தடகளம்

இந்திய தடங்க வீரர் வீராங்கனைகள் தகுதிச் சுற்று விளையாட்டுகள் மற்றும் தரவரிசைகளின்படி விளையாட தகுதிப்பெற்றனர்:[8][9]

தடப் போட்டிகள்
ஆண்கள்
மேலதிகத் தகவல்கள் தடகள வீரர், போட்டி ...
பெண்கள்
மேலதிகத் தகவல்கள் வீராங்கனை, போட்டி ...
கலப்பு
மேலதிகத் தகவல்கள் வீராங்கனை, போட்டி ...
களப் போட்டிகள்
மேலதிகத் தகவல்கள் வீரர், போட்டி ...

இறகுப்பந்தாட்டம்

இந்தியாவின் சார்பில் நான்கு இறகுப்பந்தாட்ட வீரர்கள் டோக்கியோ 2020 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கிறார்கள். இறகுப்பந்தாட்ட உலகக்கூட்டமைப்பு போட்டிகளின் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டு சூன் 15 தேதியிலான தரத்தின் மூலம் இவ்வீரர்கள் தகுதிபெற்றுள்ளனர்.ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தலா ஒருவரும் மற்றும் ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஓரிணையும் இப்போட்டிக்காகச் செல்கிறார்கள்.[10]

மேலதிகத் தகவல்கள் வீரர், போட்டி ...
Remove ads

குத்துச்சண்டை

இந்தியாவின் சார்பாக ஐந்து ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் என மொத்தமாக ஒன்பது குத்துச்சண்டை வீர்ர்கள் டோக்கியோ கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கிறார்கள். இரண்டு முறை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற விகாசு கிருசன் யாதவ், 2014 ஆசியவிளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சத்தீசு குமார், நடப்பு ஆசிய வெற்றியாளர் பூஜா ராணி, 2012 இலண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றவரும் ஆறுமுறை உலக வெற்றியாளருமான மேரிகோம், 2019 ஆம் ஆண்டு வெள்ளிப் பதக்கம் வென்ற அமிட் பங்கால், 2018 ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டாம் இடம் பிடித்த மணீசு கௌசிக் மற்றும் ஆசிசு குமார், சிம்ரஞ்சித் கவுர், லவ்லினா பொர்கோகைன் ஆகியோர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்தியக் குத்துச்சண்டை அணியில் இடம்பிடித்தவர்களாவர்.[11][12]

ஆண்கள்
மேலதிகத் தகவல்கள் வீரர், போட்டி ...
பெண்கள்
மேலதிகத் தகவல்கள் வீராங்கனை, போட்டி ...
Remove ads

குதிரையேற்றம்

கடந்த இருபது ஆண்டுகளில் முதன்முறையாக இந்தியா ஒலிம்பிக் போட்டியின் குதிரையேற்றப் போட்டியில் பங்கேற்கிறது. ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டியில் முதல் இரண்டு இடங்களைக் கைப்பற்றி இந்தியா தகுதி பெற்றுள்ளது.[13][14]

குதிரைச்சவாரி நிகழ்வு

மேலதிகத் தகவல்கள் வீரர், குதிரை ...
Remove ads

வாள் வீச்சு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா முதன்முறையாக வாள் சண்டைப் போட்டியில் பங்கேற்கிறது. சென்னையைச் சேர்ந்த சி.ஏ. பவானி தேவி பெண்கள் வாள் சண்டைப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். அங்கேரி நாட்டில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிதொடரின் காலிறுதிப்போட்டியில் அங்கேரி கொரியாவிடம் தோற்றுப்போனது. சரிசெய்யப்பட்ட அதிகாரப்பூர்வதரவரிசையின் அடிப்படையில் பவானி இப்போட்டிக்குத் தகுதி பெற்றார்.[15]

மேலதிகத் தகவல்கள் வீரர், போட்டி ...
Remove ads

வளைதடிப் பந்தாட்டம்

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் வளைதடிப் பந்தாட்ட அணி வெண்கலப் பதக்கம் வென்றது.[16]

இந்திய பெண்கள் ஹாக்கி அணி வரலாற்றிலேயே முதல் முறையாக அரை இறுதிப் போட்டி வரை முன்னேறியது. கடைசி வரை போராடியும் அர்ஜென்டினா உடனான அரை இறுதியில் தோல்வியைத் தழுவியது.[17]

மேலதிகத் தகவல்கள் அணி, போட்டி ...
Remove ads

குழிப்பந்து

2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் குழிப்பந்து வீரருடன் நுழைகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டிக்கு தகுதியான முதல் 60 வீரர்களில் அனிர்பன் லாகிரி, உதயன் மானே மற்றும் அதிதி அசோக் ஆகியோர் நேரடியாக தகுதி பெற்றுள்ளனர்.

மேலதிகத் தகவல்கள் வீரர், நிகழ்வு ...

சீருடற் பயிற்சிகள்

2020 ஒலிம்பிக் போட்டியில் இந்தியா கலைநய சீருடற் பயிற்சி விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கிறது. சீனாவின் ஆங்க்சோவில் நடைபெறவிருந்த 2021 ஆசிய வெற்றியாளர் போடி இரத்து செய்யப்பட்டதன் மூலம், செருமனியின் சிடட்கார்டு நகரத்தில் நடைபெற்ற 2019 உலக கலைநய சீருடற்பயிற்சிப் போட்டிகள் புள்ளிகளின் அடிப்படையில், ஆசிய கண்டத்தில் இருந்து தகுதிக்கு போட்டியிடும் சீருடற்பயிற்சிப் போட்டியாளராக பிரணதி நாயக் பெண்கள் தனிநபர் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[18]

பெண்கள்
மேலதிகத் தகவல்கள் வீரர், நிகழ்வு ...
Remove ads

இந்தியா வென்ற பதக்கங்கள்

2020 டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள மற்றும் வீராங்கனைகள் 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்கள் வென்றனர்.[19]

மேலதிகத் தகவல்கள் பதக்கம், பெயர் ...
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads