சைதிகள்
சியா இஸ்லாத்தின் ஒரு துணைப் பிரிவு From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜெய்திகள் (Zaydism) என்பது சியா இஸ்லாத்தின் ஒரு துணைப் பிரிவினர். ஜெய்தியிசத்தை பின்பற்றுபவர்கள் சைதியா சியா என்று அழைக்கப்படுகிறார்கள். கிபி 740ம் ஆண்டில் உமையா கலிபாவுக்கு[1] எதிரான இமாம் ஜெய்தி இப்னு அலியின்[2]தோல்வியுற்ற கிளர்ச்சியைத் தொடர்ந்து தோன்றியது ஜெய்திசம் சியா முஸ்லீம்களான பன்னிருவர் சியா மற்றும் இஸ்மாயிலிகள் போலல்லாமல், ஜெய்திகள் சில சமயங்களில் தவறாக ஐவர் [3] என்றும் அழைக்கப்படுகிறார்கள். ஜிஹாதுக்கான அழைப்பு (தாவா), இமாமுக்கு கீழ்ப்படிதல் ஜெய்திகளுக்கு தேவையான இரண்டு குணங்கள் ஆகும். உலகின் பெரும்பாலான ஜெய்திகளின் வாழ்விடங்கள் வடக்கு யேமன் மற்றும் சௌதி அரேபியாவின் நஜ்ரான் பகுதியில்.அமைந்துள்ளது.ஏமன் நாட்டு முஸ்லீம்களில் 35 முதல் 40% பேர் ஜெய்திகள் ஆவார். உசைன் பத்ரெடின் அல்-ஹூதியின் கூற்றுப்படி, ஜெய்திகள் "தங்கள் வீடுகளில் உட்காருவது" மற்றும் அநீதியான உலகில் செயலற்ற நிலையில் இருப்பது கடினம்.[4]

ஜெய்திகள் இமாம்களின் தவறான தன்மையை நம்புவதில்லை மற்றும் அவர்களுக்கு எந்தவிதமான இயற்கைக்கு அப்பாற்பட்ட பண்புகளையும் கற்பதில்லை. ஆனால் இமாம்களின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்கின்றனர்.[5] பன்னிருவர் சியா மற்றும் இஸ்மாயிலிகள் ஆகியவற்றில் காணப்படும் நாஸ் இமாமத் என்ற கருத்தையும் ஜெய்திகள் ஏற்பதில்லை. 9ம் நூற்றாண்டில் அப்பாசியக் கலீபகத்தின் படைத்தலைவரும், ஜெய்தி சியா முஸ்லீமான அலி இப்னு அபி சயீத்[6] தனது கடைசி காலத்தில் கஃபாவில் உள்ள மக்களால் காட்டிக் கொடுக்கப்பட்டதாக ஜெய்திகள் கருதுகிறார்கள்.. 2014ம் ஆண்டு நிலவரப்படி, உலக முஸ்லீம் மக்கள் தொகையில் 0.5% ஜெய்திகள் உள்ளனர்.
சபாவித்து இராச்சியத்தினருக்கு முன்னர் மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்த ஜெய்தியா பிரிவு, தற்போது சியா இசுலாமியர்களில் இரண்டாவது பெரிய பிரிவாக உள்ளது. அவர்கள் சுன்னி இசுலாம் பிரிவினரின் நம்பிக்கைகளுக்கு மிக நெருக்கமானவர்கள் மற்றும் இமாம்களின் தவறற்ற தன்மையை நம்புவதில்லை.
1990ம் ஆண்டில் ஏமனின் வடக்குப்பகுதியில் இருந்த ஜெய்திகள் சியா இஸ்லாத்தின் மரபுகளை பாதுகாக்கும் இளைஞர்களின் மறுமலர்ச்சி குழுவாக உருவாகியதுதான் ஹூத்திகள் என்று அழைக்கப்படும் அன்சார் அல்லாஹ் (கடவுளின் கட்சிக்காரர்கள்) கிளர்ச்சி குழுவினர்.
தங்களை முகமது நபிகள் வழித்தோன்றல்களாக கூறிக்கொள்ளும் ஜெய்திகள் பண்டைய ஏமனில் 1000 ஆண்டுகளுக்கும் மேலாக 1962ம் ஆண்டு வரை ஆட்சி செய்து வந்த ஜைதி இமாம் இராஜ்ஜியத்தில் முக்கிய பங்காற்றியவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த ஆட்சியாளர்கள் புதிய ஏமன் குடியரசு ஆட்சி அமைக்கப்பட்ட பிறகு அச்சுறுத்தலாக கருதப்பட்டு ஒதுக்கப்பட்டனர்.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads