சைபர்ஜெயா பல்கலைக்கழகம்
சைபர்ஜெயா நகரில் ஆய்வுப் பல்கலைக்கழகம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சைபர்ஜெயா பல்கலைக்கழகம் (மலாய்: Universiti Cyberjaya; ஆங்கிலம்: University of Cyberjaya; (UoC) என்பது மலேசியா, சிலாங்கூர், சிப்பாங் மாவட்டம், சைபர்ஜெயா நகரில் உள்ள ஓர் ஆய்வுப் பல்கலைக்கழகம் ஆகும். 2005-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், தொடக்கத்தில் மருத்துவம் மற்றும் மருந்தியல் துறையுடன் தொடங்கியது.
பல ஆண்டுகளாக வளர்ச்சி தடத்தில் பயணித்த இந்தப் பல்கலைக்கழகம்; தற்போது வணிகம், உளவியல், உயிர்மருத்துவப் பொறியியல், செவிலியர் பயிற்சி, படைப்புக் கலைகள் மற்றும் வடிவமைப்பு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட துறைகளில் உயர்க்கல்வியை வழங்கி வருகிறது.[1]
Remove ads
வரலாறு
சைபர்ஜெயா பல்கலைக்கழகம் 2019-ஆம் ஆண்டு முழு பல்கலைக்கழகத் தகுதியைப் பெற்றது.[2] அக்டோபர் 23, 2005-இல் முதன்முதலாக நிறுவப்பட்ட போது சைபர்ஜெயா பல்கலைக்கழக மருத்துவ அறிவியல் கல்லூரி (Cyberjaya University College of Medical Sciences) (CUCMS) என பெயரிடப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகம் முதலில் மருத்துவம் மற்றும் மருந்தகத்தில் இரண்டு இளங்கலைப் பட்டப்படிப்புகளை வழங்கும் இரண்டு துறைகளைக் கொண்டிருந்தது. அப்போது சைபர்ஜெயாவின் இஸ்ட்ரீட் மால் (Street Mall) வணிகப் பகுதியில் அதன் முதல் வளாகத்திலிருந்து செயல்பட்டது.
2009-ஆம் ஆண்டில், சைபர்ஜெயா பல்கலைக்கழகம் அதன் மாணவர் வளர்ச்சியின் காரணமாக ஒரு புதிய இடத்திற்கு மாற்றப்பட்டது. அதிகரித்து வந்த மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அதன் திறனையும் மேம்படுத்தியது. பின்னர் அது முழுமையான கற்பித்தல் வசதிகளையும் பெற்றது.
உயிரி மருத்துவப் பொறியியல் துறை
2010-ஆம் ஆண்டில், கூடுதல் சுகாதார அறிவியல், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார மருத்துவ திட்டங்களை வழங்க மூன்று கூடுதல் துறைகள் நிறுவப்பட்டன. 2013 ஆம் ஆண்டு வாக்கில், பல்கலைக்கழகம் எஸ்.எம்.ஆர் குழுமத்தால் கையகப்படுத்தப்பட்டது. 2015-ஆம் ஆண்டில், சைபர்ஜெயா பல்கலைக்கழகம் அதன் சுகாதார பாதுகாப்புத் துறையை நிறுவியது. பின்னர் 2018-ஆம் ஆண்டில், பெர்சியாரன் பெஸ்தாரியில் உள்ள அதன் புதிய வளாகத்திற்கு மாற்றப்பட்டது.
2023-ஆம் ஆண்டில், சைபர்ஜெயா பல்கலைக்கழகம் அதன் படைப்புக் கலைத் துறை; வடிவமைப்புத் துறை; மற்றும் உயிரி மருத்துவப் பொறியியல் துறையையும் நிறுவியது.
Remove ads
துறைகள்
இந்தப் பல்கலைக்கழகத்தில் 9 துறைகளும் இரண்டு கல்வி மையங்களும் உள்ளன - இவை அனைத்தும் சைபர்ஜெயாவில் உள்ள முதன்மை வளாகக் கட்டிடத்தில் உள்ளன.[3]
- மருத்துவத் துறை
- மருந்தியல் துறை
- உயர் சுகாதார அறிவியல் துறை
- உளவியல் சமூக அறிவியல் துறை
- பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை
- பாரம்பரிய மருத்துவத் துறை
- வணிகம் மற்றும் தொழில்நுட்பத் துறை
- செவிலியர் துறை
- படைப்பு கலை மற்றும் வடிவமைப்பு துறை
- உயிரி மருத்துவப் பொறியியல் மையம்
- அறக்கட்டளை, மொழிகள் மற்றும் பொது ஆய்வுகள் மையம்
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads


