சைவச் சிற்றிலக்கியங்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சைவச் சிற்றிலக்கியங்கள் என்பவை சைவ சமயக் கடவுள்களின் மீது பாடப்பெற்ற சிற்றிலக்கிய நூல்களாகும். கோவை, தூது, உலா, பரணி, பிள்ளைத்தமிழ் போன்ற சிற்றிலக்கிய வகைகள் சிவபெருமான், உமை, விநாயகன், முருகன் போன்றோர் மீது பாடல்பெற்றவை தமிழில் நூல்களாகவும், தனிப்பாடல்களாகவும் உள்ளன.[1]
தமிழ் சிற்றிலக்கிய நூல்கள் சைவ சமயத்தினைச் சார்ந்தே முதன் முதலாக இயற்றிப்பட்டுள்ளன. அவற்றுள் பலவும் கோவை, உலா, கலம்பகம், பிள்ளைத்தமிழ், அந்தாதி, சதகம், பரணி, பல்வேறு பாவகைகளில் எண்ணிக்கைக் குறித்து எழுந்த மாலைகள், பள்ளு, குறவஞ்சி போன்ற இலக்கிய வகைகளுள் எழுதப்பெற்றுள்ளன. [2]
சைவச் சிற்றிலக்கியங்களுள் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து, பாம்பன் சுவாமிகள், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள், திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் ஆகியோர் பாடிய முருகனை பற்றிவை சில எடுத்துக்காட்டுகளாகும். சைவ சமயம் சார்ந்த தமிழ் மொழி வளர்ச்சிக்கு இவ்வகை சைவச் சிற்றிலக்கியங்கள் பெரும் தொண்டாற்றின. [3]
Remove ads
முதல் தமிழ் சிற்றிலக்கியம்
ஒட்டக்கூத்தர் எழுதிய குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கியமே முதல் தமிழ் சிற்றிலக்கியம் என்று கூறுகின்றனர். [4]
அந்தகக்கவி வீரராகவ முதலியார் நூல்கள்
அந்தகக்கவி வீரராகவ முதலியார் இயற்றியுள்ள திருக்கழுக்குன்றப் புராணம், திருக்கழுக்குன்ற மாலை, சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், திருவாரூர் உலா, சந்திரவாணன் கோவை மற்றும் பல தனிப்பாடல்களை சைவச் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்ததாகும்.
காண்க
ஆதாரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads