சோங் மாவட்டம்

மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

சோங் மாவட்டம்map
Remove ads

சோங் மாவட்டம் (மலாய் மொழி: Daerah Song; ஆங்கிலம்: Song District; சீனம்: 宋区) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; காப்பிட் பிரிவில் உள்ள ஒரு மாவட்டமாகும்.

விரைவான உண்மைகள் சோங் மாவட்டம், நாடு ...
Thumb
சோங் மாவட்டத்தின் வரைபடம்

இந்த மாவட்டம் ராஜாங் ஆற்றின் துணை ஆறான கத்திபாசு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. சோங் மாவட்டத்தின் தலைநகரமான சோங் நகரம்; ராஜாங் ஆறு வரை செல்லும் ஆற்றுப் போக்குவரத்துக்கு ஒரு முக்கியமான நிறுத்தமாகத் திகழ்கின்றது.

Remove ads

சொற்பிறப்பியல்

இந்த மாவட்டத்திற்கு முதலில் காயான் மக்கள் ’லோங்’ (Long) என்று பெயர் வைத்தார்கள். அவர்களின் மொழியில் ஆற்று நீரோடை என்று பொருள்படும். காயான் மக்கள் இபான் மக்களால் தோற்கடிக்கப்பட்டனர். அதன் பிறகு, காயான்களுக்கு எதிராக இபான் மக்கள் வெற்றி பெற்றதை நினைவு கூறுவதற்காக, அந்த இடத்திற்கு 'சோங்' என்ற இபான் வீரரின் பெயரை மறுபெயரிட்டனர்.

'சோங்' என்ற பெயரின் தோற்றத்தின் மற்றொரு பதிப்பு மெலனாவ் புராணத்தில் இருந்து வந்ததாகவும் நம்பப்படுகிறது. ஒரு காலத்தில் சிபு பகுதியில் உள்ள நாங்கா கிராமத்தில் இருந்து ஒரு மெலனாவ் விதவை 'சோங்' கிராமத்திற்கு வந்தாள்.[1]

விவசாயம் செய்வதற்காக இன்றைய சோங் ஆற்று முகத்துவாரத்திற்குச் செல்வாள். அவளுடைய உறவினர்கள் அவளை அடிக்கடி வந்து பார்ப்பார்கள். அவள் எந்த இடத்திற்குச் செல்ல விரும்புகிறாள் என்று அவளிடம் கேட்டால், "ரூமா சோங்" என்று கூறுவாளாம். இதனால் அப்பகுதிக்கு 'சோங்' என்று பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.[1]

Remove ads

வரலாறு

Thumb
1960-களில் சரவாக் சோங் நகரம்

காயான் மக்கள் (Kayan People) சோங் மாவட்டத்தில் குடியேறிய முதல் குழுவாகும். அந்த நேரத்தில், காயான்கள் நாடோடி இன மக்கள். அதே நேரத்தில், இன்றைய இந்தோனேசியா கலிமந்தான் பகுதியில் இருந்து இபான் மக்கள் (Iban People) இடம்பெயர்ந்து, விவசாயம் செய்வதற்காக கத்திபாசு ஆற்றின் (Katibas River) கரைகளில் குடியேறினர். இந்த இடம் இப்போது சோங் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

இந்த நிலையில், காயான் மக்களுக்கும்; இபான் மக்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டன. அந்த மோதல்கள் விரைவில் ஒரு போராக வளர்ந்தது. அதில் இபான் மக்கள் வெற்றி பெற்றனர். தோல்வியை ஏற்றுக் கொண்ட காயான் மக்கள் பெலாகா மாவட்டத்திற்குள் (Belaga District) இடம் பெயர்ந்தனர்.[1]

பணவியல் முறை அறிமுகம்

மலாய்க்காரர்களும் சீனர்களும் முதன்முதலில் 1800-களில் சோங் நகரத்திற்கு 9Song Town) வந்தனர். ஆற்றங்கரையில் மரத்திலான கடைகளைக் கட்டினர். ஆற்றில் மிதக்கும் மிதவுக் கடைகளை (Floating Shops) திறந்தனர். ஆரம்பத்தில், பண்டமாற்று முறை பயன்படுத்தப்பட்டது. ஆனால் சோங் மாவட்டத்தை சரவாக் இராச்சியம் (Kingdom of Sarawak) கையகப்படுத்திய பின்னர், பணவியல் முறை (Monetary System) அறிமுகம் செய்யப்பட்டது.

புரூக் அரசாங்கத்தின் நிர்வாகம்

1870-இல், புரூக் அரசாங்கம் நங்கா சாங் (Nanga Song) நகரில் ஒரு கோட்டையைக் கட்டியது. இக்கோட்டை சாங் மாவட்டத்தின் முதல் நிர்வாக மையமாகவும் செயல்பட்டது. மற்றும் கத்திபாசு ஆற்றில் இபான் மக்களின் எழுச்சிகளைத் தடுக்கும் நோக்கத்துடனும் அந்தக் கோட்டை கட்டப்பட்டது.

புரூக் அரசாங்கம் மதிப்பீட்டு வரியை அறிமுகப் படுத்தியதை இபான் மக்கள் எதிர்த்தனர். கிளர்ச்சிகள் 1900 வரை நீடித்தன. 1873-இல், சிபு பிரிவு நிறுவப்பட்டது. காப்பிட் மற்றும் சோங் துணை மாவட்டங்கள் [சிபு பிரிவு|சிபு பிரிவில்]] சேர்க்கப்பட்டன.

பண்டமாற்று வர்த்தகம்

1937-இல், சோங் நகரில் 10 மலாய் வீடுகள் இருந்தன. சோங் நகரத்தில் உள்ள மலாய் வணிகர்கள் அபாங் (Abang) என்று அழைக்கப்பட்டனர். அபாங் என்பதின் அர்த்தம் "பிரபு". 1820-களில், காடுகளின் தாவரப் பொருள்களுக்கு ஈடாக இபான்களுடன் பண்டமாற்று வர்த்தகம் செய்தனர்.[2]

மலாய்க்காரர்கள் காட்டுப் பொருட்களை சிபாவ் நகரில் (Sibau Town) விற்பார்கள். இந்த நகரம் இப்போதைய சிபு நகரம். சிங்கப்பூரில் இருந்து வரும் கப்பல்கள் சிபுவில் நங்கூரமிட்டு காட்டில் உள்ள பொருட்களை விற்பனைக்காக வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லும்.[2]

பிரித்தானிய போர்னியோவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பு

சிபுவுக்கு வரும் கப்பல்கள், அன்றாடத் தேவைகளான உப்பு, சர்க்கரை, உப்பு மீன், தட்டுகள், கிண்ணங்கள், மட்பாண்டங்கள் மற்றும் துணிமணிகள் போன்றவற்றை உள்ளூர் மக்களுடன் வர்த்தகம் செய்ய கொண்டு வந்தன.[1]

ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது (Japanese Occupation of British Borneo), நேச நாடுகள் (Allied Forces) மற்றும் ஜப்பானியரின் குண்டுவெடிப்புகளினால் சோங் நகரத்தில் பல கட்டிடங்களை அழிந்தன. போர் காரணமாக சோங் நகரத்தை விட்டு பலர் வெளியேறினர்.[2]

காலனித்துவ அரசாங்கத்தின் நிதியுதவி

ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது சோங் நகரம் அதிகமாய்ச் சேதம் அடைந்தது. அத்துடன் ஜப்பானிய நிர்வாகத்தின் போது மக்கள் கடுமையாகவும் பாதிக்கப் பட்டனர்.

இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் சோன் நகரத்தில் வசித்தவர்களுக்கு, அவர்களின் வீடுகளை மீண்டும் கட்டுவதற்கு பிரித்தானிய காலனித்துவ அரசாங்கம் நிதியுதவி செய்தது.

2 ஏப்ரல் 1973-இல், காப்பிட் பகுதி காப்பிட் பிரிவாக மேம்படுத்தப்பட்டது. அதே நேரத்தில், சோங் பகுதி துணை மாவட்டமாகத் தரம் உயர்த்தப்பட்டது.

Remove ads

சான்றுகள்

இவற்றையும் பார்க்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads