சோன்மார்க்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சோன்மார்க் (Sonmarg), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காந்தர்பல் மாவட்டத்தில் அமைந்த மலை வாழிடமாகும். இதனை தங்கப் புல்வெளி என்றும் அழைப்பர் ("Meadow of Gold")
Remove ads
புவியியல்
சோன்மார்க்கிலிருந்து இமயமலையின் 5000 மீட்டர் உயரமுடைய கோல்காய், அமர்நாத், மற்றும் மச்சோய் பனி கொடுமுடிகளை காணலாம்.
ஜீலம் ஆற்றின் துணை ஆறான நல்லா சிந்து ஆற்றின் கரையில் உள்ள சோன்மார்க் ஊசியிலைக் காடுகளைக் கொண்டது. மாநிலத் தலைநகரான ஸ்ரீநகருக்கு வடகிழக்கே இமயமலையில் 87 கி.மீ. தொலைவில் உள்ளது. இது சிறந்த கோடைக்கால சுற்றுலாத் தலமாகும்.[1] அறுபது மைல் நீளங்கொண்ட சோன்மார்க் சமவெளி பசுமையான புல்வெளிகள் கொண்டது.
Remove ads
மக்கள்தொகை பரம்பல்
122 குடியிருப்புகளைக் கொண்ட சோன்மார்க் ஊரின், 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள்தொகை 1,051 ஆகும். அதில் ஆண்கள் 579 ஆகவும்; பெண்கள் 472 ஆகவும் உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 53.40 % ஆகவுள்ளது.[2] இதன் மக்கள்தொகையில் 95% மேலாக இசுலாமியர்கள் உள்ளனர்.
சுற்றுலா
அழகிய புல்வெளிகளைக் கொண்ட சோன்மார்க்கின் அழகைக் காணச் சுற்றுலாப் பயணிகளுக்கு, ஏப்ரல் மாத இறுதியில், சோன்மார்க் செல்வதற்கான சாலை திறந்து விடப்படுகிறது.
சோன்மார்க்கிலிருந்து 15 கி.மீ. தொலைவில் பால்தால் எனும் அமர்நாத் கோயிலின் அடிவார முகாம் உள்ளது.[3][4]
போக்குவரத்து
ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைநகரம் ஸ்ரீநகரிலிருந்து 87 கி.மீ. தொலைவில் உள்ள சோன்மார்க்கை, தேசிய நெடுஞ்சாலை 1 டி வழியாக மூன்று மணி பயண நேரத்தில் அடையலாம்.[5]
தட்பவெப்பம்
சோன்மார்க் ஊரின் சராசரி வெப்பம் 6.5 °C ஆகும். ஆண்டு சராசரி மழைப்பொழிவு 932 மிமீ ஆகும்.
Remove ads
படக்காட்சிகள்
- தங்கப் புல்வெளி எனப்படும் சோன்மார்க் சமவெளி
- சிர்பால் சோன்மார்க்
- நீல்கிரார் சோன்மார்க்கில் நல்லா சிந்து
- சோன்மார்க் தாஜிவாஸ் பனிமலை
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads