ச்

தமிழ் மொழியின் 18 மெய்யெழுத்துக்களுள், வல்லின மெய்யெழுத்துக்கள் ஆறில் ஒன்று. From Wikipedia, the free encyclopedia

ச்
Remove ads

ச் (ச்) தமிழ் மொழியின் எழுத்துகளில் ஒன்று. இது தமிழ் நெடுங்கணக்கில் பதினாறாவது எழுத்து. இது மொழியின் ஓர் ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "சகர மெய்" அல்லது சகர ஒற்று என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்து கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "இச்சன்னா" என வழங்குவர்.

விரைவான உண்மைகள் ச், தமிழ் எழுத்துக்கள் ...
Remove ads

"ச்" இன் வகைப்பாடு

தமிழ் எழுத்துகளின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் ச் மெய்யெழுத்து வகையைச் சேர்ந்தது. மெய்யெழுத்துகள் அரை மாத்திரை அளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் அரை மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்[1]

தமிழ் எழுத்துகளில் மெய்யெழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று இனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ச் வல்லின மெய் வகையைச் சேர்ந்தது. இவ்வெழுத்து, வன்மையான ஓசை உடையது ஆதலால் வல்லின வகையுள் சேர்க்கப்பட்டுள்ளது.

Remove ads

இனவெழுத்துகள்

எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் எழுத்துகளை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. ஒலியின் பிறப்பிடம், முயற்சி என்பவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது ச், ஞ் என்னும் இரண்டும் நாக்கின் நடு மேல்வாயின் நடுவைப் பொருந்த உருவாவதால் ச், ஞ் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று இன எழுத்தாக அமைகின்றன.[2].

சகர உயிர்மெய்கள்

ச் தமிழ் எழுத்துகளில் அடிப்படையான எழுத்து. ஒலி அடிப்படையில் ச் உடன் பிற உயிர்கள் சேரும்போது சகர உயிர்மெய்கள் பெறப்பட்டாலும், வரி வடிவத்தில் அகரத்தோடு சேர்ந்த சகர வர்க்க எழுத்தே அடிப்படையான வரிவடிவமாக உள்ளது. இவ்வரிவடிவுடன் புள்ளி ஒன்றைச் சேர்ப்பதன் மூலமே தனி மெய்யான ச் பெறப்படுகின்றது.


சகர மெய், 12 உயிரெழுத்துகளுடனும் சேர்ந்து உருவாகும் உயிர்மெய் எழுத்துகளையும் அவற்றின் பெயர்களையும் கீழுள்ள அட்டவணை காட்டுகின்றது.

மேலதிகத் தகவல்கள் சேர்க்கை, உயிர்மெய்கள் ...

குறிப்புகள்

உசாத்துணைகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads