ழ்

247 தமிழ் எழுத்துக்களில், 18 மெய்யெழுத்துக்களுள், இடையின மெய்யெழுத்துக்கள் ஆறில் ஒன்று. From Wikipedia, the free encyclopedia

ழ்
Remove ads

ழ் (ழ்) தமிழ் மொழியின் எழுத்துகளில் ஒன்று. இது தமிழ் நெடுங்கணக்கில் இருபத்தெட்டாவது எழுத்து. இது மொழியின் ஓர் ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "ழகர மெய்" அல்லது "ழகர ஒற்று" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்து கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "இழ்ழன்னா" என வழங்குவர்.

விரைவான உண்மைகள் ழ், தமிழ் எழுத்துக்கள் ...
Remove ads

"ழ்" இன் வகைப்பாடு

Thumb
'ழ்' எழுதும் முறை

தமிழ் எழுத்துகளின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் ழ் மெய்யெழுத்து வகையைச் சேர்ந்தது. மெய்யெழுத்துகள் அரை மாத்திரை அளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் அரை மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்[1]

தமிழ் எழுத்துகளில் மெய்யெழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று இனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ழ் இடையின மெய் வகையைச் சேர்ந்தது. இவ்வெழுத்து, வல்லினம் பிறக்கும் மார்புக்கும், மெல்லினம் பிறக்கும் மூக்குக்கும் இடைப்பட்ட இடமான கழுத்தில் பிறப்பதால் இடையின வகையுள் சேர்க்கப்பட்டுள்ளது.

Remove ads

இனவெழுத்துகள்

எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் எழுத்துகளை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய ஆறும் ஓரினத்தைச் சேர்ந்தவையாகக் கொள்ளப்படுகின்றன.[2].

குறிப்புகள்

உசாத்துணைகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads