2025
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2025 ஆம் ஆண்டு (MMXXV) கிரிகோரியின் நாட்காட்டியின் படி திங்கட்கிழமையில் துவங்கிய சாதாரண ஆண்டாகும். இது பொ.ஊ. 2025-ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படுகிறது. இது மூன்றாம் ஆயிரவாண்டின் 25-ஆவது ஆண்டும், 21-ஆம் நூற்றாண்டின் 25-ஆவது ஆண்டும், 2020களின் ஆறாவது ஆண்டும் ஆகும்.
Remove ads
நிகழ்வுகள்
சனவரி
- சனவரி 1
- ஐரோப்பிய ஒன்றியப் பேரவையின் தலைமைப் பொறுப்பை அங்கேரிக்குப் பின்னர் போலந்து எடுத்துக் கொண்டது.[1]
- பல்காரியாவும், உருமேனியாவும் செங்கன் பகுதியில் இணைவதற்கான செயல்முறையை முடித்து, நில எல்லைக் கட்டுப்பாடுகளை நீக்கின.[2]
- ஒரே பாலினத் திருமணத்தைச் சட்டப்பூர்வமாக்கிய 37-ஆவது நாடாக லீக்கின்ஸ்டைன் மாறியது.[3]
- சனவரி 6
- இந்தோனேசியா பிரிக்சு அமைப்பின் 10-ஆவது உறுப்பினராக இணைந்தது.[4][5]
- சனவரி 7
- 7.1 அளவு நிலநடுக்கம் திபெத்தைத் தாக்கியதில், 126 பேர் உயிரிழந்தனர்.[6]
- லாசு ஏஞ்சலசில் அதன் வரலாற்றில் மிகவும் அழிவுகரமான, பலத்த காற்று மற்றும் நீடித்த வறட்சி நிலைமைகளால் தூண்டப்பட்ட காட்டுத்தீ பரவியதில், ஆயிரக்கணக்கான கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன. ஏழு இறப்புகள் பதிவாகின.[7]
- சனவரி 10 – 2024 ஆம் ஆண்டு, உலக வரலாற்றில் மிகவும் சூடான ஆண்டு என ஐரோப்பிய கோர்ப்பனிக்கசு காலநிலை மாற்ற சேவை நிறுவனம் அறிவித்தது.[8]
- சனவரி 15 – இசுரேல்-ஹமாஸ் போர்: இசுரேலும் அமாசும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், இசுரேலிய - பாலத்தீனப் பணயக்கைதிகளைப் பரிமாறிக்கொள்வதற்கும், பன்னாட்டு உதவியை அனுமதிப்பதற்கும் நோக்கமாகக் கொண்ட ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்தை அங்கீகரித்தன.[9]
- சனவரி 19 – இசுரேல்-ஹமாஸ் போர்: போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.[10]
- சனவரி 21 – துருக்கியில் உணவு விடுதி ஒன்றில் தீப்பிடித்ததில், 78 பேர் உயிரிழந்தனர்.[11]
- சனவரி 22 – தாய்லாந்து 38-ஆவது நாடாகவும், தென்கிழக்காசியாவில் முதல் நாடாகவும் ஒரு-பால் திருமணத்தை சட்டபூர்வமாக்கியது.[12]
- சனவரி 29 – 64 பேருடன் சென்ற அமெரிக்காவின் ஈகிள் 5342 வானூர்தி, மூவருடன் சென்ற பிளாக் கோக் இராணுவ உலங்குவானூர்தியுடன் வாசிங்டன், டி. சி.யில் நடுவானில் மோதியதில், பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர்.[13][14]
- சனவரி 30 – அரசமைப்புச் சட்ட மாற்றங்களை அடுத்து, நிக்கராகுவா இரட்டை ஆட்சி முறைக்கு மாறியது. தானியேல் ஒர்ட்டேகா, ரொசாரியோ முரிலியோ இருவரும் அரசுத்தலைவர்களானார்கள்.[15]
பெப்ரவரி
- பெப்ரவரி 18
- உருசியாவும் ஐக்கிய அமெரிக்காவும் பண்ணுறவாண்மையை மீட்டெடுப்பதற்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டதாக விளாதிமிர் பூட்டின் அறிவித்தார்.[16]
- 1922-இல் கண்டுபிடிக்கப்பட்ட துட்டன்காமனின் கல்லறைக்குப் பிறகு, இரண்டாம் தூத்மோசின் கல்லறை இரண்டாவதாகக் கண்டுபிடிக்கப்பட்டதாக எகிப்து அறிவித்தது. இதன் மூலம் எகிப்தின் 18-ஆம் வம்சத்தைச் சேர்ந்த பார்வோன் கல்லறைகள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[17][18]
மார்ச்சு
- மார்ச்சு 2 – பயர்ஃபிளை ஏரோஸ்பேசு தொழில்நுட்பச் சிக்கல்கள் இல்லாமல் நிலாவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய முதல் வணிக நிறுவனமானது.[19][20]
- மார்ச்சு 5 – தார்பூரில் நடந்த இனப்படுகொலைக்கு காரணமான ஆர்.எஸ்.எஃப் இயக்கத்தை ஆதரிப்பதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகம், இனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கையை மீறியதாகக் குற்றம் சாட்டி, சூடான் அனைத்துலக நீதிமன்றத்தில் அமீரகத்திற்கு எதிராக வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தது.[21]
- மார்ச்சு 8 – பல ஆண்டுகளாக நாட்டின் மிக மோசமான வன்முறையாக விவரிக்கப்படும் அலவைதுப் பகுதியில் சிரிய இடைக்கால அரசுப் பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட அடக்குமுறையில் பொதுமக்கள் உட்பட 1,000-இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.[22]
- மார்ச்சு 11 – மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் கைது ஆணையைப் பெற்ற பின்னர், பிலிப்பீன்சின் முன்னாள் அரசுத்தலைவர் ரொட்ரிகோ துதெர்த்தே பிலிப்ப்[ஈன்சில் கைது செய்யப்பட்டார்.[23]
- மார்ச்சு 13 – 16 – ஐக்கிய அமெரிக்காவில் மணிக்கு 170 மைல் வேகத்தில் காற்று வீசிய கடுமையான புயல்களாலும், குறைந்தது 92 சூறாவளிகளாலும், குறைந்தது 40 பேர் உயிரிழந்தனர்.[24]
- மார்ச்சு 16 – வடக்கு மக்கெதோனியாவின் கோச்சானியில் உள்ள ஒரு இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 59 பேர் கொல்லப்பட்டனர், 155 பேர் காயமடைந்தனர்.[25]
- மார்ச்சு 18 – காசாக்கரையில் இசுரேல் பரவலான வான்வழி குண்டுவீச்சுகளையும் தாக்குதல்களையும் நடத்தி, குழந்தைகள் உட்பட குறைந்தது 591 பேரைக் கொன்றது, சனவரியில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.[26]
- மார்ச்சு 28 – மியான்மரில் 7. 7-அளவு நிலநடுக்க ஏற்பட்டதில் 5,413 பேர் உயிரிழந்தனர்.[27]
ஏப்ரல்
- ஏப்ரல் 1 – எசுபேசுஎக்சு பால்கன் 9 ஏவூர்தியில் ஏவப்பட்ட பிராம்2 விண்கலம், முனையப் பிற்போக்கு சுற்றுப்பாதையில் நுழைந்த முதல் மனித விண்வெளிப் பறப்பானது[28]
- ஏப்ரல் 8 – டொமினிக்கன் குடியரசு, சாந்தோ தொமிங்கோவில் நடைபெற்ற ரூபி பெரெசின் இசை நிகழ்ச்சியின் போது, ஒரு இரவு விடுதியின் கூரை இடிந்து விழுந்ததில், பெரெசு உட்படக் குறைந்தது 231 பேர் உயிரிழந்தனர்.[29]
- ஏப்ரல் 17 – 124 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள கே2-18பி புறக்கோளின் வளிமண்டலத்தில் பூமியில், உயிரினங்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதாக அறியப்படும் இரண்டு சேர்மங்களான டைமெத்தில் சல்பைடு, டைமெத்தில் டைசல்பைடு அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது[30]
- ஏப்ரல் 22 – இந்தியாவின், சம்மு காசுமீரில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில், சுற்றுலாப் பயணிகள் குழு மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர், 50-இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.[31]
மே
- மே 3:
- ஆத்திரேலியப் பொதுத் தேர்தலில் அந்தோனி அல்பனீசி தலைமையிலான தொழிற்கட்சி அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது.[32]
- 2025 சிங்கப்பூர் பொதுத்தேர்தல்: லாரன்சு வோங் தலைமையிலான மக்கள் செயல் கட்சி அமோக வெற்றி பெற்று, ஒரு பெரும்பான்மை அரசாங்கத்தைத் தக்க வைத்துக் கொண்டது.[33]
- மே 6
- செருமனியின் பொதுத்தேர்தலில் பிரீத்ரிக் மெர்சு செருமனியின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[34]
- 2025 இந்தியா-பாக்கித்தான் முரண்பாடு: இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த பகல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாக்கித்தான் எல்லைக்குள் பல ஏவுகணைகளை இந்தியா ஏவியது.[35]
- மே 7 – பதினான்காம் லியோ புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[36]
- மே 12 – துருக்கியுடன் போர் நிறுத்தம் அறிவித்த பின்னர் குர்திசுத்தான் தொழிலாளர் கட்சி கலைக்கப்படுவதாக அறிவித்தது.[37]
சூன்
- சூன் 1 – உருசிய இராணுவத் தளங்கள் மீது உக்ரைன் சிலந்திவலை நடவடிக்கை என்ற பெயரில் ஒரு பெரிய ஆளில்லா வான் தாக்குதலை நடத்தியது. உருசிய வான்படையின் 40-இற்கும் மேற்பட்ட வானூர்திகள் தாக்கப்பட்டன.[38]
- சூன் 12 – இலண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா 171 போயிங் 787 ட்ரீம்லைனர் வானூர்தி இந்தியாவில் அகமதாபாது நகரில் வீழ்ந்ததில் 229 பயணிகள், 12 பணியாளர்கள், தரையில் 19 பேர் உயிரிழந்தனர். ஒரு பயணி மட்டும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.[39][40]
- சூன் 13 – ஈரான்-இசுரேல் போர்: ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இசுரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி, ஒசைன் சலாமி உள்ளிட்ட இராணுவத் தளபதிகளைக் கொன்றது; ஈரான் பதிலடி கொடுத்தது.[41][42]
- சூன் 22 – ஈரான்-இசுரேல் போர்: அமெரிக்கா ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது B-2 ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது[43]
- சூன் 23 – கத்தார், ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.[44]
- சூன் 25 – ஆக்சியம் 4 திட்டம் தொடங்கப்பட்டது. இந்தப் பணியில் நான்கு விண்வெளி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர், இதில் பனிப்போர் முடிந்ததிலிருந்து போலந்து, இந்தியா (சுபான்சூ சுக்லா) நாடுகளைச் சேர்ந்த முதல் விண்வெளி வீரர்கள் அடங்குவர்.[45]
சூலை
Remove ads
இறப்புகள்
- சனவரி 4 – இராசகோபாலன் சிதம்பரம், இந்திய அணுக்கரு இயற்பியலாளர்[47] (பி. 1936)
- சனவரி 9 – பி. ஜெயச்சந்திரன், பின்னணிப் பாடகர் (பி. 1944)
- சனவரி 10 – அந்தனி ஜீவா, இலங்கை மலையக எழுத்தாளர் (பி. 1944)
- சனவரி 17 – குழந்தை ம. சண்முகலிங்கம், ஈழத்து நாடகக் கலைஞர் (பி. 1931)
- சனவரி 17 – சிவா பசுபதி, இலங்கையின் முன்னாள் சட்டமா அதிபர் (பி. 1928)
- சனவரி 29 – மாவை சேனாதிராசா, இலங்கை அரசியல்வாதி (பி. 1942)
- பெப்ரவரி 4 – புஷ்பலதா, தென்னிந்திய நடிகை
- ஏப்ரல் 9 – குமரி அனந்தன், தமிழக அரசியல்வாதி, தமிழறிஞர் (பி. 1933)
- ஏப்ரல் 21 – திருத்தந்தை பிரான்சிசு (பி. 1936)
- ஏப்ரல் 25 – கி. கஸ்தூரிரங்கன், இந்திய விண்வெளி அறிவியலாளர் (பி. 1940)
- மே 19 – யோசப் பொன்னையா, மட்டக்களப்பு கத்தோலிக்க மறைமாவட்டத்தின் முதலாவது ஆயர் (பி. 1952)
- சூன் 17 – கோ. பழனிவேல், மலேசிய-இந்திய அரசியல்வாதி (பி. 1949)
- சூலை 4 – வா. மு. சேதுராமன், தமிழறிஞர், கவிஞர் (பி. 1935)
- சூலை 15 – சரோஜாதேவி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1938)
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads