ஜஹாஜ் கோதி அருங்காட்சியகம், ஹிசார்

From Wikipedia, the free encyclopedia

ஜஹாஜ் கோதி அருங்காட்சியகம், ஹிசார்
Remove ads

ஜஹாஜ் கோதி அருங்காட்சியகம் (Jahaj Kothi Museum)இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹிசாரில் உள்ள, 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணக் கோவிலாக இருந்த இடமாகும். இது ஜார்ஜ் தாமஸின் வசிப்பிடமாகவும் இருந்தது (அண்.1756 - 22 ஆகஸ்ட் 1802). ஜேம்ஸ் ஸ்கின்னர் ( அண்.1778 - 1841), ஹிசார் பேருந்து நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள பிரோசு சா அரண்மனை வளாகத்திற்குள் தங்கியிருந்தார்.[1]

விரைவான உண்மைகள் அமைவிடம், ஆள்கூற்று ...
Remove ads

வரலாறு

ஜஹாஜ் கோதி அருங்காட்சியகம் பிரோசு சா அரண்மனை வளாகத்திற்குள் அமைந்திருக்கும் ஒரு பிற்காலத்தைச் சேர்ந்த கட்டடமாகும். இது இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இது ஜஹாஜ் என்று அழைக்கப்படுகிறது. ஜஹாஜ் என்ற சொல்லுக்கு இந்தியில் கப்பல் என்று பொருளாகும். இதன் வடிவம் ஒரு கப்பலை ஒத்து அமைந்திருப்பதால் இது அவ்வாறு அழைக்கப்படுகிறது. இது முன்னர் ஒரு சமணக் கோவிலாக இருந்தது, பின்னர் இது ஐயர்லாந்தைச் சேர்ந்த சாகசக்காரர் ஜார்ஜ் தாமஸால் ( அண்.1756 - 22 ஆகஸ்ட் 1802) என்பவரால் இல்லமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

ஜார்ஜின் தந்தை ஒரு ஏழை கத்தோலிக்க குத்தகைதார விவசாயியாக இருந்தார். ரோஸ்கிரியாவுக்கு அருகில் அவர் வசித்து வந்தார். ஜார்ஜ் குழந்தையாக இருந்தபோது அவர் இறந்தார். முதலில் யோகால் என்னும் இடத்தில் சிறை பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த [2] அவர் ஒரு கூலியாளாக துறைமுகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். தாமஸ் சென்னையில் இருந்த பிரித்தானிய கடற்படையில் இருந்து 1781ஆம் ஆண்டில் விலகினார். இன்னும் கல்வியறிவில்லாத அவர் வடக்கே 1787 ஆம் ஆண்டில் பிண்டாரிகளை ஒரு குழுவாகத் திரட்டி அவர்களை தில்லி நோக்கி வழிநடத்திச் சென்றார். சர்தானா [3] என்னும் இடத்தைச் சேர்ந்த பேகம் சம்ரூ என்பவரிடம் பணியாற்றினார். அந்தப் பெண்மணிக்கு ஆதரவாக ஒரு பிரெஞ்சுக்காரரால் நீக்கப்பட்டார். பின்னர் அவர் மராத்தா தலைவரான அப்பாராவ் என்பவரிடம் விசுவாசம் காட்ட ஆரம்பித்தார். [4] அவர் ரோஹ்தக் மற்றும் ஹிசார் மாவட்டங்களில் ஒரு சுதந்திர இராச்சியத்தை செதுக்கி, ஹான்சியைத் தன் தலைநகராக மாற்றிக் கொண்டார்.[5] தன் குறுகிய கால ஆட்சியில், ஹான்சியில் ஒரு நாணயச் சாலையை நிறுவினார். அங்கு, தன் சொந்த ராஜ்யத்திற்கான ரூபாயை வெளியிட ஆரம்பித்தார். அவரது கட்டுப்பாட்டில் தெற்கில் காகர் முதல் பெரி [6] வரையிலும், மேற்கில் மெஹாம் முதல் பஹார்டா வரையிலும் பரவி இருந்தது. அழிந்து கொண்டிந்த நிலையில் காணப்பட்ட ஹான்சியை அவர் மீண்டும் கட்டி எழுப்பினார். அதனைச் சுற்றி பாதுகாப்புக்காக தற்காப்பு சுவர்களையும் கோட்டைகளையும் கட்டினார்.

கி.பி 1796 ஆம் ஆண்டில், ஜார்ஜ் ஜஹஜ் கோத்தியை ஹரியானாவின் ஹிசாரில் மீண்டும் கட்டினார். 1801 ஆம் ஆண்டு அவர் அந்தப் பகுதியை சுதந்திரமாக ஆட்சி செய்து வந்தார். பின்னர், சீக்கிய-மராத்தா-பிரெஞ்சு கூட்டமைப்பால் அவர் வெளியேற்றப்பட்டார்.[5] இறுதியாக ஜெனரல் பியர் குலியர்-பெரோனின் கீழ் சிந்தியாவின் இராணுவத்தால் அவர் தோற்கடிக்கப்பட்டார். கங்கைக்குச் சென்று கொண்டிருந்தபோது செல்லும் வழியில் ஆகஸ்ட் 22, 1802 ஆம் நாளன்று இறந்தார். [4]

Remove ads

கட்டுமானப் பொருள்

18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் எரிந்த மண் மற்றும் களிமண் செங்கற்கள் மற்றும் சுண்ணாம்பு, மணல் மற்றும் சுர்கி ஆகியவற்றைக் கொண்ட கலவையால் கட்டப்பட்டுள்ளது .[7]

துறைகள் மற்றும் சேகரிப்புகள்

ஹரியானா மாநில தொல்பொருள் மற்றும் அருங்காட்சியக இயக்குநரகம் [8] ஆல் பராமரிக்கப்படும் இந்த மண்டல அருங்காட்சியகத்தில், ஜார்ஜ் தாமஸின் ஆங்கிலம் மற்றும் பாரசீக மொழியில் அமைந்துள்ள சமண கலைப்பொருட்கள் மற்றும் கல்வெட்டுகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[1][9][10]

குறிப்புகள்

மேலும் காண்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads