ஜாபூவா மாவட்டம்
மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜாபூவா மாவட்டம் (Jhabua district) (இந்தி: झाबुआ जिला) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஜாபுவா ஆகும். இது இந்தூர் கோட்டத்தில் அமைந்துள்ளது. பட்டியல் பழங்குடி மக்கள் அதிகம் கொண்ட மாவட்டம் ஆகும். இம்மாவட்டம் மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் இராஜஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது.
Remove ads
மாவட்ட எல்லைகள்
மத்தியப் பிரதேசத்தின் மேற்கில், குஜராத் மாநில எல்லையை ஒட்டி அமைந்த ஜாபூவா மாவட்டத்தின் வடக்கில் இராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாரா மாவட்டம், வடகிழக்கில் ரத்லாம் மாவட்டம், கிழக்கிலும், தென்கிழக்கிலும் தார் மாவட்டம், தெற்கிலும், தென்மேற்கிலும் அலிராஜ்பூர் மாவட்டம், மேற்கில் குஜராத் மாநிலத்தின் தாகோத் மாவட்டம், வடமேற்கில் இராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாரா மாவட்டம் எல்லைகளாக உள்ளது.[1]
மாவட்ட நிர்வாகம்
ஜாபூவா மாவட்டம் ஐந்து வருவாய் வட்டங்களும், ஹபூவா, மேக்நகர், ராணாபூர், இராமா, தண்டலா மற்றும் பெட்லாவாத் என ஆறு ஊராட்சி ஒன்றியங்களும் கொண்டுள்ளது.

பொருளாதாரம்
வறண்ட வானிலை கொண்ட இம்மாவட்டத்தை, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய இந்தியாவின் 250 மாவட்டங்களில் ஒன்றாக இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் 2006-ஆம் ஆண்டில் அறிவித்துள்ளதால், இம்மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி திட்டங்களுக்கு இந்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது.[2]
மக்கள் தொகையியல்
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,025,048 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 91.03% மக்களும்; நகரப்புறங்களில் 8.97% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 30.70% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 515,023 ஆண்களும் மற்றும் 510,025 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 990 பெண்கள் வீதம் உள்ளனர். 3,600 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 285 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 43.30% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 52.85% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 33.77% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 211,869 ஆக உள்ளது. [3]
சமயம்
இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 960,925 (93.74 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 15,733 (1.53 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 38,423 (3.75 %) ஆகவும், , சீக்கிய சமய மக்கள் தொகை 141 (0.01 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 8,871 (0.87 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 65 (0.01 %) ஆகவும், பிற சமய மக்களின் தொகை 388 (0.04 %) ஆகவும், மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 502 (0.05 %) ஆகவும் உள்ளது.
மொழிகள்
மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார பழங்குடியின மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads