ஜாம்பி மாகாணம்

இந்தோனேசிய புரோவின்சி எனும் நிர்வாகப் பிரிவு From Wikipedia, the free encyclopedia

ஜாம்பி மாகாணம்map
Remove ads

ஜாம்பி மாகாணம் (ஆங்கிலம்: Province of Jambi; இந்தோனேசியம்: Provinsi Jambi) ) என்பது இந்தோனேசியா நாட்டின் 38 மாகானங்களில் ஒன்றாகும். இந்த மாகாணம் மத்திய சுமத்திரா தீவில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஜாம்பி மாநகரம் ஆகும். இதன் மேற்கில் பாரிசான் மலைகள் உள்ளன.

விரைவான உண்மைகள் ஜாம்பி மாகாணம் Province of Jambi Provinsi Jambi, பகுதி ...

ஜாம்பி மாகாணம் 49,026.58 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும்; 2010-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 30,92,265 மக்கள் தொகையும் கொண்டது.[2] 2023ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் தற்காலிக மதிப்பீடின்படி, இதன் மக்கள் தொகை 3,679,169 ஆக உயர்ந்துள்ளது.[7]

Remove ads

இனம், சமயம் & மொழிகள்

ஜாம்பி மாகாணத்தில் ஜாம்பி மலாய் மக்கள் 43.57%, ஜாவா மக்கள் 29.10%, பிற இந்தோனேசிய மலாய் மக்கள் 5.37%, மினாங்கபாவு மக்கள் 5.33%, பத்தாக் மக்கள் 3.46%, பாஞ்சார் மக்கள் 3.33%, பக்கீ மக்கள் 3.13%, சுந்தானிய மக்கள் 2.58%, பலேங்பாங் மக்கள் 1.88%, சீன இந்தோனேசிய மக்கள் 1.215 மற்றும் பிற மொழி பேசுபவர்கள் 1.04% உள்ளனர். ஜாம்பி மாநில மக்களில் இசுலாம் 95.08%, கிறிஸ்தவம் 3.88% (சீர்திருத்தத் திருச்சபை 3.31% மற்றும் கத்தோலிக்கம்- 0.58%), பௌத்தம் 0.94%, நாட்டுப்புற மதம் 0.06%, கன்பூசியம் 0.02% மற்றும் இந்து சமயம் 0.013% பேர் பின்பற்றுகின்றனர்.

ஜாம்பி மாகாணத்தில் பெரும்பான்மையாக இந்தோனேசிய மொழியும், பிரதேச மொழிகளாக ஜாம்பி மலாய் மொழி, கெரிஞ்சி மொழி மற்றும் குபி மொழிகள் பேசப்படுகிறது.

Remove ads

எல்லைகள்

ஜாம்பி மாகாணத்தின் வடக்கில் ரியாவு மாநிலம், மேற்கில் மேற்கு சுமாத்திராவும், தென்மேற்கில் பெங்கூலு, தெற்கில் தெற்கு சுமாத்திரா மாகாணம்; கிழக்கில் பசிபிக் பெருங்கடலில் உள்ள ரியாவு தீவுகள் உள்ளன.

மாநில நிர்வாகம்

ஜாம்பி மாகாண நிர்வாக வசதிக்காக 9 பிராந்தியங்கள் மற்றும் 2 மாநகரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள்து. அவை வருமாறு:

மேலதிகத் தகவல்கள் சுட்டெண், பிராந்தியம் அல்லது நகரத்தின் பெயர் ...

உலகப் பாரம்பரியக் களங்கள்

Thumb
கெரிஞ்சி மலை, சுமாத்திரா
Thumb
முவாரோ ஜாம்பி கோயில்கள்
  • கெரிஞ்சி செப்லாத் தேசியப் பூங்கா
  • முவாரோ ஜாம்பி ஆலய வளாகம், 7 மற்றும் 8-ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட இவ்வளாகம் பௌத்த சமயக் கல்வி நிலையமாக உள்ளது.[9]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads