ஜிம் கவீசல்

அமெரிக்க நடிகர் From Wikipedia, the free encyclopedia

ஜிம் கவீசல்
Remove ads

ஜேம்சு பாட்ரிக் கவீசல் [1] (செப்டம்பர் 26, 1968-இல் பிறந்தவர் -- James Patrick Caviezel) ஒரு அமெரிக்க நடிகராவார். கவீசல் மெல் கிப்சனின் த பேசன் ஆப் த கிறைஸ்ட் (2004) என்ற படத்தில் இயேசு கிறிஸ்துவை சித்தரித்தார்; பெர்சன் ஆவ் இன்டரெஸ்டு என்ற அறிவியல் புனைகதை குற்ற நாடகத் தொடரில் ஜான் ரீசாக நடித்தார். [2]

விரைவான உண்மைகள் ஜிம் கவீசல், பிறப்பு ...
Remove ads

வாழ்வும் தொழிலும்

ஆரம்ப கால வாழ்க்கை

கவீசல் வாசிங்டன் மாநிலத்தில் மவுண்ட் வெர்னான் என்ற இடத்தில் மார்கரெட்-ஜேம்சு கவீசல் தம்பதிக்குப் பிறந்தார் [3]. அவருக்கு ஒரு தம்பியும் மூன்று சகோதரிகளும் உள்ளனர். அவரது தந்தை சிலோவாக்கிய-சுவிசு குடிப்பிறப்பையும் அவரது தாயார் ஐரிசு குடிப்பிறப்பையும் கொண்டவர்.

தொழில்

முதலில் கவீசல் சியாட்டில் நகரத்தில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். 1991ஆம் ஆண்டில் மை ஓன் பிரைவேட் ஐடகோ என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். அதன் பிறகு லாஸ் ஏஞ்சலஸ் நகரத்திற்குச் சென்றார். 1998ஆம் ஆண்டில் அவர் நடித்த த தின் ரெட் லைன் என்ற படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. 2000ஆம் ஆண்டில் மாடிசன் என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார்; ஆனால் 2005ஆம் ஆண்டு வரை இப்படம் வெளியாகவில்லை.

Remove ads

நடித்த பாத்திரங்களின் பட்டியல்

ஜிம் 34 திரைப்படங்களிலும் 5 தொலைக்காட்சி நாடகத் தொடர்களிலும் நடித்துள்ளார்; இது தவிர, 4 ஆவணப்படங்களில் கதை கூறுபவராகவும் செயல்பட்டுள்ளார்.

தொலைக்காட்சித் தொடர்கள்


மேலதிகத் தகவல்கள் Year, Title ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads