ஜெம்பரானா பிராந்தியம்

இந்தோனேசியா, பாலி தீவில் ஒரு பிராந்தியம் From Wikipedia, the free encyclopedia

ஜெம்பரானா பிராந்தியம்
Remove ads

ஜெம்பரானா பிராந்தியம் (ஆங்கிலம்: Jembrana Regency; பாலினியம்: kabupatenjemrana; இந்தோனேசியம்: Kabupaten Jembrana) என்பது இந்தோனேசியா, பாலி தீவில் ஒரு பிராந்தியம் ஆகும். இந்தப் பிராந்தியத்தின் தலைநகரம் நெகாரா.

விரைவான உண்மைகள் ஜெம்பரானா பிராந்தியம் Jembrana Regency Kabupaten Karangasem ᬓᬩᬸᬧᬢᬾᬦ᭄ᬚᬾᬫ᭄ᬭᬦ, நாடு ...

இந்த பிராந்தியத்திற்கு வடக்கே புலெலெங் பிராந்தியம்; மேற்கே தபனான் பிராந்தியம் ஆகிய இரு பிராந்தியங்கள் உள்ளன; மற்றும் மேற்கில் பாலி நீரிணையும் தெற்கில் இந்தியப் பெருங்கடலும் உள்ளன. பாலி தீவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஜெம்பரானா பிராந்தியம் 841 கிமீ2 பரப்பளவைக் கொண்டுள்ளது; மற்றும் 2024-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 329,353 மக்கள் தொகையைக் கொண்டிருந்தது.

ஜெம்பரானா பிராந்தியம் இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது: வடக்கில் ஒரு பெரிய மலைப்பகுதி; இது மேற்கு பாலி தேசிய பூங்காவின் ஒரு பகுதியாகும்; மற்றும் தெற்கில் கடலோரப் பகுதி; கடற்கரையில் உள்ள மணல் பெரும்பாலும் எரிமலை மணல்களால் ஆனது. ஆனாலும் மெடேவி கடற்கரை நகரில் பல அழகான வெள்ளை பவளக் கடற்கரைகளும் உள்ளன. தெற்கு ஜெம்பரானாவில் மிக அழகான நெல் வயல்களுக்கான படிமுறை உள்ளன.[4]

Remove ads

பேரன்சக் கோயில்

பெரஞ்சாக் கோயில் (Gede Perancak Temple) ஒரு சிறிய இந்து கடல் கோயில் ஆகும். 15-ஆம் நூற்றாண்டில் ஜாவாவில் இருந்து பாலிக்கு வந்த தங் அயாங் நிரர்த்தா துறவி தரையிறங்கிய இடத்தைக் குறிக்கும் வகையில் இந்தக் கோயில் கட்டப்பட்டது. சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்ட பாலி கோயில்களில் புகழ்பெற்ற கடல் கோயிலாக இந்தக் கோயில் விளங்குகிறது.[4]

மக்கள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்ற பிரார்த்தனை செய்ய இந்தக் கோயிலுக்கு வருகிறார்கள். கோயிலைச் சுற்றி காளை மாட்டுப் பந்தயங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன; அருகில் உள்ள தாமான் விசாத்தா பெரஞ்சாக் பூங்காவில் (Taman Wisata Perancak Park) நடைபெறுகின்றன.[4]

Remove ads

மேற்கு பாலி தேசிய பூங்கா

பாரம்பரியமாக, ஜெம்பரானாவின் பொருளாதாரம் ,வேளாண் துறையை அடிப்படையாகக் கொண்டது. நெல் சாகுபடி முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாகும். இருப்பினும், பாலியில் உள்ள பல பகுதிகளைப் போலவே, சுற்றுலாத் துறையும் உள்ளூர் பொருளாதாரத்தின் ஒரு முக்கியப் பகுதியாக மாறியுள்ளது.[5]

நெல் உற்பத்தியைத் தவிர, சோளம், வேர்க்கடலை மற்றும் கிராம்பு உள்ளிட்ட பல்வேறு பயிர்களுக்கும் ஜெம்பரானா பெயர் பெற்றது.[5]

ஜெம்பரானா பிராந்தியம், மேற்கு பாலி தேசிய பூங்காவின் தாயகமாகும். இந்தத் தேசிய பூங்கா, அதன் மாறுபட்ட வனவிலங்குகள் மற்றும் இயற்கை அழகிற்காக அறியப்பட்ட ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இந்தப் பூங்கா சுமார் 190 சதுர கிலோமீட்டர்கள் (73 sq mi) பரப்பளவைக் கொண்டது. பூங்காவின் அமைவுப் பகுதியில் 82% நிலத்திலும் மீதமுள்ளவை கடலிலும் உள்ளன.[6][7]

Remove ads

நிர்வாக மாவட்டங்கள்

ஜெம்பரானா பிராந்தியம் 5 மாவட்டங்களாக (Districts of Indonesia) (Kecamatan) பிரிக்கப்பட்டுள்ளது.

மேலதிகத் தகவல்கள் நிர்வாக குறியீடு, மாவட்டம் (Kecamatan) ...

காலநிலை

காராங்கசெம் பிராந்தியம் வெப்பமண்டல மழைக்காடு காலநிலை (Af) கொண்டது. ஆண்டு முழுவதும் மிதமான மழைப்பொழிவு முதல் கனமழை வரை இருக்கும்.

காட்சியகம்

  • ஜெம்பரானா பிராந்திய காட்சிப் படங்கள்

மேலும் காண்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads