நெகாரா
இந்தோனேசியா, பாலி, ஜெம்பரானா பிராந்தியத்தில் கடற்கரை நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நெகாரா (ஆங்கிலம்: Negara, Bali; இந்தோனேசியம்: Negara, Jembrana) என்பது இந்தோனேசியா, பாலி, ஜெம்பரானா பிராந்தியத்தில் உள்ள ஒரு கடற்கரை நகரம் ஆகும். மேலும் நெகாரா துணை மாவட்டத்தின் (Kecamatan Negara) ஒரு பகுதியாக உள்ளது.[1]
அத்துடன் இந்த நகரம் ஜெம்பரானா பிராந்தியத்தின் தலைநகரமாகவும் செயல்படுகிறது.[2]
Remove ads
சொற்பிறப்பியல்
நெகாரா என்றால் பாலி மொழியில் நகரம் என்று பொருள். இந்தச் சொல் சமசுகிருதச் சொல்லான நகரா (Nagara) எனும் சொல்லில் இருந்து உருவானது; நகரம் என பொருள்படும்
சுற்றுலா
பந்தாய் பாலுக் ரெனிங்
பந்தாய் பாலுக் ரெனிங் கடற்கரை (Pantai Baluk Rening), நெகாரா நகரிலிருந்து மேற்கே சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள சுப்பெல் கிராமத்தில் (Desa Cupel) அமைந்துள்ளது. இந்தக் கடற்கரை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக உள்ளது.[3]
இந்த கடற்கரையில் கருப்பு மணல் நிறைந்து உள்ளது. இங்கு பெரிய அலைகள் தோன்றுவது இல்லை. காலையிலும் மாலையிலும் கடற்கரையை நன்கு இரசிக்கலாம். இந்தக் கடற்கரை கிழக்கு ஜாவாவின் மலைப்பாங்கான பின்னணியைக் கொண்டுள்ளது.
கடற்கரையின் ஓரத்தில் உள்ள பாறைகள் மிகவும் உயரமாக இருப்பதால், இந்த சுற்றுலாத் தலத்தை மேலும் கவர்ச்சிகரமானதாக மாற்றியுள்ளது. அந்த வகையில் கடலின் தெற்குப் பகுதியின் அடிவான அழகை மேலும் கூட்டுகிறது.
Remove ads
சமயம்
2021-ஆம் ஆண்டில், நெகாரா துணை மாவட்டத்தின் மக்கள் தொகை 73,758 ஆக இருந்தது. இந்தோனேசிய உள்துறை அமைச்சின் தரவுகளின் அடிப்படையில், பெரும்பான்மையானவர்கள் இந்துக்கள் மற்றும் இசுலாம் சமயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
நெகாரா துணை மாவட்டத்தின் மக்கள்தொகையில் சமய அடிப்படையில் 98.70% இந்து மதத்தினரும், அடுத்த நிலையில் 2.11% இசுலாம் மதத்தினரும் உள்ளனர். எஞ்சியவர்கள் கிறிஸ்தவத்தை பின்பற்றுகிறார்கள்; அதாவது 2.00%; இதில் சீர்திருத்தத் திருச்சபை 1.30%; மற்றும் கத்தோலிக்கர்கள் 0.70% ஆவார்கள்.
மேலும், 0.45% பேர் பௌத்தர்களாகவும், 0.02% பேர் கன்பூசியர்களாகவும் உள்ளனர்.[4]
மேலும் காண்க
மேற்கோள்கள்
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads