ஜெராண்டுட் மாவட்டம்
மலேசியாவின் பகாங் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜெராண்டுட் மாவட்டம் (ஆங்கிலம்: Jerantut District; மலாய்: Daerah Jerantut; சீனம்: 而连突县; ஜாவி: ﺟﺮﻧﺘﻮﺕ ); என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைப் பட்டணம் ஜெராண்டுட்.
ஜெராண்டுட் மாவட்டம் பகாங் மாநிலத்தின் மிகப் பெரிய மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் வட எல்லையில் கிளாந்தான், திராங்கானு மாநிலங்கள் உள்ளன. தெற்கே தெமர்லோ மாவட்டம், மாரான் மாவட்டம்; மேற்கே லிப்பிஸ் மாவட்டம், ரவுப் மாவட்டம்; கிழக்கே குவாந்தான் மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. ஜெராண்டுட் மாவட்டத்தில் தெம்பிலிங் ஆறு ஓடுகிறது.
Remove ads
வரலாறு
பகாங் மாநிலத்தின் முதல் அரசரான சுல்தான் அகமட் வான் அகமட் காலத்திலேயே, ஜெராண்டுட் எனும் பெயர் புழக்கத்தில் இருந்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.
ஜெராண்டுட் மாவட்டத்தின் பழைய பெயர் சிம்பாங் அம்பாட் (Simpang Empat). பிரித்தானியர்களின் ஆட்சி காலத்தில் ஜெராண்டுட் நகரத்திற்கு சங்சன் 4 (Junction 4) என்று பெயர் வைத்தார்கள்.
சுற்றுலா இடங்கள்
பகாங் ஆற்றின் ஜெராண்டுட் பகுதியில் நீர் பெருக்கம் ஏற்படுவது உண்டு. மீன் பிடிப்பவர்கள் அதை ‘அவாங் துட்’ (Awang Tut) என்று அழைத்தார்கள். அந்தப் பெயரே, காலப் போக்கில் ஜெராண்டுட் என்று பெயர் மாற்றம் கண்டது.
சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடங்களாக லதா மெராவுங் நீர்வீழ்ச்சி (Lata Meraung Waterfall), மலேசியப் பழங்குடியினர் குடியிருப்புகள், குனோங் தகான், குனோங் பெனோம், ராபிள்சியா பாதுகாப்பு மையம் (ஆங்கிலம்: Rafflesia Conservation Center) போன்றவை அமைகின்றன. பகாங் மாநிலத்தின் பெரிய மாவட்டமான ஜெராண்டுட், அண்மைய காலங்களில் மிகத் துரிதமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது.
Remove ads
துணை மாவட்டங்கள்
ஜெராண்டுட் மாவட்டம் 10 துணை மாவட்டங்களைக் கொண்டது. இந்த மாவட்டத்தில் 125 கிராமங்கள் உள்ளன.[1]
- உலு தெம்பிலிங் - Hulu Tembeling
- தெம்பிலிங் தெங்ஙா - Tembeling Tengah
- புலாவ் தாவர் - Pulau Tawar
- தெபிங் திங்கி - Tebing Tinggi
- உலு செக்கா - Hulu Cheka
- பெடா - Pedah
- புராவ் - Burau
- கோலா தெம்பிலிங் - Kuala Tembeling
- தே - Teh
- கெலோலா - Kelola
அரசியல்
நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி
மாநிலச் சட்டமன்றம்
Remove ads
ஜெராண்டுட் தமிழ்ப்பள்ளி
ஜெராண்டுட் மாவட்டத்தில் ஒரு தமிழ்ப்பள்ளி மட்டுமே உள்ளது. அப்பள்ளியில் 144 மாணவர்கள் பயில்கிறார்கள். 15 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.[2]
மேற்கோள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads