ஜோக்கர்
ராஜு முருகன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜோக்கர் (Joker) என்பது 2016ஆம் ஆண்டு தமிழில் வெளியான அரசியல் மற்றும் சமூக பகடித் திரைப்படமாகும். ராஜு முருகன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், ரம்யா பாண்டியன், காயத்திரி, பவா செல்லத்துரை, ராமசாமி போன்றவர்கள் நடித்துள்ளனர்.[1]
Remove ads
தயாரிப்பு
தனது முதல் படமான குக்கூ முடித்த 6 மாதங்கள் கழித்து, ராஜு முருகன் இந்த திரைப்படத்தின் கதையை முடிவுசெய்தார். தர்மபுரியை அடிப்படையாகக் கொண்ட கதை என்பதால் அந்த ஊரிலேயே தங்கி இந்த படத்தின் கதையை எழுதி இருக்கிறார்.
கதையின் நாயகனாக குரு சோமசுந்தரம் தேர்வு செய்யப்பட்டார். குக்கூ திரைப்பட இசையமைப்பாளரின் வலியுறுத்தலின் பெயரில் ராஜு, ஸ்யான் ரொலாண்ட்யை தேர்வு செய்தார்.
மொத்தம் 50 நாட்கள் திடடமிடப்பட்டு தர்மபுரி பகுதியில் இந்தத் திரைப்படம் பதிவு செய்யப் பட்டது. பதிவதற்கு முன்பே அனைத்து காடசிகளும் பயிற்சி செய்யப்படடன என்பதும் கூடுதல் தகவல்.[2]
Remove ads
இசை
இந்தப் படத்தின் முதல் இசை பாடல் " என்னங்க சார் உங்க சட்டம் " ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி வெளியானது. ஒரு முட்டாள் பற்றிய கதை என்பதால் முட்டாள்கள் தினமான ஏப்ரல் 1ஆம் தேதி வெளியிடப்படுகிறது என்றும் இந்த நிகழ்வு பேசப்பட்டது.[2]
இந்தப்படத்தின் மற்ற 5 இசைப் பாடல்கள் ஒருசேர ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தின் இசை பெருவாரியாக நல்ல வரவேற்பையே பெற்றன.[3]
இந்த திரைப்படத்தின் இசையை தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பல நாட்டுப்புர இசைக் கலைஞர்கள் பாடியுள்ளனர் [4]
Remove ads
கதை
தான் விரும்பி மனம் முடிக்கும் பெண் விருப்பத்திற்காக மன்னர் மன்னன் என்பவர் ஒரு கழிப்பறை கட்ட முயல்கிறார். அரசாங்க கடனுதவியுடன் - "வாழ்ந்து பாப்போம்" என்று பெயரிடப் பட்ட திட்டத்தின் கீழ் அரைகுறையாய் ஒரு கழிப்பறையை கட்டி முடிக்கிறார். இந்த நிலையில் அந்த பெண்ணின் சம்மதம் பெற்று அவரை திருமணமும் செய்கிறார்.
பின் நிகழும் சம்பவங்களால், மன்னர் மன்னன் மனநிலை பிறழ்கிறார். அதன் பின் நடக்கும் சம்பவங்கள் இந்த படமாகின்றன
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads