ரம்யா பாண்டியன்
இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரம்யா பாண்டியன் (Ramya Pandian) என்பவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி பிரமுகர் ஆவார். இவர் 2015 ஆம் ஆண்டு முதல் ஜோக்கர்,[2][3] ஆண் தேவதை போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார். 2019ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி என்ற சமையல் போட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார். 2020 பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியில் பங்கு பெற்றி, நான்காவதாக வந்தார்.
Remove ads
தனிப்பட்ட வாழ்க்கை
ரம்யா பாண்டியன் அண்ணா பல்கலைக்கழகத்தில் உயிரிமருத்துவப் பொறியியல் படித்தார் மேலும் வணிக மேம்பாட்டு மேலாளராக பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வாளராக பணியாற்றத் தொடங்கினார்.[4] இவரது தாய்மொழி தமிழ் ஆகும்.[5] இவரது சித்தப்பா நடிகர் அருண் பாண்டியன் ஆவார். இவர் தமிழ் மொழி படங்களில் பணிபுரிகிறார்.[6] இவரது பூர்வீகம் திருநெல்வேலி ஆகும்.[7] இவர் கரிம தோட்டக்கலைகளில் ஆர்வம் கொண்டவர்.[8]
Remove ads
தொழில்
மணிரத்தினத்தின் உதவி இயக்குநராக இருந்த ஷெல்லியுடன் இணைந்து மானே தேனே பொன்மானே என்ற குறும்படத்தில் பணிபுரியும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. பாலாஜி சக்திவேலின் ரா ரா ராஜசேகர் படத்தில் இவர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார், ஆனால் அந்தப் படம் இடையில் கைவிடப்பட்டது. பின்னர் இவர் குறைந்த செலவில் எடுக்கபட்ட டம்மி டபாசு (2015) படத்தின் மூலம் திரைப்பட நடிப்பில் அறிமுகமானார்.[9][10] ரா ரா ராஜசேகர் குழு இவரை ராஜு முருகனுக்கு பரிந்துரை செய்தது, பின்னர் இவரை ஜோக்கர் (2016) படத்தில் ஒப்பந்தம் செய்தனர்.[11] இவர் அப்படத்தில் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்தார்.[12] ஜோக்கரில் ரம்யாவின் பரணிடப்பட்டது 2020-10-09 at the வந்தவழி இயந்திரம் நடிப்பைப் பாராட்டிய சமுத்திரக்கனி ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் தாயாக ஆண் தேவதை (2018) படத்தில் நடிக்க ஆர்வமா என்று கேட்டார் .[7] ரம்யா பரணிடப்பட்டது 2020-10-09 at the வந்தவழி இயந்திரம் கதை கேட்ட பிறகு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.[4] இவர் தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சியான குக்கு வித் கோமாளிஸ், நிகழ்ச்சியில் புகழுடன் இணைந்து தோன்றினார். மேலும் நகைச்சுவை தொலைக்காட்சி நிகழ்ச்சியான கலக்கப் போவது யாருவில் நடுவராக இருந்தார்.[13][14][15][16][17] குக்கு வித் கோமளி இறுதிச் சுற்றில் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார் .[18][19] இவருடைய வரவிருக்கும் திரைப்படங்களில் சூர்யாவின் 2டி என்டேர்டைன்மென்ட் தயாரித்த ஒரு படத்திலும், சி. வி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தில் தயாரித்த திரைப்படம் ஆகியவை அடங்கும்.[20][21][22][23]
Remove ads
திரைப்படவியல்
| இதுவரை வெளியிடப்படாத படங்களைக் குறிக்கிறது |
தொலைக்காட்சி
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
