தவாங்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தவாங் நகரம் (ஆங்கிலம்: Tawang Town, Hindi: तवांग) வடகிழக்கு இந்தியாவில் உள்ள அருணாசலப் பிரதேச மாநிலத்தில் உள்ள நகரம் ஆகும். இது சராசரியாக கடல் மட்டத்தில் இருந்து ஏறக்குறைய 3,048 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இப்பிரதேசத்தை திபெத்தின் தென்பகுதி என சீன அரசும், அருணாசலப் பிரதேசத்தின் பகுதி என இந்திய அரசும் கூறிவருகின்றன. முன்னர் இது மேற்கு காமெங் மாவட்டத்தின் தலைமையகமாக இருந்தது. பின்னர் தவாங் மாவட்டம் உருவாக்கப்பட்டதால் தற்போது தவாங் மாவட்டத்தின் தலைமையகமாக உள்ளது. தவாங் நகரம், மாநிலத் தலைநகரான இட்டநகருக்கு வடமேற்கே 447 கிலோ மீட்டர் தொலைவிலும்; கவுகாத்திக்கு வடக்கே 440 கிலோ மீட்டர் தொலைவிலும்; தேஜ்பூருக்கு வடமேற்கே 330.7 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரத்தின் இந்திய-சீனா எல்லைப்பகுதியில் இமயமலையில் பூம் லா கணவாய் உள்ளது.
Remove ads
மக்கள் தொகை
2011 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 11,202 ஆகும்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads