டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல், 2017
From Wikipedia, the free encyclopedia
Remove ads
டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் (சுருக்கமாக ஆர். கே. நகர் இடைத்தேர்தல், 2017) 2017 திசம்பர் 21 ஆம் நாள் தமிழ்நாடு, டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்காக நடந்தது.[1]
பின்னணி
இத்தொகுதியின் உறுப்பினரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா 2016 திசம்பர் 5 அன்று காலமானதையடுத்து இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் 2017 ஏப்ரல் 12 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.[2] ஆனாலும், வாக்காளர்களுக்கு பணம், மற்றும் பொருட்கள் கொடுக்கப்பட்டதாக வந்த முறைப்பாடுகளை அடுத்து மறு தேதி குறிப்பிடாமல் ஏப்ரல் 9 அன்று இந்தியத் தேர்தல் ஆணையம் இடைநிறுத்துவதாக அறிவித்தது.[3]
முக்கியத்துவம்
- அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் இறப்பிற்குப் பிறகு அக்கட்சியில் பிளவு ஏற்பட்டு, ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணி செயல்படத் தொடங்கியது. அதன்பிறகு இந்த அணியுடன் பழனிசாமி தலைமையிலான அதிமுக அணி இணைந்தது. சசிகலாவின் உறவினர் டி. டி. வி. தினகரன் தானே அதிமுக என்று அறிவித்து வருகிறார்.
- அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் திமுகவிற்கு சாதகமாக அமையும் வாய்ப்பு குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
Remove ads
இடைநிறுத்தப்பட்ட ஏப்ரல் 2017 இடைத்தேர்தல்
தேர்தல் அட்டவணை
தேர்தலின் முக்கிய நாட்கள் காலக்கோடு[2]
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல்
முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள்
- பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் தாம் போட்டியிடவில்லை என அறிவித்தன.
- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் தாம் போட்டியிடவில்லை என்றும் வேறு எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் அறிவித்தன.
- அதிமுகவில் உள்ள சசிகலா, ஓ. பன்னீர் செல்வம் ஆகிய இரு அணிகளும் உரிமை கோருவதால், ராதாகிருட்டிணன் நகர் இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்க தேர்தல் ஆணையம் முடிவெடுத்தது. அதேபோல், அதிமுக என்ற பெயரையும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.[7]
- அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட காரணத்தாலும், அதிமுக என்ற பெயரை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதாலும், ஓ. பன்னீர் செல்வம் தரப்புக்கு அதிமுக (புரட்சி தலைவி அம்மா) அணி என்றும், சின்னமாக மின் கம்பம் சின்னமும், சசிகலா தரப்புக்கு அதிமுக (அம்மா) அணி என்றும், சின்னமாக தொப்பி சின்னத்தை அளிக்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்தது.
Remove ads
திசம்பர் 2017 இடைத்தேர்தல்
ஆர். கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஏப்ரல் 2017 இல் நடக்கவிருந்த இடைத்தேர்தல் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்பட்ட புகார்களைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, டிசம்பர் 21 ஆம் தேதி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கைகள் எடுத்தது.[8]
இந்த இடைத்தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருதுகணேஷ், பாரதிய ஜனதா சார்பில் கரு.நாகராஜன் மற்றும் சுயேட்சையாக டி. டி. வி. தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் உள்ளிட்ட 59 பேர் போட்டியிட்டனர்.[9]
டி. டி. வி. தினகரன் வெற்றி
இத்தேர்தலில் 77.5 விழுக்காடு வாக்காளர்கள் தங்கள் வாக்கினைப் பதிவு செய்தனர். டிசம்பர் 24 ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை 19 சுற்றுகளாக நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில், சுயேச்சை வேட்பாளர் டி. டி. வி. தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 24,581 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றார்.[10]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads