டி. ஆர். ராமண்ணா
தமிழ்த் திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தஞ்சாவூர் ராதாகிருஷ்ணன் ராமச்சந்திரன் (1923 - மே 22, 1997) என்பதை சுருக்கமாக டி. ஆர். ராமண்ணா அல்லது ராமண்ணா என்று அழைக்கப்படுகிறார் இவர் ஒரு புகழ்பெற்ற தென்னிந்திய திரைப்பட இயக்குநர், தயாாிப்பாளர் ஆவார். இவர் பூர்வீகம் தஞ்சாவூர் ஆகும். தமிழ்த் திரைப்படத்துறையில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்த டி. ஆர். ராஜகுமாரி இவரது அக்கா ஆவார்.
Remove ads
திரை வாழ்க்கை
- இராமச்சந்திரன் என்ற இயற்பெயர் கொண்ட ராமண்ணா என்று திரையுலகில் இவரை செல்லமாக அழைத்தனர். இவர் தந்தை ராதாகிருஷ்ணன் வயிற்று வலியால் இவரது சிறுவயதிலே இறந்துவிட இவர் தாயார் ரங்கநாயகி அவர்கள் அரவனைப்பில் இவரும் இவருடைய அக்காவான ராஜகுமாரியும் வளர்ந்து வந்தனர். இவர் அன்றைய நாட்களிலே பத்தாம் வகுப்பு வரை முடித்துவிட்டு தனது சகோதரியான ராஜகுமாரி அப்போது திரையுலகில் நடிப்பதால் இவருக்கும் திரையுலகில் எதாவது சாதிக்க வேண்டும் என்று ஆசையோடு தனது சொந்த ஊரான தஞ்சாவூரில் இருந்து இரயில் ஏறி சென்னைக்கு வந்தார்.
- பின்பு ராமண்ணா சிட்டி ஸ்டுடியோவில் ஒலிப்பதிவாளராக ஒலி அமைப்பாளராக தனது வாழ்க்கையை திரையுலகில் தொடங்கினார். பின்னர் படிப்படியாக ஒரு திரைப்பட இயக்குநராக வளர்ந்தார்.
- தனது சகோதரி டி. ஆர். ராஜகுமாரியுடன் இணைந்து ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இதற்கு, தனது பெயரின் முதல் எழுத்தையும், தனது சகோதரி பெயரின் முதல் எழுத்தையும் கொண்டு ஆர். ஆர். பிக்சர்சு என பெயர் சூட்டினார்.
- அதில் குறிப்பிடத்தக்க படங்களான வாழப்பிறந்தவள், கூண்டுக்கிளி, குலேபகாவலி, புதுமைப்பித்தன், காத்தவராயன், ஸ்ரீ வள்ளி, பாசம் , பெரிய இடத்துப் பெண், பணக்கார குடும்பம், அருணகிரிநாதர் , பணம் படைத்தவன், நீ, குமரிப் பெண், பறக்கும் பாவை, நான் , மூன்றெழுத்து, தங்கசுரங்கம், சொர்க்கம், வீட்டுக்கு ஒரு பிள்ளை, சக்தி லீலை , பாக்தாத் பேரழகி, என்னைப்போல் ஒருவன், குப்பத்து ராஜா, கன்னித்தீவு, குலக்கொழுந்து, சட்டம் சிரிகிறது, இலங்கேஸ்வரன் ஆகிய வெற்றி படங்களை இயக்கினார்
- மேலும் இவரது தயாரித்த திரைப்படங்களான மணப்பந்தல், துலாபாரம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் பெரும் வெற்றி பெற்ற திரைப்படமாகும்.
- தமது சொந்த திரைப்பட நிறுவனமான ஆர். ஆர்.பிக்சர்ஸ், விநாயகா பிக்சர்ஸ், கணேஷ் கிரியேஷன்ஸ் ஆகிய படத்தயாரிப்பு நிறுவனத்தின் வாயிலாக தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழித் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். இவர் தயாரித்த இயக்கிய திரைப்படங்களில் பெரும்பாலானவை மாறுபட்ட கதைகளம் கொண்ட சிறந்த வெற்றி திரைப்படங்களாகும்.
- இவர் தனது திரைப்படங்களில் எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ரஜினிகாந்த் ஆகிய அன்றைய முன்னனி நடிகர்களையும்
- எம். ஆர். ராதா, எஸ். ஏ. அசோகன், இரா. சு. மனோகர், ஆகிய நடிகர் இவரது திரைப்படங்களில் இடம் பெரும் வில்லன்கள் ஆவார்.
- மேலும் நாகேஷ், தேங்காய் சீனிவாசன், சுருளி ராஜன், எம். ஆர். ஆர். வாசு, என்னத்த கன்னையா, ஆகியோர் இவரது திரைப்படங்களில் இடம் பெரும் நகைசுவை நடிகர்கள் ஆவார்
- டி. ஆர். ராஜகுமாரி, பி. எஸ். சரோஜா, ஈ. வி. சரோஜா, சாவித்திரி, பத்மினி, சரோஜாதேவி, கே. ஆர். விஜயா, ஜெ. ஜெயலலிதா, சாரதா, உஷா நந்தினி, சி. ஐ. டி. சகுந்தலா, ஆலம் ஆகிய கதாநாயகி இவரது திரைப்படங்களில் தவறாமல் இடம் பெரும் நடிகைகள் ஆவார்கள்.
- மேலும் இவர் திரைப்படங்களில் கதை வசனம் போன்றவைகளுக்கு அப்போது பிரபலமாக இருந்த கதாசிரியர்களான விந்தன், கருணாநிதி, துறையூர் மூர்த்தி, சக்தி கிருஷ்ணசாமி, டி. என். பாலு ஆகியோர் இவர் திரைப்படங்களில் இணைந்து பணியாற்றிய ஆஸ்த்தான கதாசிரியர்கள் ஆவார்கள்.
Remove ads
இயக்கி, தயாரித்த தமிழ்த் திரைப்படங்கள்
- வாழப்பிறந்தவள் (1953)
- கூண்டுக்கிளி (1954)
- குலேபகாவலி (1955)
- புதுமைப்பித்தன் (1957)
- காத்தவராயன் (1958)
- இரத்னபுரி இளவரசி (1960)
- ஒன்று பட்டால் உண்டு வாழ்வு (1960)
- ஸ்ரீ வள்ளி (1961)
- பாசம் (1962)
- பெரிய இடத்துப் பெண் (1963)
- பணக்கார குடும்பம் (1964)
- அருணகிரிநாதர் (1964)
- பணம் படைத்தவன் (1965)
- நீ (1965)
- குமரிப் பெண் (1966)
- பறக்கும் பாவை (1966)
- பவானி (1967)
- நான் (1967)
- மூன்றெழுத்து (1968)
- நீயும் நானும் (1968)
- அத்தை மகள் (1969)
- தங்கசுரங்கம் (1969)
- ஏன் (1970)
- சொர்க்கம் (1970)
- வீட்டுக்கு ஒரு பிள்ளை (1971)
- சக்தி லீலை (1972)
- பாக்தாத் பேரழகி (1973)
- மறுபிறவி (1973)
- வைரம் (1974)
- சொர்க்கத்தில் திருமணம் (1974)
- அவளுக்கு ஆயிரம் கண்கள் (1975)
- தாலியா சலங்கையா (1977)
- என்னைப்போல் ஒருவன் (1978)
- குப்பத்து ராஜா (1979)
- நீச்சல் குளம் (1979)
- கன்னித்தீவு (1981)
- குலக்கொழுந்து (1981)
- சட்டம் சிரிகிறது (1982)
- சங்கரி (1984)
- இலங்கேஸ்வரன் (1987)
- தயாரித்த படங்கள் :-
- மணப்பந்தல் (1961)
- துலாபாரம் (1969)
Remove ads
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads