தக்த்-இ-பாகி

From Wikipedia, the free encyclopedia

தக்த்-இ-பாகிmap
Remove ads

தக்த்-இ-பாகி (Takht-i-Bahi) (உருது மொழிபெயர்ப்பு:நீர் ஊற்றின் சிம்மாசனம்), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகணத்தின் மார்தன் மாவட்டத்தில் உள்ள செரி பக்லோல் எனுமிடத்தில் உள்ள மலைப்பகுதியில் அமைந்த சிதிலமடைந்த காந்தாரப் பண்பாட்டில் நிறுவப்பட்ட பௌத்த விகாரைகளின் தொகுப்பாகும். இந்த பௌத்தக் கட்டிடங்கள் இந்தோ-பார்த்தியப் பேரரசு காலத்தில் கிபி முதல் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. யுனெஸ்கோ நிறுவனம் இதனை 1980-ஆம் ஆண்டில் உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்தது.[1]இத்தொல்லியல் களம் மார்தன் நகரத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கிரேக்க எலனியக் கட்டிடப் பாணியில்[2] கட்டப்பட்ட இந்த கட்டிடங்கள் இசுலாமிய ஆட்சியின் போது கிபி ஏழாம் நூற்றாண்டில் சிதைக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் தக்த்-இ-பாகி تختِ باہی, இருப்பிடம் ...
Remove ads

அமைப்பு

தக்த்=இ-பாகி தொல்லியல் களம் நான்கு முக்கியப் பகுதிகளைக் கொண்டது.

  • மையப் பகுதியில் தூபிகளின் தொகுதி
  • பௌத்த துறவிகள் தங்கும் தனித்தனி விகாரைகள், மண்டபங்கள், உணவு அருந்துமிடம்
  • கோயில் வளாகத்தில் தூபிகளின் தொகுப்பு
  • சிறிய மற்றும் ஒளி புகாத தாந்தீரிக தியானம் செய்தவதற்கான சிற்றைகள்

படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads