மார்தன் மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

மார்தன் மாவட்டம்
Remove ads

மார்தான் மாவட்டம் (Mardan District),பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும்.[3][4]இதன் நிர்வாகத் தலைமையிடம் மார்தான் நகரம் ஆகும். பஷ்தூ மொழியில் மார்தான் எனில் வீரமான மனிதர்கள் என்று பொருள். இம்மாவட்டத்தின் தலைமையிட நகரமாக மார்தான் அருகே தக்த்-இ-பாகி எனுமிடத்தில் சிதைந்த நிலையில் பௌத்த கட்டிடங்கள் உள்ளது. [5][6] மேலும் சமால் கார்கி[7] பௌத்த தொல்லியல் களம் உள்ளது.

விரைவான உண்மைகள் மார்தன் மாவட்டம் ضلع مردان, நாடு ...
Remove ads

அமைவிடம்

மார்தன் மாவட்டத்தின் வடக்கில் இதன் வடக்கில் புனேர் மாவட்டம் மற்றும் மாலகண்ட் மாவட்டம், கிழக்கில் சுவாபி மாவட்டம் மற்றும் புனேர் மாவட்டம், தெற்கில் நவ்செரா மாவட்டம், மேற்கில் சார்சத்தா மாவட்டம்]] மற்றும் மாலகண்ட் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

புவியியல்

காபுல் ஆறு பாயும் மார்தன் மாவட்டத்தின் வடகிழக்கில் மலைப்பகுதிகளும், தென்மேற்கில் சமவெளி தரைகளும் கொண்டது.

மக்கள் தொகை பரம்பல்

2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மார்தன் மாவட்ட மக்கள் தொகை 23,73,399 ஆகும். அதில் ஆண்கள் 12,01,122 மற்றும் பெண்கள் 11,72,215 ஆக உள்ளது. இம்மாவட்ட மக்களில் 81.45%% விழுக்காட்டினர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். எழுத்தறிவு 56.81% ஆக உள்ளது. பஷ்தூ மொழி 98.25% விழுக்காட்டினர் பேசுகின்றனர். சிறுபான்மை சமயத்தவர்கள் பேர் உள்ளனர்.[1]

சமயம்

மேலதிகத் தகவல்கள் சமயம், மக்கள் தொகை (1941):22 ...

மாவட்ட நிர்வாகம்

மார்தன் மாவட்டம் 5 தாலுகாக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்:[9][10][11]

  • மார்தன் தாலுகா
  • தக்த் பாய் தாலுகா
  • கட்லாங் தாலுகா
  • ருஸ்தம் தாலுகா
  • காரி கபுரா தாலுகா

தேசிய சட்டமன்றம் & மாகாணச் சட்டமன்றத் தொகுதிகள்

இம்மாவட்டத்திலிருந்து பாகிஸ்தான் தேசிய சட்ட சபைக்கு 4 தொகுதிகளும், கைபர் பக்துன்வா மாகாணச் சட்டமன்றத்திற்கு 9 தொகுதிகள் கொண்டுள்ள்து.[12][13]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads