சமால் கார்கி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சமால் கார்கி (Jamal Garhai) என்பது வடக்கு பாக்கிசுத்தானின் மாகாணமான கைபர் பக்துன்குவாவில் உள்ள மார்தன் மாவட்டத்தின் தலைமையிடமாக மார்தானிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜமால் கார்கி தாலுகாவில் உள்ள ஒரு பண்டைய காந்தாரப் பண்பாட்டுக்குரிய பௌத்த தொல்லியல் களம் ஆகும். இந்தியத் துணைக்கண்டத்தின் இப்பகுதியில் புத்த மதம் செழிப்புற்றிருந்த காலத்தில், கிபி முதலாம் நூற்றாண்டு முதல் ஐந்தாம் நூற்றாண்டு வரை சமால் கார்கி, பௌத்த விகாரையாக இருந்தது. இங்கே ஒரு அழகிய துறவி மடமும், முதன்மைத் தாதுகோபமும் அதைச் சூழச் சிறிய சைத்தியங்களும் நெருக்கமாக அமைந்திருந்தன.[1]

Remove ads
கண்டுபிடிப்பு
சமால் கார்கியின் அழிபாடுகள் 1848ம் ஆண்டில், பிரித்தானியத் தொல்லியலாளரான அலெக்சாண்டர் கன்னிங்காம் என்பவரால் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. தாது கோபுரம், கர்னல் லும்சுடன் என்பவரால் வெளிப்படுத்தப்பட்டது. ஆனாலும் அக்காலத்தில் பெறுமதியான எதுவும் கிடைக்கவில்லை. 1871ல் இக்களம் லெப்டினன்ட் குரொம்டன் என்பவரால் அகழ்வாய்வு செய்யப்பட்டபோது, பெருந்தொகையான புத்தர் சிலைகள் கிடைத்தன. இவை இப்போது பிரித்தானிய அருங்காட்சியகத்திலும்,[2] கொல்கத்தாவில் உள்ள அருங்காட்சியகத்திலும் உள்ளன. இக்களத்தில் கரோசுட்டி மொழிக் கல்வெட்டு ஒன்றும் கிடைத்தது. இது இப்போது பெசாவர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
Remove ads
சிதிலமடைந்த பௌத்தச் சின்னங்கள்
- கிபி 300 - 500க்கும் இடைப்பட்ட காலத்திய கௌதம புத்தர் சிற்பம், ஆசியன் கலை அருங்காட்சியகம், சான்பிரான்சிஸ்கோ
- ஜமால் கார்கி பௌத்தத் தொல்லியல் களத்திற்கு செல்லும் பாதை
- எஞ்சிய பௌத்த சிதிலங்களின் பக்கவாட்டுப் பார்வை
- முதன்மைத் தூபி
- விகாரை மற்றும் குளம்
- ஜமால் கார்கி பௌத்த நினைவுச்சின்னங்களின் சிதிலங்கள்
- தூபிகளின் தொகுதி
- ஜமால் கார்கி பௌத்த சிதிலங்கள்
எஞ்சிய பௌத்த சிற்பங்கள்
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads