தங்கராசு நடராசன்

இந்தியத் துடுப்பாட்ட வீரர் From Wikipedia, the free encyclopedia

தங்கராசு நடராசன்
Remove ads

த. நடராஜன் (T. Natarajan, பிறப்பு: 04 ஏப்ரல் 1991) என்பவர் ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் 2020 திசம்பரில், இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக சர்வதேச அளவில் அறிமுகமானார். இவர் 2018 இந்தியன் பிரீமியர் லீக் சீசனில் இருந்து, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காகவும் மற்றும் தமிழக அணிக்காகவும் விளையாடி வருகிறார். இவர் ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.[2] இந்தியாவின் 2020–21 ஆத்திரேலியா சுற்றுப்பயணத்தில் விளையாடும்போது, ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்று வித போட்டிகளிலும் சர்வதேச அளவில் அறிமுகமான முதல் இந்தியத் துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.[3]

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...
Remove ads

வாழ்க்கை

நடராஜன் தமிழ்நாட்டின், சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை தங்கராஜ் ஒரு நெசவுத் தொழிலாளி, தாய் சாந்தா சாலையோரக் கோழிக் கடை நடத்துபவர். நடராஜன் 12 ஆம் வகுப்பு வரை சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் விளையாட்டு ஒதுக்கீட்டில் சேலம், ஏ. வி. எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக மேலாண்மை இளமாணி படித்து முடித்து, அதே கல்லூரியில் முதுகலை வணிக மேலாண்மை பட்ட மேற்படிப்பு படித்தார்.

Remove ads

விளையாட்டு

மாவட்ட அளவிலான துடுப்பாட்டப் போட்டியில் விளையாட ஆரம்பித்த பிறகு நடராஜன், 2015-16 இல் பெங்கால் அணிக்கு எதிராக தமிழ்நாடு அணிக்கு முதல்முறையாக அறிமுகமானார். ஆனால் இவரது பந்துவீச்சு த்ரோ என்பதாக சந்தேகம் எழ இவர் பந்து வீச்சு பாணியை மாற்றி மீண்டும் முதல்தர துடுப்பாட்டத்துக்குள் நுழைந்தார். டி.என்.பி.எல். தொடரிலும், ரஞ்சி கோப்பையிலும் சாதனை புரிந்தது, அதனால் ஐபிஎல் மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியானது, இவரை 2017 ஆம் ஆண்டு ரூ.3 கோடிக்கு ஏலம் எடுத்தது.[4][5] இவர் தமிழ்நாடு ரஞ்சி கோப்பை போட்டியில் 2016\17 விளையாடி உள்ளார். வங்காள அணிக்கு எதிராக 2015ஆம் ஆண்டு ஈடன் கார்டனில் முதன்முறையாக முதல் தர போட்டிகளில் ஆடினார்.[6] 2018 ஆம் ஆண்டிலிருந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது துல்லியமாக யார்க்கர் பந்து வீசி வருகிறார்.

அக்டோபர் 26, 2020 அன்று, இந்தியத் துடுப்பாட்ட அணி, ஆஸ்திரேலியா துடுப்பாட்ட அணியுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது, இதற்கு நான்கு கூடுதல் பந்து வீச்சாளர்களில் ஒருவராக நடராஜனும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7] பிறகு நவம்பர் 9, 2020 அன்று, பிசிசிஐ வெளியிட்ட இருபது20 துடுப்பாட்ட அணி வீரர்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்த வருண் சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவரை நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக சர்வதேச இருபது - 20 அணியில் நடராஜன் சேர்க்கப்பட்டார்.[8]

முதல் ஒருநாள் சர்வதேச (ஒருநாள்) போட்டியின் முன்னதாக, முதுகுவலியால் அவதிப்பட்டு வந்த நவ்தீப் சைனிக்கு மாற்று வீரராக இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.[9][10] திசம்பர் 02, 2020 ஆம் தேதி நடந்த ஆத்திரேலியாவுக்கு எதிராக நடந்த மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமான இவர், அந்த போட்டியில் மார்னஸ் லபுசேனை ஆட்டமிழக்கச் செய்து, தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டி விக்கெட்டை எடுத்தார்.[11] இப்போட்டியில் இவர் இரண்டு விக்கெட்டுகளை பெற்றார்.

பின்னர் திசம்பர் 04, 2020இல் தான் பங்கேற்ற முதல் சர்வதேச இ-20 அறிமுக போட்டியில் நான்கு ஓவர்கள் வீசி, 30 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து, 3 விக்கெட் வீழ்த்தி, இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.[12]

பின்னர் 30 திசம்பர், 2020 அன்று, ஆத்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது தேர்வு போட்டிக்கு முன்னதாக நடராஜன் இந்தியாவின், தேர்வுத் துடுப்பாட்ட அணியில் சேர்க்கப்பட்டார்.[13] பின்னர் சனவரி 15, 2020 அன்று ஆத்திரேலியாவுக்கு எதிராக தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் அறிமுகமானார், அந்த போட்டியில் மேத்தியு வேடை ஆட்டமிழக்கச் செய்து தனது முதல் சர்வதேச தேர்வுத் துடுப்பாட்ட விக்கெட்டை எடுத்தார்.[14][15] ஆஸ்திரேலிய தொடரின் போது, தனது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் 2021 தொடரில் இருந்து பாதியில் நடராஜன் விலகினார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஐதராபாத் அணி நிர்வாகம் வெளியிட்டது. பின்னர் ஏப்ரல் 27, 2021இல் அவருக்கு முழங்காலில் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads