வருண் சக்கரவர்த்தி
இந்தியத் துடுப்பாட்டக்காரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வருண் சக்கரவர்த்தி (Varun Chakravarthy) என்பவர் இந்தியத் துடுப்பாட்ட வீரர்.[1][2] இவர் பட்டியல் அ போட்டிகளில் தமிழ்நாடு அணி சார்பாக விளையாடினார்.[3] 2018-19 ஆம் ஆண்டிற்கான அசாரே துடுப்பாட்ட தொடரில் 9 போட்டியில் 22 இலக்குகளை கைப்பற்றினார்.[4] 2018-2019 ஆம் ஆண்டிற்கான அசாரே துடுப்பாட்டத் தொடரில் நவம்பர் 12, 2018 இல் நடைபெற்ற போட்டியில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.[5]
Remove ads
ஆரம்பகால வாழ்க்கை
இவர், ஆகஸ்ட் 29, 1691 இல் கருநாடகம், பீதரில் வினோத் சக்ரவர்த்தி- மாலினி இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தை இந்தியத் தொலைத்தொடர்புப் பணியாளர் ஆவார். இவரது தந்தை தமிழர்- மலையாளி ஆவார்.[6] இவரது தாய்கன்னடராவார்.[7] இவர் சென்னையில் உள்ள அடையாறில் வளர்ந்தார்.[6]
உள்ளூர்ப் போட்டிகள்
2018 தமிழ்நாடு பிரீமியர் லீக்கில 9 இலக்குகளை வீழ்த்தி மதுரை பாந்தர்சு முதல் முறையாக கோப்பையினை வெல்ல உதவினார். [8] செப்டம்பர் 20, 2018 இல் 2018–19 விஜய் அசாரே கோப்பையில் தமிழ்நாடு அணிக்காக பட்டியல் அ துடுப்பாட்ட அணியில் அறிமுகமானார். [9] 9 போட்டிகளில் 22 இலக்குகளைக் கைப்பற்றி அதிக இலக்குகளை வீழ்த்திய தமிழ்நாடு அணி வீர்ரர்கள் பட்டியலில் முதலிடம் பெற்றார். [10] நவம்பர் 12, 2018 இல் 2018–19 ரஞ்சிக் கோப்பையில் தமிழ்நாட்டிற்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். [11]
Remove ads
இந்தியன் பிரீமியர் லீக்
டிசம்பர், 2018 இல் நடைபெற்ற 2019 இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் இவரை 8.4 கோடி ரூபாய் மதிப்பில் கிங்சு இலெவன் பஞ்சாபு அணி ஏலத்தில் எடுத்தது.[12][13] 2020 ஆம் ஆண்டிற்கான ஏலத்தில் இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டார்.[14] அக்டோபர் 24, 2020 இல் அபுதாபில் நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக இவர் ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார்.[15]
சர்வதேச போட்டிகள்
அக்டோபர் 26,2020 இல் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டித் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.[16] காயம் காரணமாக 2020 நவம்பர் 20 இல் அணியில் இருந்து விலகினார். இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணத்திற்கான ப இ20 அணியில் இடம் பெற்றார்.[17]
சூன் 2021 இல் இந்தியத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணத்திற்கான ஒருநாள் மற்றும் ப இ20 தொடரில் இடம் பெற்றார்.[18] இலங்கை அணிக்கு எதிராக 2021 சூலை 21 இல் பனாட்டு இருபது20 போட்டியில் அறிமுகமாகி [19] தசுன் சானக்கவின் இலக்கினைக் கைப்பற்றினார்.[20] செப்டம்பர் 2021 இல் 2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணத் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றார்.[21] மூன்று போட்டிகளில் விளையாடினாலும் இலக்குகளைக் கைப்பற்றாவில்லை.[22]
Remove ads
சான்றுகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads