தட்சசீலப் பல்கலைக் கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தட்சசீலப் பல்கலைக் கழகம் (Takshashila University) கிமு ஆறாம் நூற்றாண்டிற்கு, கிமு ஏழாம் நூற்றாண்டிற்கும் இடையே, தற்கால பாகிஸ்தான் நாட்டின் பண்டைய காந்தார நாட்டின் தலைநகரான தக்சசீலா நகரத்தில் நிறுவப்பட்ட உலகின் முதல் பல்கலைக்கழகம் ஆகும். அர்த்தசாஸ்திரம் எனும் அரசியல் நூல் எழுதிய சாணக்கியர் இப்பல்கலைக்கழத்தின் ஆசிரியாக இருந்தவர். சந்திரகுப்த மௌரியர், இப்பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சாணக்கியரிடம் அரசியல் மற்றும் போர்க்கலை பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பதினாறு வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் இப்பல்கழகத்தில், வேதங்கள், ஆயுர்வேத மருத்துவம், அரசியல், தத்துவம், சட்டம், தருக்கம், போர்க் கலை, கணிதம், வானவியல், உள்ளிட்ட ஆயகலைகள் பதினாறும் பயிற்றுவிக்கப்பட்டது.[1][2]
பரத கண்டம் முழுவதிலிருந்தும், மாணவர்கள் குறிப்பாக சத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் அந்தணர்கள் தக்சசீலா பல்கலைக் கழகத்தில் குருகுலம் முறையில் கல்வி பயின்றனர். இப்பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு கட்டணமின்றி கல்வி பயிலப்பட்டது.
அசோகர் காலத்தில் தக்சசீலத்தில் பல பௌத்த விகாரைகள் நிறுவப்பட்டு, விரிவாக்கம் அடைந்த இப்பலைக்கழகத்தில் பௌத்த சாத்திரங்களும் பயிற்றுவிக்கப்பட்டது.
நடு ஆசியாவின் நாடோடி ஹெப்தலைட்டுகள் தக்சசீலத்திலத்தின் பல பௌத்த விகாரைகளையும், கட்டிடங்களையும் இடித்தனர்.
Remove ads
அமைவிடம்
தற்கால பாகிஸ்தான் நாட்டின் ராவல்பிண்டி நகரத்திலிருந்து 20 மைல் தொலைவில் பண்டைய தக்சசீலத்தில் இப்பல்கலைக்கழகம் அமைந்திருந்தது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads