தமிழர் மெய்யியல்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தமிழ்ச் சூழலில், மரபில், தமிழ் மொழியில் முதன்மையாக உருவான மெய்யியல் தமிழர் மெய்யியல் அல்லது தமிழ் மெய்யியல் ஆகும். இந்த மெய்யியல் தமிழர் எத்தகைய உலகப் பார்வையுடன் அல்லது அணுகுமுறையுடன் உலகை எதிர்நோக்கினார்கள், விளங்கிக் கொண்டார்கள் என்று அறிய உதவுகிறது. தமிழர் மெய்யியலை அறநூற்களில், இலக்கியங்களில் மட்டுமல்லாமல் வாழ்வியலையும் வரலாற்றையும் நோக்கியே புரிந்து கொள்ளமுடியும். யாரும் எக்காலத்துக்கும் ஒரே மெய்யியலை எடுத்தாள்வதில்லை. சூழல் மாறும்பொழுதும், அறிவியல் வளர்ச்சிக்கேற்ற மாதிரியும் மெய்யியல் மாறும். அப்படியே தமிழர் மெய்யியலும் மருவி வந்திருக்கிறது.

Remove ads

அக்கறைகள்

முறையியல்

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

திருக்குறள் - 423

வரலாறு

திணைக் கோட்பாடு

முக்கிய கட்டுரைகள்: திணை விளக்கம், தமிழர் நிலத்திணைகள்

சமய மெய்யியல்கள்

  • இயற்கை வழிபாடு
  • சிவன், முருகன், மால், கொற்றவை, கண்ணன்
  • மறை (வேதம்)
  • சமண மெய்யியல்கள் - (தாபதம், ஐம்பூதக்கொள்கை (சாவகம், உலகாயதம்), ஆசீவகம், அருகம் (ஜைனம்), பௌத்தம்)
  • சைவ சிந்தாந்தம்
  • இசுலாம்
  • கிறித்துவம்

நாட்டார் மரபு

  • குலதெய்வம்
  • குல காவல் தெய்வம்
  • காவல் தெய்வம்
  • விருப்ப தெய்வம்

திராவிடக் கருத்தியல்

திராவிட இயக்கத்தின் தோற்றம் 1891ஆம் ஆண்டளவில் அயோத்தி தாசர் என்பவரால் தொடங்கப்பட்ட திராவிட மகாஜன சபா என்னும் இயக்கத்தில் இருந்து தொடங்குகிறது.[1][2][3] சுயமரியாதை இயக்கம் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் மனித உரிமைகளை நிலைநிறுத்தப் போராடியது. திராவிட இயக்கம் தற்கால தமிழ்நாட்டு சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியும், தொடர்ந்து செல்வாக்கு செலுத்தியும் வருகிறது. இன்றைய தமிழ்நாட்டின் எழுச்சிக்கு திராவிட கருத்தியல் ஏதுவாக்கியது எனலாம்.[4]

திராவிட கருத்தியல் பகுத்தறிவு, சமுக நீதி, சமத்துவம், சமூக முன்னேற்றம், பெண்ணுரிமை, நாத்திகம், தமிழ் தேசியம், பொருளாதார மேம்பாடு ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. அதிகாரப் பகிர்வு (சுயநிர்ணய அல்லது விரிவான சுதந்திரங்களை உடைய மாநிலங்கள்), இட ஒதிக்கீடு, நிலச்சீர்திருத்தம், அனைவருக்கும் இலவசக் கல்வி, தொழிற்துறை மேம்பாடு ஆகியவற்றை திராவிட இயக்கம் முன்னெடுத்தது.

தலித் இயக்கம்

தாக்கங்களும் மாற்றங்களும்

தமிழர் மற்றைய சமூகங்களோடு சந்தித்துக்கொண்ட போது தமிழரின் மெய்யியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. பிற திராவிட, வட இந்திய, இஸ்லாமிய, ஐரோப்பியத் தொடர்புகள் தமிழர் மெய்யியலை மாற்றியமைத்திருக்கின்றன. தமிழர் இடப்பெயர்வுகளும் தமிழரை ஆபிரிக்கர், மாலாயர், அமெரிக்க முதற்குடியினர் எனப் பலரோடு அறிமுகம் செய்து தமிழர் மெய்யிலை பாதித்து இருக்கின்றன.

ஆய்வு

  • அருணன். தமிழரின் தத்துவ மரபு. சென்னை: வசந்தம் வெளியீட்டகம்.
  • தேவ.பேரின்பன். " தமிழர் தத்துவம்". சென்னை : நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் பி.லிட்.
  • அருண்குமர் மு.சு. " தமிழ் இலக்கியங்களில் பூதவாதச் சிந்தனை மரபு" . பெரியார் பல்கலைக்கழகம் : ஆய்வியல் நிறைஞர் ஆய்வேடு (2009).

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads