தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்
தமிழ்நாட்டின் சென்னையிலுள்ள ஒரு பல்கலைக்கழகம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (Tamil Nadu Veterinary and Animal Sciences University - TANUVAS) என்பது தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1989 இல் இது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து பிரிந்து தனிப்பல்கலைக்கழகமாக உருவாக்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகம் சென்னை மாதவரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகமானது முதலில் சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி, கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல், மீன்வளக் கல்லூரி மற்றும் ஆய்வு மையம், தூத்துக்குடி ஆகியன இணைந்து துவக்கப்பட்டது.
பின்னர் தூத்துக்குடியிலுள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆய்வு மையம் ஆனது தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் உடன் 2012ல் இணைக்கப்பட்டது.
Remove ads
வரலாறு
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், 'தனுவாஸ்' எனும் ஆங்கிலச்சுருக்கத்தில் பிரபலமாக அறியப்படுகிறது. இப் பல்கலைக்கழகம் 20.09.1989 அன்று தமிழ்நாடு மாநில அரசு சட்டம் 42, 1989 மூலம் நாட்டின் முதல் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகமாக மலர்ந்தது. கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு அறிவியல் துறையில் டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பை வழங்குவதற்காக சென்னை-சைதாப்பேட்டையில் ஒரு வேளாண் பள்ளியாகத் (1876) தொடங்கி, பின் நாளில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியாக (1903) மலர்ந்து பின் நாமக்கல்லில் தொடங்கப்பட்ட கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தினையும் (1985) உள்ளடக்கி தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் 20.09.1989 அன்று தென் கிழக்கு ஆசியாவின் முதல் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகமாக தொடங்கப்பட்டது.
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி 01.10.1903 அன்று சென்னை-வேப்பேரியில் டோபின் ஹாலில் செயல்படத் தொடங்கியபோது கல்லூரி அந்தஸ்தைப் பெற்றது மற்றும் ஜிஎம்விசி (மெட்ராஸ் கால்நடை மருத்துவக் கல்லூரியின் பட்டதாரி) என்ற மூன்றாண்டு டிப்ளமோ படிப்பினில் ஆண்டிற்கு 20 மாணவர்கள் என நடாத்தப்பட்டது. 1950 களின் நடுப்பகுதி வரை முந்தைய ஒருங்கிணைந்த மதராஸ் மாநிலத்தில் உள்ள ஒரே கால்நடை மருத்துவக் கல்லூரி இதுவாகும்.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல், மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தூத்துக்குடி (தற்போது தமிழ்நாடு டாக்டர். ஜே. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ளது) மற்றும் பிற பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்கள், ஆராய்ச்சி பண்ணைகள், விவசாயிகள் பயிற்சி மையங்கள் மற்றும் நோயறிதல் ஆய்வகங்கள் ஆகியன ஆரம்பத்தில் இப் பல்கலைக்களத்தின் அங்கங்களாயின. பின்னர் கொடுவள்ளியில் உணவு மற்றும் பால் தொழில்நுட்பக் கல்லூரியையும், திருநெல்வேலி மற்றும் ஒரத்தநாட்டில் மேலும் இரண்டு கால்நடை மருத்துவக் கல்லூரிகளையும், ஓசூரில் கோழி உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியையும், பல பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்களையும் (பெரும்பாலான மாவட்டங்களில் அமைந்துள்ளது) நிறுவியது. மதுரையில் ஒரு நோய் கண்டறியும் ஆய்வகம், கூடுதலாக, 2020 ஆம் ஆண்டில் சேலம், தேனி மற்றும் உடுமலைப்பேட்டையில் மேலும் மூன்று கால்நடை மருத்துவக் கல்லூரிகள் ஆகியன நிறுவப்பட்டுள்ளன.
தற்போது, இப் பல்கலைக்கழத்தின் கீழ் மொத்தம் ஏழு கால்நடை மருத்துவக் கல்லூரிகள், ஒரு உணவு மற்றும் பால் தொழில்நுட்பக் கல்லூரி, ஒரு கோழி உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரி, 10 ஆராய்ச்சிப் பண்ணைகள், 15 ஆராய்ச்சி ஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையங்கள், 20 கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்கள், மூன்று விவசாயிகள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்கள், மற்றும் நான்கு வேளாண் அறிவியல் மையங்கள் ஆகியன அடங்கியுள்ளன.
இப் பல்கலைக்கழகம், இளங்கலை படிப்புகளாக, பி.வி.எஸ்.சி & ஏ.எச்., பி.டெக். (உணவு தொழில்நுட்பம்), பி.டெக். (பால் தொழில்நுட்பம்) மற்றும் பி.டெக். (கோழி வளர்ப்பு தொழில்நுட்பம்) ஆகிய நான்கு பட்டங்களை வழங்குகிறது. தவிர, முதுகலை படிப்புகளாக, எம்.வி.எஸ்சி. 22 பிரிவுகளிலும் , எம்.டெக். ஆறு பிரிவுகளிலும், எம்.எஸ்சி. பயோ இன்ஃபர்மேடிக்ஸ், எம்.எஸ்சி. பயோஸ்டாடிஸ்டிக்ஸ், மற்றும் எம்.பி.ஏ. உணவு மற்றும் கால்நடை வணிக மேலாண்மை, மேலும், முனைவர் (பிஎச்.டி) கால்நடை மற்றும் விலங்கு அறிவியலின் 20 துறைகளிலும், முனைவர் (பிஎச்.டி) உணவுத் தொழில்நுட்பத்திலும், ஐந்து முதுகலை பட்டயப் படிப்புகள் மற்றும் தொலைதூர முறையில் பல முதுகலை டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளும் வழங்குகின்றது.
Remove ads
பல்கலைகழக உறுப்புக் கல்லூரிகள்
பின்வரும் கல்லூரிகள் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாகும்[2]
Remove ads
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads