தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்கள், 2016-21

From Wikipedia, the free encyclopedia

Remove ads

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் 2016

திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ். எம். சீனிவேல் 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றார் ஆனால் பதவி ஏற்கும் முன்பு மே 25 ஆம் தேதி மரணம் அடைந்தார் இதை அடுத்து திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் 2016 நவம்பர் 19 அன்று நடந்தது. ஆளும்கட்சியான அதிமுக வேட்பாளர் ஏ. கே. போஸ் வெற்றி பெற்றார்.[1]

டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல், 2017

இத்தொகுதியின் உறுப்பினரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா 2016 திசம்பர் 5 அன்று காலமானதையடுத்து இத்தொகுதிக்கு தேர்தல் 2017 ஏப்ரல் 12 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது, ஆனாலும், வாக்காளர்களுக்கு பணம், மற்றும் பொருட்கள் கொடுக்கப்பட்டதாக வந்த முறைப்பாடுகளை அடுத்து தேர்தலை நிறுத்துவதாக ஏப்ரல் 9 அன்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

2017ஆம் ஆண்டு திசம்பர் 21 ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருதுகணேஷ், பாரதிய ஜனதா சார்பில் கரு.நாகராஜன் மற்றும் சுயேட்சையாக டி. டி. வி. தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் உள்ளிட்ட 59 பேர் போட்டியிட்டனர். இத்தேர்தலில் 77.5 விழுக்காடு வாக்காளர்கள் தங்கள் வாக்கினைப் பதிவு செய்தனர். டிசம்பர் 24 ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை 19 சுற்றுகளாக நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில், சுயேச்சை வேட்பாளர் டி. டி. வி. தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 24,581 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றார்.[2]

Remove ads

திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், 2019

திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் சனவரி 28, 2019 இல் நடைபெற்று, வாக்கு எண்ணிக்கையானது சனவரி 31 அன்று நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.[3] பின் கஜா புயல் நிவாராணம் வழங்க வேண்டி இந்தத் தேர்தலை ரத்து செய்வதாக சனவரி 7 , 2019 இல் தேர்தல் ஆணையம் அறிவித்தது.[4]

பின்னணி

திருவாரூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி ஆகத்து 7 இல் மரணமடைந்தார். [5] எனவே அந்தத் தொகுதிக்கு சனவரி 31 இல் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தேர்தல் அட்டவணை

மேலதிகத் தகவல்கள் தேதி, நிகழ்வு ...

முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள்

மேலதிகத் தகவல்கள் வேட்பாளர், கட்சி ...

ரத்து

பின் கஜா புயல் நிவாராணம் வழங்க வேண்டி இந்தத் தேர்தலை ரத்து செய்வதாக சனவரி 7 , 2019 இல் தேர்தல் ஆணையம் அறிவித்தது.[8]

Remove ads

சட்டமன்ற இடைத்தேர்தல்கள் 2019

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் ஆண்டிபட்டி, அரூர், மானாமதுரை, பெரியகுளம், குடியாத்தம், பாப்பிரெட்டிபட்டி, அரவக்குறிச்சி, பரமக்குடி, பெரம்பூர், சோளிங்கர், திருப்போரூர், பூந்தமல்லி, தஞ்சாவூர், நிலக்கோட்டை, ஆம்பூர், சாத்தூர், ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் ஆகிய 18 தொகுதிக்கு 2021 ஏப்ரல் 18 அன்று நடத்துவதாகவும் சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளுக்கு மக்களவையின் ஏழாம் கட்டத்துடன் சேர்த்து மே 19 அன்று தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி தேர்தல் நடந்தது.

22 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 23 மே 2019 நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிமுக 9 தொகுதிகளிலும்; திமுக 13 தொகுதிகளிலும் வென்றதாக அறிவிக்கப்பட்டது. [9]

மேலதிகத் தகவல்கள் திமுக+, இடங்கள் ...

தொகுதியும் அதில் கட்சிகள் பெற்ற வாக்குகளும்.

மேலதிகத் தகவல்கள் தொகுதி, அதிமுக ...
  • விளாத்திகுளம் தொகுதியில் அதிமுக அதிருப்தி வேட்பாளர் மார்கண்டேயன் 27,456 வாக்குகள் பெற்றார்.
  • போஇ = போட்டியிடவில்லை
Remove ads

நாக்குநேரி, விக்ரவாண்டி இடைத்தேர்தல்

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த எச். வசந்தகுமார் 2019 ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக ஆனதையடுத்து. தன் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார். அதேபோல விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான கே. ராதாமணி இறந்ததையடுத்து இந்த இரு தொகுதிகளுக்கும் 2019 அக்டோபர் 21 அன்று இடைத் தேர்தல் நடந்தது.

விக்கிரவாண்டி தொகுதியில்யில் நட்ந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் 1,13,766 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். இது பதிவான மொத்த வாக்குகளில் 60.29 விழுக்காடு வாக்குகளாகும். இவருக்கு அடுத்த இடத்தில் திமுகவின் புகழேந்தி, 68,828 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார். இவர் பதிவான மொத்த வாக்குகளில் 36.48 சதவீதம் பெற்றார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 44,924 ஆகும்.

அதேபோல நாங்குநேரி தொகுதியில் நட்ந்த இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 95,377 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இது பதிவான மொத்த வாக்குகளில் 55.88 விழுக்காடு ஆகும். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மனோகரன் 61,932 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தை பெற்றார். அவர் தேரதலில் பதிவான வாக்குகளில் 36.29 விழுக்காடு வாக்குகளை பெற்றார். இரண்டு பேருக்குமிடையேயான வாக்கு வித்தியாசம் 33,445 ஆகும்.[10]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads